அவள் விருதுகள்: `சினிமாவுக்கு வந்து 40 வருஷம் ஆகிடுச்சுனு யோசிச்சதில்லை'- நடிகை மீனா |#Visual story

இ.நிவேதா & ஆ.சாந்தி கணேஷ்

அவள் விருதுகள் வழங்கும் நிகழ்வில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகப் பெருமக்களின் நெஞ்சங்களில் வலம் வந்து கொண்டிருக்கும் மீனாவுக்கு, `எவர்கிரீன் நாயகி' விருதை வழங்கினார்கள், இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் மற்றும் நடிகை அம்பிகா.

மீனா - கே.பாக்யராஜ் - நடிகை அம்பிகா.

``ஃபீல்டுக்கு வந்து 40 வருஷமாயிடுச்சுன்னு நான் யோசிச்சதே இல்லை; அந்த சக்சஸைக் கொண்டாட நேரமும் இருந்ததில்லை. கொஞ்சநாள் முன்னாடி என் வாழ்க்கையில நடந்த இழப்புல இருந்து என்னை மீட்டெடுத்தது அவள் விகடன்தான். அவள் டீமுக்கு என்னுடைய நன்றி’’ என்று கண்கலங்கினார் நடிகை மீனா.

நடிகை மீனா

செய்தி வாசிப்பாளராக கரியரை தொடங்கி சீரியல், சினிமா என அடுத்தடுத்த தளங்களில் ஜொலித்துக்கொண்டிருக்கும் பிரியா பவானிஷங்கருக்கு `அவள் ஐகான்’ விருதை, 80-களின் நாயகி நடிகை அம்பிகா வழங்கினார். 

பிரியா பவானிஷங்கர் - நடிகை அம்பிகா

மென்மையான குரலில் பேச ஆரம்பித்தவர், வீக் எண்டில் தன் வீட்டு மொட்டைமாடி சீக்ரெட்; நியூஸ் ரீடிங் சேலஞ்ச்; நடிகர் கார்த்திக்கும் தனக்குமான நட்பு என செம இன்ட்ரெஸ்ட்டிங் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

பிரியா பவானிஷங்கர்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அம்மா நாகமணிக்கு `பெஸ்ட் மாம்’ விருது வழங்கப்பட்டது. நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிகர் ஜெயப்பிரகாஷும், நடிகை வடிவுக்கரசியும் விருது வழங்கினார்கள்.

நாகமணி - விஜய் சேதுபதி - ஜெயப்பிரகாஷ் - வடிவுக்கரசி

``என் குழந்தை முன்னுக்கு வந்ததாலதான், நான் இன்னிக்கு இந்த மேடையில நின்னுகிட்டிருக்கேன்’’ என்று நெகிழ்ந்தார் நாகமணி.

நாகமணி

19 இந்திய மொழிகளில் பாடியுள்ள ஒரே பாடகி வாணி ஜெயராமுக்கு `கலைநாயகி’ விருது வழங்கினார்கள் குன்றக்குடி அடிகளாரும், பாடகரும் மருத்துவருமான சீர்காழி சிவ சிதம்பரமும். 

பாடகி வாணி ஜெயராம் - குன்றக்குடி அடிகளார்

``ஐயா கரங்களால் விருது பெறுவது மகிழ்ச்சி’’ என்று நெகிழ்ந்த வாணியம்மா, தன்னுடைய சிக்நேச்சர் பாடலான `மல்லிகை என் மன்னன் மயங்கும்...’ பாடலைப் பாடினார்.

பாடகி வாணி ஜெயராம்