Cannes 2022: ஐஸ்வர்யா ராய், அதிதி, பூஜா ஹெக்டே, தீபிகா... வண்ணமயமான ரெட் கார்பெட்! | Photo Story

பிரபாகரன் சண்முகநாதன்

பிரான்ஸில் நடைபெறும் கான் திரைப்பட விழாவில் திரைப்படங்கள் தாண்டி, உலகளவில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் ரெட் கார்பெட்டில் ஆடம்பரமான உடைகளில் வருவது அதிக கவனிப்பைப் பெறும்.

தீபிகா படுகோன் - இந்த வருட கான் திரைப்பட விழாவில் நடுவராகக் கலந்து கொண்டிருக்கிறார்.

மீரா சோப்ரா - தமிழில் எஸ்.ஜே.சூர்யாவுடன் 'அன்பே ஆருயிரே', அர்ஜுன் உடன் 'மருதமலை' படங்களில் இவர் நடித்திருந்தார்.

ஐஸ்வர்யா ராய் பச்சன் - கணவர் அபிஷேக், மகள் ஆரத்யா எனக் குடும்பத்துடன் பிரான்ஸுக்குச் சென்றிருக்கிறார்.

2003-ல் கான் திரைப்பட விழாவின் நடுவராக ஐஸ்வர்யா ராய் பங்கு வகித்தார்.

ஹிந்தி சீரியல்கள், திரைப்படங்கள் என பிஸியாக இருப்பவர் ஹினா கான்.

'காற்று வெளியிடை', 'ஹே சினாமிகா' பட கதாநாயகி அதிதி ராவ் ஹைதரி கான் விழாவில் கலந்து கொண்டிருக்கிறார்.

ராதே ஸ்யாம், பீஸ்ட், ஆச்சார்யா எனப் பெரிய படங்களின் கதாநாயகி பூஜா ஹெக்டே.

இந்தியா சார்பில் கலந்து கொள்பவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தார் பூஜா ஹெக்டே.

பாலிவுட் நடிகை ஹெல்லி ஷா (Helly Shah) கான் விழாவில் பங்கேற்றிருக்கிறார். இவ்வாறு ரெட் கார்பெட்டை வண்ணமயமாக்கி உள்ளனர் இந்திய கதாநாயகிகள்.