Pathaan, KGF 2, Dangal - உலக அளவில் அதிக வசூல் சாதனை செய்த இந்தியத் திரைப்படங்களின் லிஸ்ட்!

நந்தினி.ரா

நிவேஷ் திவாரி இயக்கத்தில், ஆமிர்கான் நடிப்பில் 2016-ல் வெளியான திரைப்படம் 'தங்கல்'. மல்யுத்த வீரர் மகாவீர் சிங் போகத்தின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் 2000 கோடி ரூபாயை வசூலித்து இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

தங்கல்

ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி 2' படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். பாக்ஸ் ஆபிஸில் இப்படம் 1810 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது.

பாகுபலி 2

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்.ஆர்.ஆர்'. உலக அரங்கிலும் நல்ல வரவேற்பை பெற்றது. உலகளவில் கிட்டத்தட்ட ரூ.1,258 கோடி வசூலித்த இத்திரைப்படம் கோல்டன் குளோப், ஆஸ்கர் எனப் பல கதவுகளைத் தட்டியிருக்கிறது. 

RRR

பிரசாந்த் நீல் இயக்கிய 'கே.ஜி.எஃப் - 2'-வில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் இதுவரை 1,250 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனையைப் புரிந்திருக்கிறது.

கே.ஜி.எஃப் - 2

இப்பட்டியலில் ஐந்தாவதாக உள்ள திரைப்படம்  'பஜ்ரங்கி பாய்ஜான்'. 2015-ல் கபீர் கான் இயக்கத்தில் வெளியான இதில் சல்மான் கான், கரீனா கபூர் நடித்திருக்கின்றனர். இப்படம் உலகம் முழுவதும் ரூ.969 கோடி ரூபாயை வசூல் செய்திருக்கிறது.       

பஜ்ரங்கி பாய்ஜான்

2017-ல் வெளியான 'சீக்ரெட் சூப்பர் ஸ்டார்' படம் பாக்ஸ் ஆபிஸில்  966 கோடி ரூபாயை வசூலித்து இருக்கிறது. ஆமிர்கான், ஷாய்ரா வாசிம் நடிப்பில் வெளியான இப்படத்தை அத்வைத் சந்தன் இயக்கியிருக்கிறார்.

சீக்ரெட் சூப்பர் ஸ்டார்

இப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ள திரைப்படம் சமீபத்தில் வெளியாகி இன்னமும் ஓடிக்கொண்டிருக்கும் 'பதான்'. பல்வேறு சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் கடந்து இன்று வசூலில் சாதனை படைத்து வருகிறது. இதுவரைக்கும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 865 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

பதான் | Pathaan

இந்தப் பட்டியலில் 8வது இடத்தில் உள்ள திரைப்படம் ராஜ்குமார் ஹிரானி இயக்கிய 'PK'. இதில் ஆமீர் கான், அனுஷ்கா சர்மா, மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். 2014-ம் ஆண்டு வெளியான இத்திரைப்படம்  769 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. 

PK