KGF 2: டிரைவர் மகன் டு Pan Indian ஸ்டார்; `ராக்கி பாய்' யஷ் கடந்து வந்த பாதை! | Photo Story

பிரபாகரன் சண்முகநாதன்

சாண்டல்வுட்டில் கன்னட எல்லையைத் தாண்டி கொண்டாடப்படும் ஹீரோக்கள் வெகு அரிதாகவே இருக்கின்றனர். எந்தவித பின்னணியும் இல்லாமல் பேன் இந்தியா அளவில் தனக்கான ரசிகர்களைக் கொண்டிருக்கும் யஷ் இந்த இடத்திற்கு எளிதாக வந்துவிடவில்லை.

புனித் ராஜ்குமார், யஷ்

யஷ்ஷின் இயற்பெயர் நவீன் குமார கவுடா. அவரது பெட் நேம்தான் யஷ். யஷ்ஷின் அப்பா KSRTC பேருந்து ஓட்டுநராக பணியாற்றியவர்.

யஷ்

மைசூரில் இளமை பருவத்தை கழித்த யஷ், நடிக்க ஆரம்பித்தது மேடை நாடகங்களில். மேடை நாடக முன்னோடியான பி.வி.கரந்த் (B. V. Karanth) குழுவில் இணைந்திருந்தார்.

யஷ்

கன்னட டிவி சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார் யஷ். 'நந்த கோகுலா' என்கிற சின்னத்திரை சீரியலில் தொடங்கியது இவரது பயணம்.

யஷ்

பெரிய திரையில் துணை நடிகராக அறிமுகமானாலும் அந்தப் படத்திற்கே சிறந்த துணை நடிகர் விருதும் பெற்றார் யஷ்.

யஷ்

2008-ல் இவர் கதாநாயகனாக நடித்த படம் வெளியானது. இரண்டு மூன்று படங்கள் நடித்திருந்தாலும் யஷ்ஷைப் பரவலாக கொண்டு சேர்த்தது நம்ம 'களவாணி' படத்தின் கன்னட ரீமேக் 'Kirataka' தான்.

யஷ்

2013 லவ்-டிராமா ஆக உருவான 'Googly' படம் ஹிட் ஆக அடுத்த இரண்டு மூன்று வருடங்களில் வெளியான படங்களில் யஷ்ஷுக்கு ஒரு பெரிய ரசிகப் பட்டாளமே உருவானது.

யஷ்

யஷ்ஷுக்கு Mr. and Mrs. Ramachari படத்தில் உடன் நடித்த ராதிகா பண்டிட் உடன் காதல் என சினிமா வட்டாரத்தில் அப்போது கிசுகிசுக்கப்பட்டது.

யஷ், ராதிகா பண்டிட்

ராதிகா பண்டிட் யஷ்ஷின் சீரியல் காலத்தில் தொடங்கி இரண்டு, மூன்று படங்களில் கதாநாயகியாக நடித்தவர். இவர்களின் திருமணம் 2016-ல் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் இருக்கின்றனர்.

யஷ்

2014 வெளியான 'கஜகேசரி' என்கிற பீரியட் படத்தில் யஷ் நடித்தார். லவ் பாய் லுக்கில் இருந்து இப்போது பார்க்கிற கேஜிஎப்-க்கு டிரெயல் வெர்சனாக அது இருந்தது எனலாம்.

யஷ்

சசிகுமார் நடித்து தமிழில் வெளியாகிய 'சுந்தரபாண்டியன்' படம் 'Raja Huli' என கன்னடத்தில் வெளியாகியது. அதில் யஷ்தான் ஹீரோ.

யஷ்

யஷ் PAN இந்திய அளவில் கொண்டப்படுகிற ஹீரோ ஆக இன்றைக்கு உயர்ந்து நிற்கிறார். KGF கதாபாத்திரத்தின் ராக்கி பாய் போல!

யஷ்