`மெஹருசைலா அழகி' க்யூட் கல்யாணி பிரியதர்ஷன் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! | HBD Kalyani Priyadarshan

பிரபாகரன் சண்முகநாதன்

மாநாடு, மரைக்காயர், ஹிருதயம் என தமிழ், மலையாள திரையுலகில் கல்யாணி பிரியதர்ஷன் வளர்ந்துவரும் நடிகை. இவரது இன்னொரு பக்கம் சுவாரஸ்யமானது.

Kalyani Priyadarshan | கல்யாணி பிரியதர்ஷன்

கல்யாணி முதன்முதலாக சினிமா துறைக்குள் வந்தது தயாரிப்பு வடிவமைப்புக்காக. ஹிந்தியில் 'கிரிஷ் 3' படத்தில் சாபு சிரிலுக்கு உதவியாளராகத் தயாரிப்பு வடிவமைப்பில் பணியாற்றினார்.

Kalyani Priyadarshan | கல்யாணி பிரியதர்ஷன்

தமிழில் விக்ரம், நயன்தாரா நடித்த 'இருமுகன்' படத்திலும் தயாரிப்பு வடிவமைப்பு உதவியாளராக கல்யாணி பணியாற்றியுள்ளார்.

Kalyani Priyadarshan | கல்யாணி பிரியதர்ஷன்

சினிமாவில் கேமரா பின்னிருந்தவர் கேமராவுக்கு முன்பு வந்தது 'Hello' என்னும் தெலுங்குப் படத்தில்தான். அகில் அக்கினேனி உடன் இந்தப் படத்தில் நடித்தார்.

Kalyani Priyadarshan | கல்யாணி பிரியதர்ஷன்

கல்யாணி பிரியுதர்ஷன் பிறந்தது சென்னையில்தான். பள்ளிப்படிப்பு லேடி ஆண்டாள் பள்ளியில்.

Kalyani Priyadarshan | கல்யாணி பிரியதர்ஷன்

அதன் பிறகு சிங்கப்பூர், அமெரிக்கா எனப் பறந்தவர் கட்டட வடிவமைப்புத் துறையில் பட்டம் பெற்றிருக்கிறார்.

Kalyani Priyadarshan | கல்யாணி பிரியதர்ஷன்

தெலுங்கில் மூன்று படம், 2019-ல் சிவகார்த்திகேயன் உடன் 'ஹீரோ' படம் என நான்கு படங்களுக்குப் பிறகுதான் மலையாள படங்களுக்கே சென்றார் கல்யாணி.

Kalyani Priyadarshan | கல்யாணி பிரியதர்ஷன்

2020-ல் துல்கர் சல்மானுடன் நடித்த 'வரனே அவசியமுண்டு' ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

Kalyani Priyadarshan | கல்யாணி பிரியதர்ஷன்

கல்யாணியின் தந்தை பிரியதர்ஷன் இந்தியாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவர். 95 படங்களுக்கு மேல் மலையாளம், தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் எடுத்துள்ளார். 2008-ல் பிரகாஷ்ராஜ் நடிப்பில் உருவான 'காஞ்சிவரம்' படம் பிரியதர்ஷன் எடுத்தது.

Kalyani Priyadarshan | கல்யாணி பிரியதர்ஷன்

அம்மா லிஸியும் மலையாள நடிகை. திரைத்துறை பின்னணி இருந்தும் கல்யாணிக்கு நடிப்பில் ஆர்வம் இருந்ததே இல்லை. பள்ளிப் பருவத்தில் கல்யாணி கொஞ்சம் பருமனாக இருப்பாராம்.

Kalyani Priyadarshan | கல்யாணி பிரியதர்ஷன்

இன்றைக்கு இந்த 'மெஹருசைலா அழகி'க்கு பிறந்தநாள். ஹேப்பி பர்த்டே, கல்யாணி!

Kalyani Priyadarshan | கல்யாணி பிரியதர்ஷன்