IIFA 2022: சிறந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்; சிறந்த படம் `சர்தார் உதம்'! | Winners Complete list

பிரபாகரன் சண்முகநாதன்

அபுதாபியில் கோலாகலமாக இரண்டு நாள்கள் நடந்த IIFA Rocks 2022 விருதுகள் விழாவைத் தொகுத்து வழங்கியது சல்மான் கான். அந்த விழாவில் யாருக்கு என்னென்ன விருதுகள் கொடுக்கப்பட்டன என்கிற முழுமையான பட்டியல் இதோ.

சிறந்த நடிகர் - விக்கி கௌசல் ('Sardar Udham' படத்திற்கு). மொத்தம் மூன்று விருதுகள் இந்தப் படத்திற்குச் சென்றிருக்கின்றன.

சிறந்த நடிகை - கீர்த்தி சனோன். 'Mimi' படத்தில் நடித்ததற்காக அவருக்கு இந்த விருது.

சிறந்த இயக்குநர் - விஷ்ணுவர்தன். 'Shershaah' படத்தை இயக்கியதற்காக.

சிறந்த படம் - 'Shershaah'. 25 வயதான இந்திய ராணுவ வீரர் விக்ரம் பத்ராவின் தீரமான வாழ்க்கைத் தழுவி எடுக்கப்பட்ட கதை ஷெர்ஷா. ஆகஸ்ட் 15, 2021-ல் படம் வெளியானது.

சிறந்த பாடகி - அஸீஸ் கவுர் (Asees Kaur) 'ஷெர்ஷா' படத்தில் இடம்பெற்றிருந்த 'Raataan Lambiyan' பாடலுக்காக.

சிறந்த பாடகர் - ஜூபின் நாடியல் (Jubin Nautiyal). அதே 'Raataan Lambiyan' பாடலுக்காகத்தான் இவருக்கும் இந்த விருது அளிக்கப்பட்டது.

சிறந்த பாடல் - கவுசர் முனிர் (Kausar Munir) '83' படத்தில் இடம்பெற்ற 'Lehra Do' என்ற பாடலை எழுதியதற்காக இவருக்கு இந்த விருது.

சிறந்த இசையமைப்பு - ஏ.ஆர்.ரஹ்மான் 'Atrangi Re' படத்திற்காகவும், Jasleen Royal, Javed-Mohsin, Vikram Montrose, B Praak, Jaani ஆகியோர் 'ஷெர்ஷா' படத்திற்காகவும் விருதுகள் பெற்றனர்.

சிறந்த அறிமுக நடிகர் - Ahan Shetty. 'RX 100' என்ற தெலுங்கு படத்தின் ரீ-மேக் ஆக உருவாகிய 'Tadap' இந்திப் படத்தில் நடித்ததற்காக.

சிறந்த அறிமுக நடிகை - Sharvari Wagh. 'Bunty Aur Babli 2' படத்திற்காக.

சிறந்த தழுவல் கதை - '83' படத்தின் கதைக்காக Kabir Khan, Sanjay Puran Singh Chauhan இருவருக்கும் வழங்கப்பட்டது.

சிறந்த கதை - அனுராக் பாசு ('Ludo' படத்திற்காக)

சிறந்த துணை நடிகைக்கான விருது - Sai Tamhankar ('மிமி' படத்திற்காக)

சிறந்த துணை நடிகருக்கான விருது - பங்கஜ் திரிபாதி (Ludo படத்திற்காக)