`மனைவி மேல பாசம்; ஆனா ஓவர்நைட்ல 2 வது கல்யாணம்!’ `தேவதையைக் கண்டேனி’லிருந்து ஸ்ரீ வெளியேறியது ஏன்?



Sponsored



`ஜீ தமிழ் சேனலில் பகல் நேரத்தில் ஒளிபரப்பாகிற தொடர் தேவதையைக் கண்டேன். இதில் ஶ்ரீ ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்த நிலையில், திடீரென அவருக்குப் பதில் இப்போது ஈஸ்வரை ஹீரோவாக்கி இருக்கிறார்கள்.

`தலையணைப் பூக்கள்', `தேவதையைக் கண்டேன்' என ஒரே நேரத்தில் இரண்டு தொடர்களில் அதுவும் ஒரே சேனலில் நடித்துக் கொண்டிருந்த போதுதான் மூன்றாவதாக `யாரடி நீ மோகினி' தொடரிலும் கமிட் ஆனார் ஶ்ரீ. (யாரடி நீ மோகினி' தொடரிலிருந்து சஞ்சீவ் வெளியேற, அந்த இடத்துக்கு வந்தார்) `மூணு சீரியலா' என்று யார் கண் பட்டதோ தெரியவில்லை, அடுத்த சில நாள்களில் `தலையணைப் பூக்கள்' தொடர் முடிவடைந்துவிட்டது. இப்போது `தேவதையைக் கண்டேன்' தொடரிலிருந்தும் வெளியேறியிருக்கிறார்.

Sponsored


இந்த ஆள் மாற்றத்துக்குப் பின்னால் வேறு சில காரணங்களும் சீரியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுவதைக் கேட்க முடிந்தது. என்ன அந்தக் காரணங்கள் என விசாரணையில் இறங்கினோம்.

Sponsored


``ஸ்ரீ, `வாசு'ங்கிற கேரக்டர்ல நடிச்சிட்டிருந்தார். இந்தக் கதாபாத்திரம் ஒரு முரடனாக் காட்டப்பட்டது. அதேநேரம் மனைவி மேல அவ்வளவு பாசமுள்ளவரா இருப்பார். ஆரம்ப எபிசோடுகள்லயே இந்த கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைக்க, அதை அப்படியே கொண்டு போனாங்க. இடையில என்ன நடந்ததுனு தெரியலை, அந்த கேரக்டர் கொஞ்சம் கொஞ்சமா மாறத் தொடங்கிச்சு. அதுல ஶ்ரீக்கு உடன்பாடில்லை. `கதையில என்ன மாற்றமும் பண்ணுங்க; கேரக்டரை ஏன் மாத்துறீங்க'ன்னு கேட்டுப் பார்த்தார்.

`பொண்டாட்டி மேல வெறித்தனமா பாசத்துல இருக்கிறவன் ஓவர் நைட்ல ரெண்டாவதா கல்யாணம் பண்ணிக்கிடுறான்'னு சொன்னா என்னங்க அர்த்தம்'னு கேட்டவர், தன்னுடைய கேரக்டரில் அப்படியொரு மாற்றம் நிகழ்வதை அவர் விரும்பாமலேயே இருந்தார். ஆனா, அவர் சொன்னது எதுவும் யார் காதுலயும் விழலை. இதுல கொஞ்ச நாளாகவே வருத்தத்துல இருந்தார்' என்கிறார்கள், இந்த விஷயங்களையெல்லாம் அருகிலிருந்து கவனித்து வந்த சிலர்.

`டயலாக் ரைட்டர் மாறினார் சார். முன்னாடி இருந்தவர் ஒரு ஸ்டைல்ல எழுதினார். புதுசா வந்தவர் அவர் ஏற்கெனவே இருந்த சேனலுக்கு எப்படி எழுதினாரோ அதே ஸ்டைலில் எழுதறார். அதனாலதான் இந்தப் பிரச்னை' என்கிறார்கள் இன்னும் சிலர்.

ஶ்ரீயிடம் பேசினோம்.

`வேற ஒண்ணுமில்லீங்க, `யாரடி நீ மோகினி' முன்னாடி வாரத்துல அஞ்சு நாள் ஒளிபரப்பாகிட்டிருந்திச்சு. இப்ப ஏழு நாளும் ஒளிபரப்பாகுது. அதனால வேலை அதிகமாகிடுச்சு. ரெண்டு தொடரும் ஒரே சேனல்லதான் ஒளிபரப்பாகுது. ஆனாலும் தயாரிப்பாளர்கள் வேறவேற ஆளுங்க இல்லையா. யாராவது ஒருத்தர் என்னால பாதிக்கப்பட்டாலும் அது பாதிப்புதானே. அதனால என்னால ரெண்டு சீரியல்களோட ஷூட்டிங் ஷெட்யூல்கள்ல பிரச்னை வரக் கூடாதுன்னு நினைச்சேன். நான் நினைச்சதை அப்படியே `தேவதையைக் கண்டேன்' தயாரிப்பாளர்கிட்டயும் சேனலுக்கும் சொன்னேன். அவங்களும் புரிஞ்சுக்கிட்டாங்க. அதன் பிறகே வெளியேறினேன். சீரியல்னா ட்விஸ்ட் வேணும்கிறாங்க இல்லையா, இதுவும் ஒரு ட்விஸ்தானே?” எனச் சிரிக்கிறார் ஶ்ரீ.

எப்படியோ, `இவருக்குப் பதில் இவர்'னு ஆள் மாற்றம் நிகழ்ந்துடுச்சு, இனி ஈஸ்வர்தான் வாசு; ஆக வேண்டியதைப் பார்க்கலாம்... அதான் சீரியலைத் தொடர்ந்து பார்க்கலாம்' என்கிறீர்களா, அதுவும் சரிதான். 



Trending Articles

Sponsored