Rashmika Mandanna: `நேஷனல் கிரஷ்' ராஷ்மிகா மந்தனா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! | HBD Rashmika

பிரபாகரன் சண்முகநாதன்

சாண்டல்வுட், கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என எல்லா இடங்களுக்கும் சென்றுவிட்ட ராஷ்மிகாவின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ.

ராஷ்மிகா மந்தனா

ராஷ்மிகா மந்தனா பிறந்தது குடகு, கர்நாடகா. அவருக்கு இப்போது வயது 26.

ராஷ்மிகா மந்தனா

ராஷ்மிகா 2கே கிட்ஸின் Crush. 2016-ல் கன்னடத்தில் வெளிவந்த 'Kirik Party'தான் அவரின் அறிமுக படம்.

ராஷ்மிகா மந்தனா

தெலுங்கில் 'Chalo' படம் வழியாக அறிமுகமானார். அதே வருடத்தில் வெளியான விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த 'கீதா கோவிந்தம்' அக்கட தேசத்தில் அதிரி புதிரி ஹிட்.

ராஷ்மிகா மந்தனா

ராஷ்மிகாவுக்கு வளர்ப்புப் பிராணிகள் என்றால் மிகவும் பிடிக்கும். பிடித்த கலர் பிங்க்.

ராஷ்மிகா மந்தனா

கல்லூரி படிக்கும் காலத்தில் 2014-ல் Clean & Clear Face மாடலிங் செய்ததுதான் அவரது கரியரின் ஆரம்பம்.

ராஷ்மிகா மந்தனா

கூகுளில் நம்ம பசங்க 'ராஷ்மிகாவின் பாய் ஃப்ரெண்ட்' என்பதைத்தான் அதிகம் தேடி இருக்கிறார்கள். அவருடைய முதல் படமான 'க்ரிக் பார்ட்டி' நடிகர் ரக்ஷித் ஷெட்டி உடனான காதல், நிச்சயதார்த்தம் வரை சென்று பின்னர் கைவிடப்பட்டது.

ராஷ்மிகா மந்தனா

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திரை கெமிஸ்டரினால் இருவரின் பெயரும் சேர்த்து உச்சரிக்கப்படுகின்றன. திருமணம் என்பது வரை செய்திகள் வெளியானாலும் இருவரும் அதனை மறுத்துவிட்டனர்.

ராஷ்மிகா மந்தனா

ராஷ்மிகாவின் கியூட் முகபாவனைகள், தப்பு தப்பாகப் பேசினாலும் அழகான தமிழ் உச்சரிப்பு என அவர் தமிழில் நடிப்பதற்கு முன்பே இங்கு அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகிவிட்டது.

ராஷ்மிகா மந்தனா

கன்னடம், தெலுங்கு, தமிழ் எனத் தென்னிந்திய அழகியாக இருந்தவர் இந்த வருடம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். அமிதாப் பச்சனுடன் 'Goodbye', இன்னொரு படம் 'Mission Majnu'. இது தவிர ரன்பீர் கபூர் படத்திலும் நாயகி இவர்தான்.

ராஷ்மிகா மந்தனா

Yenti Yenti Yenti பாடலில் விஜய் தேவரகொண்டாவுக்குப் பின்னிருந்து அவரைப் போலவே பாவனை செய்து வரும் ராஷ்மிகாவின் அந்த க்யூட் வீடியோதான் பல வருடங்களாக இளைஞர்களின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்!

ராஷ்மிகா மந்தனா

'புஷ்பா' சமந்தாவின் பாடல் எந்தளவு வைரலானதோ அதற்கு இணையாகப் பேசப்பட்டது ராஷ்மிகாவின் 'சாமி சாமி' பாடல். படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் ராஷ்மிகாவை 'கிரஷ்மிகா' என அழைப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

ராஷ்மிகா மந்தனா

அப்புறம் சொல்ல மறந்துட்டேன், ராஷ்மிகாவும் BTS ஆர்மிதானாம். Happy Birthday National Crush, ராஷ்மிகா!

ராஷ்மிகா மந்தனா