``பிக்பாஸ்ல கலந்துக்குற விஜயலட்சுமி பற்றி மூணு ரகசியம்!" - ஃபெரோஸ்



Sponsored



பிக் பாஸ் இரண்டாவது சீசனில் 66 நாள்கள் முடிந்திருக்கும் நிலையில், புது போட்டியாளராக நடிகை விஜயலட்சுமி பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார். இயக்குநர் அகத்தியனின் மகளான இவர், `சென்னை 28’ படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு, `அஞ்சாதே’, `அதே நேரம் அதே இடம்’, `கற்றது களவு’, `வனயுத்தம்’, `வெண்ணிலா வீடு’, `ஆடாம ஜெயிச்சோமடா', `சென்னை 28 - 2' எனப் பல படங்களில் நடித்திருக்கும் விஜி, சன் டிவியில் ஒளிப்பரப்பாகிவரும், `நாயகி' சீரியலில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நூறு எபிசோடுகளுக்கு மேல் நடித்திருக்கிறார். இவர் தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் புது போட்டியாளராக நுழைந்திருக்கும் ப்ரோமோவைப் பார்த்த பிறகு, விஜியின் கணவரும் `பண்டிகை' படத்தின் இயக்குநருமான ஃபெரோஸிடம் பேசினேன்.

`விஜியைப் பற்றி மூணு ரகசியம் சொல்றேன்’ என்றபடி பேச ஆரம்பித்தார். ``என் பையன் நிலனுக்கு ஒரு வயசுதான் ஆகுது. அவனைப் பார்த்துக்க விஜியோட அம்மா அண்டு சிஸ்டர்ஸ் இருக்காங்கங்கிற நம்பிக்கையிலதான், விஜி பிக் பாஸ் போட்டியில கலந்துக்கலாம்னு முடிவு எடுத்தாங்க. `நாயகி’ சீரியலிலிருந்து வெளியில வந்ததுக்கு அப்புறம் பிக் பாஸில் கலந்துக்கணும்னு, இது அவசர அவசரமா எடுத்த முடிவு கிடையாது. ஏன்னா, பிக் பாஸ் முதல் சீசனுக்கே விஜியைக் கூப்பிட்டாங்க. இதுதான் முதல் ரகசியம். ரெண்டாவது சீசன் ஆரம்பிக்கும் போதும் பேசுனாங்க. ஆனால், விஜி போகலை. மறுபடியும் விஜய் டிவியில இருந்து பேசுனாங்க, `சரி, இதுல என்னதான் இருக்குனு பார்த்திடலாம்’னு இப்போ போயிருக்காங்க. 

Sponsored


விஜியைப் பொறுத்தவரைக்கும் இது ஒரு சேலன்ஞ்தான். ஏன்னா, நான், எங்க பையன், அப்பா - அம்மானு ஃபேமிலியோடு இருக்கிறதைத்தான் விஜி ஆசைப்படுவாங்க; நாங்க இல்லாமலும் அவங்களால இருக்க முடியாது. பிக் பாஸ் சீசன் 2 முடியுறதுக்கு இன்னும் 33 நாள்கள்தான் இருக்கு. இந்த 30 நாள்ல நாங்க இல்லாம விஜியால இருக்க முடியாமானு பார்க்குறதுக்காக விஜி இப்போ பிக் பாஸ் வீட்டுக்குள்ள போயிருக்காங்க. நான் முதலில் வேணாம்னுதான் சொன்னேன். ஆனால், விஜி இந்த முடிவில் ரொம்ப உறுதியாக இருந்ததால், ஓகே சொல்லிட்டேன்.

Sponsored


பிக் பாஸ் முதல் சீசன்ல எந்த எபிசோடையும் மிஸ் பண்ணாம விஜி பார்த்தாங்க. ஆனால், இந்த சீசனில் ஒரு எபிசோடுகூட பார்க்கவேயில்லை. இது ரெண்டாவது ரகசியம். அப்போ அப்போ ப்ரோமோ மட்டும் பார்த்திருக்காங்க. பிக் பாஸ் வீட்டுக்குள்ள போகப்போறோம்னு தெரிஞ்சதுக்கு அப்புறமும், விஜி ஷோவைப் பார்க்கலை. இது விஜிக்கு ஒரு அட்வாண்டேஜ்தான். `வீட்டுக்குள்ள இருக்குறவங்க என்ன மாதிரி கேரக்டர்னு ஷோவைப் பார்த்து நான் தெரிஞ்சுக்க விரும்பலை. நேராகப் போய் அவங்ககூடப் பழகி தெரிஞ்சுக்கிறேன்’னு சொல்லிட்டுப் போயிருக்காங்க. ஆனால், பிக் பாஸ் சீசன் 2 தொடங்குனதுல இருந்து, நிறைய சண்டைகள் நடக்குதுனு கேள்விப்பட்டோம். விஜி ரொம்ப தைரியமான பொண்ணு. அவங்ககிட்ட யாராவது கோபத்தை காமிச்சாலும், பாசத்தை காமிச்சாலும் அதை டபுள் மடங்கா திருப்பிக் கொடுக்கக்கூடிய ஆள். அதுனால, உள்ள நடக்குற சண்டைகளை அசால்ட்டா டீல் பண்ணிடுவாங்க. வீட்டுக்குள்ள இருக்குற நெகட்டிவிட்டியை விஜியால குறைக்க முடியும்னு நினைக்கிறேன்.

நாயகி சீரியல் மூலமா விஜிக்கு  நிறைய ஃபேன்ஸ் கிரியேட் ஆகியிருக்காங்க. அவங்க எல்லாரும் தன்னை எப்படிப்பட்ட பொண்ணா நினைச்சு வெச்சிருக்காங்கனு பார்க்கணும்னு விஜி ஆசைப்பட்டாங்க. விஜி பிக் பாஸ் வீட்டுக்குள்ள போனதுக்கு இதுவும் ஒரு காரணம்தான். பிக் பாஸ் வீட்டுக்குப் போகுறதுக்கு முன்னாடி, `பையனை நல்லா பார்த்துக்கோ, ரொம்ப ஊரு சுத்தாத. நான் கண்டிப்பா வின் பண்ணிட்டு வருவேன்’னு சொன்னாங்க.

இந்த 30 நாள்ல என்னை, எங்க பையனை மிஸ் பண்றதைத் தவிர, வீட்டுச் சாப்பாட்டை ரொம்ப மிஸ் பண்ணுவாங்க. சோஷியல் மீடியாவில் ரொம்ப ஆக்ட்டிவா இருப்பாங்க. கண்டிப்பா அதையும் மிஸ் பண்ணுவாங்க. ரொம்ப நல்லா கவிதை எழுதுவாங்க. வீட்டுக்குள்ள பேப்பர், பென் இருக்காது. ஸோ, அதையும் மிஸ் பண்ணுவாங்க. முக்கியமா தூக்கத்தை மிஸ் பண்ணுவாங்க. இதுதான் மூணாவது ரகசியம். பகலில் கேப் கிடைச்சா போய் தூங்கிடுவாங்க. பிக் பாஸ் வீட்டுக்குள்ள பகல்ல தூங்கக் கூடாது. அதுனால அதையும் மிஸ் பண்ணுவாங்க. நாங்களும் விஜியை ரொம்ப மிஸ் பண்ணுவோம்’’ என்றார் ஃபெரோஸ்.



Trending Articles

Sponsored