Elli AvrRam: 14 வயதில் பாலிவுட் கனவு; தனுஷின் `நானே வருவேன்' கதாநாயகி - இவர் யார் தெரியுமா?

பிரபாகரன் சண்முகநாதன்

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' படத்தில் கதாநாயகியாக Elli AvrRam நடிப்பது உறுதியாகி இருக்கிறது. நியூமராலஜி பெயரா என நாம் தேடும் போது தெரிகிறது, எல்லி நம்ம ஊரே இல்லையாம். அவரைப் பற்றிச் சுவாரஸ்யமான தகவல்கள் இதோ.

Elli AvrRam

Elli AvrRam முழுப்பெயர் Elisabet Avramidou Granlund. சுவீடனைச் சேர்ந்த எல்லீயின் அப்பா இசைக்கலைஞர். அம்மா நடிகை. ஸ்வீடிஷ் இயக்குநர் Ingmar Bergman உடன் பணிபுரிந்திருக்கிறார்.

Elli AvrRam

அம்மாவின் உறவினர் நாடகத் திரையரங்கம் ஒன்றை நடத்தி வருகிறார். அம்மாவும் அத்தையும்தான் எல்லீக்கு நடிப்பு பயிற்சி கொடுத்தது.

Elli AvrRam

சின்ன வயதில் இருந்தே பாலிவுட் மீதும் இந்திய உடைகளின் வண்ணங்கள் மீதும் எல்லீக்கு அளப்பரிய காதல். வாய்ப்பு கிடைக்கும் போது இந்தியாவுக்குப் பறந்துவிடலாம் என்று காத்திருந்தாராம். 'தேவ்தாஸ்' இவரது ஃபேவரைட் படம்.

Elli AvrRam

ஸ்வீடனை மையமாகக் கொண்ட நாடகக் குழுவில் 17 வயதில் இணைந்தார். அங்கு நாடகங்கள், தொலைக்காட்சி, மாடலிங் என இருந்தவர் இந்தியாவுக்கு 2012-ல் கனவுகளுடன் வந்து சேர்ந்தார்.

Elli AvrRam

டூரிஸ்ட் விசாவில் வந்தவர் மாடலிங், விளம்பரத்துறையில் வாய்ப்பு கிடைக்கவும் ஒர்க் விசாவாக மாற்றிக்கொண்டு இங்கே பாலிவுட் படங்களின் ஆடிஷன்களுக்குச் செல்கிறார்.

Elli AvrRam

2012 Mickey Virus என்கிற படத்தில் நடித்தவர், 2013-ல் சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக் பாஸ் 7-வது சீசனில் பங்கேற்றார். 10 வாரங்களுக்குப் பிறகு வெளியே வந்தவருக்கு இந்திய மக்களின் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

Elli AvrRam

கபில் சர்மாவுடனான 'Kis Kisko Pyaar Karoon' நல்ல பெயரையும் பெற்று வெற்றி பெற இவரைத் தேடி வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

Elli AvrRam

இந்தியாவுக்கு வந்து 10 ஆண்டுகளானதற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு நெகிழ்ச்சியான பதிவைப் பகிர்ந்திருந்தார் எல்லீ.

Elli AvrRam

ஊட்டியில் நடைபெற்ற 'நானே வருவேன்' படப்பிடிப்பில் கலந்து கொண்டவர் அங்கு மலையேற்றம், குதிரை பயிற்சி என ஜாலியான அனுபவங்களைப் பகிர்ந்து இருக்கிறார்.

Elli AvrRam

இந்தியில் வெற்றி பெற்ற 'குயின்' படம் காஜல் அகர்வால் நடிக்க தமிழில் 'பாரிஸ் பாரிஸ்' என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அந்தப் படத்தில் எல்லீ நடித்திருக்கிறார்.

Elli AvrRam

தனுஷுடன் செல்வராகவன் நீண்ட நாள்களுக்குப் பிறகு இணையவிருக்கிறார். தனுஷ் - எல்லீ கதாபத்திரங்கள் எப்படி வரப்போகின்றன என ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

Elli AvrRam