வேகம், தேசப்பற்று, விடுதலை: சுதந்திர தினத்துக்கான திரைப்பாடல்கள் பிளேலிஸ்ட்! #VisualStory

இ.நிவேதா

சுதந்திர தினத்தின் தொடக்கம் ரேடியோ, டி.வி எனப் பாடல்களோடு ஆரம்பிக்கும். அந்த பாடல்களைக் கேட்கும்போதே சுதந்திரத்தின் உத்வேகமும், உற்சாகமும் நமக்குள்ளும் ஊற்றெடுக்க ஆரம்பித்துவிடும்.

Representational Image

அப்படி... நம்மை சுதந்திரம் பெற்ற பாதைக்குள் அழைத்துச் செல்லும் பாடல்களும், உணர்வுகளை ஒன்று சேர்க்கும் சில வரிகளும்...

unity in diverse | pixabay

தாய் மண்ணே வணக்கம்: இந்த பாடலை பாடியவர் ஏ. ஆர். ரகுமான். ‘தாய் அவள் போல் ஒரு ஜீவனில்லை,.. அவள் காலடி போல் சொர்க்கம் வேறு இல்லை.. பாரதம் எங்களின் சுவாசமே’…

இனி அச்சம் அச்சம் இல்லை: `இந்திரா' படத்தில் இடம்பெற்ற இந்த பாடலின் வரிகளை எழுதியவர் வைரமுத்து. இசையமைத்தவர் ஏ.ஆர்.ரகுமான்.``காலம் மாறிப்போச்சு, நம் கண்ணீர் மாறிப்போச்சு.. நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு"..

கப்பலேறி போயாச்சு: `இந்தியன்' படத்தில் இடம்பெறும் இப்பாடலை எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா பாடியிருப்பார்கள். ``விடியும் வரையில் போராடினோம்..உதிரம் மதியாய் நீராடினோம்"...

தமிழா தமிழா நாளை: `ரோஜா' படத்தில் இடம்பெற்ற இந்த பாடலுக்கு இசையமைத்தவர் ஏ.ஆர்.ரகுமான், பாடலை பாடியவர் ஹரிஹரன். ``உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா.. ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா''..

இந்தியநாடு என் வீடு: எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க வாலியின் எழுத்துகளால் உருவான பாடல். ``சத்தியம் எங்கள் வேதம், சமத்துவம் எங்கள் கீதம்..வருவதை பகிர்ந்து உண்போம், வந்தே மாதரம் என்போம்''...

தாயின் மணிக்கொடி: `ஜெய்ஹிந்த்' திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை எஸ். பி. பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். ``தேகம் பலவாகும், நம் ரத்தம் ஒன்றல்லோ...பாஷைகள் பலவன்றோ, தேசம் ஒன்றன்றோ''..

இதேபோல் சுதந்திர தினத்தன்று நீங்கள் விரும்பி கேட்கும் பாடல்களையும் குறிப்பிடுங்கள்!