Cannes 2022: தீபிகா, பூஜா ஹெக்டே திரைப்பட விழாவில் பங்கேற்கும் இந்திய நட்சத்திரங்கள்| Photo Story

பிரபாகரன் சண்முகநாதன்

உலகின் முக்கியத்துவம் பெற்ற திரைப்பட விழாக்களில் ஒன்றான பிரான்ஸ் நாட்டின் 75-வது கேன்ஸ் திரைப்பட விழா மே 17 அன்று தொடங்கவிருக்கிறது. கேன்ஸ் ரெட் கார்பெட்டில் பங்கேற்கும் இந்திய நட்சத்திரங்கள் யார் யார் என இங்கு பார்ப்போம்.

கேன்ஸ் திரைப்பட விழா

தீபிகா படுகோன் வருடம் தவறாது கேன்ஸ்க்கு ஜூட் விடுபவர், இந்த வருடம் பங்கேற்பாளராக கலந்துகொள்ளப் போவதில்லை. தங்க பனை விருதுக்கான படத்தைத் தேர்வு செய்யும் 8 பேர் கொண்ட நடுவர் குழுவில் அங்கம் வகிக்கவிருக்கிறார்.

இவர் இல்லையென்றால் பாலிவுட் இல்லை என்றே சொல்லிவிடலாம். நடிகர் அக்ஷய் குமார் இந்த வருட கேன்ஸ் விழாவில் இந்தியா சார்பில் கலந்து கொள்கிறார்.

உலகையே இந்திய இசையின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கேன்ஸ் விழாவில் பங்கேற்க உள்ளார்.

பீஸ்ட் நடிகை பூஜா ஹெக்டேவை இந்த வருடம் பிரான்ஸ் ரெட் கார்பெட்டில் காணலாம்.

1994 கேன்ஸில் திரையிடப்பட்ட 'பண்டிட் குயின்' படத்தின் இயக்குனர் ஷேகர் கபூர் இந்த விழாவில் கலந்து கொள்கிறார். பூலான் தேவியின் வாழ்க்கையை தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டது.

தென்னிந்திய சினிமாவில் பியூட்டி குயின்கள் நயன்தாரா மற்றும் தமன்னா ஆகியோரும் இந்த விழாவில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

மேடி எனச் செல்லமாக அழைக்கப்படும் மாதவன் முதல்முறையாக இயக்குனராக அவதாரமெடுத்து இயக்கிய படம் Rocketry: The Nambi Effect இந்த விழாவில் திரையிடப்பட்ட உள்ளது.

நடிகை வாணி த்ரிபாதி மற்றும் கிராமி விருதாளரும் இசையமைப்பாளருமான ரிக்கி கேஜ் (Rickey Kej) ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்கின்றனர்.

மே 25 வரை நடக்கவிருக்கும் இந்த விழாவில் பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக்கும் கலந்து கொள்கிறார். இந்த வருட `கேன்ஸ் பிலிம் மார்க்கெட்' விழாவில் நாடுகளுக்கான கௌரவ விருது இந்தியாவுக்கு தரப்படவிருக்கிறது.