5 வயதில் நடிகர்; 8 வயதில் போதை பழக்கம்; Iron Man ராபர்ட் டௌனி ஜூனியர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

பிரபாகரன் சண்முகநாதன்

அயர்ன் மேன் கேரக்டர் 'அவென்ஜர்ஸ் எண்ட் கேம்' படத்தோடு முடிவடைந்தது என அறிவித்த போது கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் சிந்தக் காரணம் ராபர்ட் டௌனி ஜூனியர் மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பு. 57-வது பிறந்தநாளில் அவரை பற்றி சுவாரஸ்யமான 10 தகவல்கள் இதோ...

ராபர்ட் டௌனி ஜூனியர்

ராபர்ட் டௌனி ஜூனியரின் அப்பாவும் அம்மாவும் திரைத்துறையில் இருந்தவர்கள். அப்பா ஹீரோ, இயக்குநர். அம்மா நடிகை.

ராபர்ட் டௌனி ஜூனியர்

ஹாலிவுட்டிலேயே பிறந்தவர், முதன்முதலாக நடிக்க ஆரம்பித்த வயது 5. அப்பாவின் படமான Pound-ல் நடித்தார்.

ராபர்ட் டௌனி ஜூனியர்

ராபர்ட்டுக்கு 8 வயதில் போதை பழக்கம், அப்பா வழியாக அறிமுகமாகிறது. 11 வயதில் அவரது பெற்றோர்கள் விவாகரத்து செய்து கொள்கிறார்கள்.

ராபர்ட் டௌனி ஜூனியர்

பல நாடுகளில் வாழ்ந்தவர், போதை பழக்கத்துக்காகவே பல முறை கைது செய்யப்பட்டு ஒரு வருடம் வரை கூட சிறையில் இருந்து திரும்பி இருக்கிறார்.

ராபர்ட் டௌனி ஜூனியர்

அவர் நடித்து கொண்டிருந்த டிவி நிகழ்ச்சியில் இருந்து இடையிலேயே வெளியேற்றப்படுவதற்கும் அதுவே காரணமாக இருந்திருக்கிறது.

ராபர்ட் டௌனி ஜூனியர்

தியேட்டர் ஆர்டிஸ்ட்டாக 29 நாடகங்களுக்கு மேல் நடித்துள்ளார். அதில் ஒன்றில் டார்சன் வேடம். தியேட்டர் கைகொடுக்காத போது டிவி நிகழ்ச்சிகள், திரைப்படம் என நடிக்கத் தொடங்குகிறார்.

ராபர்ட் டௌனி ஜூனியர்

சார்லி சாப்ளினின் வாழ்க்கையை வைத்து எடுக்கப்பட்ட 'Chaplin' (1992) படத்தில் சாப்ளினாக நடித்தார் ராபர்ட் ஜூனியர். ஆஸ்கர் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றார்.

ராபர்ட் டௌனி ஜூனியர்

அளவு கடந்த போன போதை பழக்கமும் அதனால் தொடர்ந்த கைது மற்றும் சிறை அனுபவமும் அதிலிருந்து மீளும் வழியை நோக்கி ராபர்ட்டைச் செலுத்தியது.

Iron Man ராபர்ட் டௌனி ஜூனியர்

2003-ல் முற்றிலுமாக போதை பழக்கத்தை கைவிட்டவராக மாறினார். அதன் பிறகு அவருக்கான உயரம் ஹாலிவுட்டில் காத்திருந்தது.

ராபர்ட் டௌனி ஜூனியர்

ராபர்ட் டௌனி ஜூனியரை உலகத்தைக் காக்கும் ஹீரோவாக நமக்குத் தெரியும். அந்த ஹீரோவுக்கு முன்பு அவரிடமிருந்து அவரே மீண்டு வந்த இந்தப் பயணம் அசாத்தியமானது.

ராபர்ட் டௌனி ஜூனியர்

'ஷெர்லாக் ஹோம்ஸ்' படத்தில் 2009-ல் ராபர்ட் நடித்தார். டோனி ஸ்டார்க் ஆக 10 படங்களுக்கு மேல் மார்வெல் Iron Man ஆக வாழ்ந்தவர் நிச்சயம் இரும்பு மனிதர்தான். ஹேப்பி பர்த்டே டோனி ஸ்டார்க்!

ராபர்ட் டௌனி ஜூனியர்