The Crown முதல் Spencer வரை- ராணி எலிசபெத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள், தொடர்கள்!

நந்தினி.ரா

1926-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி இங்கிலாந்து அரச குடும்பத்தில் பிறந்தவர் எலிசபெத்.

70 ஆண்டு காலமாக முடியாட்சி நடத்திய ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96வது வயதில் காலமானார். 1952-ல் அரியணை ஏறியபோது அவருக்கு 25 வயது.

அதிக ஆண்டுகள் ஆண்ட ராணி என்ற பெருமையைப் பெற்றவர்.

அவர் காலமானதைத் தொடர்ந்து, அவரைப் பற்றிய செய்திகளும், தகவல்களும், புகைப்படங்களும் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் தொடர்களைப் பார்ப்போம்.

THE CROWN

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இளம் வயது வாழ்க்கைக் கதையைச் சொல்லும் வகையில் 2016-ல் ‘The Crown’ என்ற வெப் சீரியஸை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டது. அது பல்வேறு சீசன்களைக் கடந்து தொடர்ந்து வருகிறது. அந்தத் தொடரில் ராணியின் வெவ்வேறு காலகட்டக் கதாபாத்திரத்தில் கிளாரி ஃபோய், ஒலிவியா கோல்மன், இமெல்டா ஸ்டாண்டன் போன்ற நடிகைகள் நடித்திருக்கிறார்கள்.

SPENCER

1980களில் இளவரசர் சார்லஸூக்கும் லேடி டயானா ஸ்பென்சருக்கும் உள்ள உறவு பற்றியத் தொடர் இது. இந்தத் தொடரில் லேடி டயானாவின் கதாபாத்திரத்திற்கு அதிக கவனம் செலுத்தியிருந்தாலும், ராணி எலிசபெத்தின் கதாபாத்திரமும் பெரும்பங்கு வகிக்கும். இந்தக் கதாபாத்திரத்தில் ஸ்டெல்லா கோனெட் நடித்திருப்பார்.

THE KING'S SPEECH

‘தி கிங்ஸ் ஸ்பீச்’ என்பது 2010-ம் ஆண்டு டாம் ஹூப்பர் இயக்கிய பிரிட்டிஷ் வரலாற்று எமோஷனல் டிராமா திரைப்படம். கிங் ஜார்ஜ் VI-யின் ஒரு பிரச்னையைக் கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் ராணி எலிசபெத்தாக ஃப்ரேயா வில்சன் நடித்திருப்பார்.

THE QUEEN

2006-ம் ஆண்டு வெளியான எலிசபெத் ராணியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் ‘தி குயின்’. ராணியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட வெற்றிகரமான படங்களில் இதுவும் ஒன்று.

A ROYAL NIGHT OUT

2015-ல் வெளியான இத்திரைப்படத்தில் இளவரசி எலிசபெத்தும் அவரது சகோதரி மார்கரெட்டும் 1945-ம் நடந்த இரண்டாம் உலகப் போரின் முடிவைக் கொண்டாடியதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் நடிகை சாரா காடன் என்பவர் எலிசபெத் கதாபாத்திரத்திலும், எலிசபெத் சகோதரி மார்கரெட் கதாபாத்திரத்தில் பெல் பெளலேவும் நடித்திருக்கின்றனர்.

Tricia’s Wedding, The Queen’s Corgi, Bons Baisers de Hong Kong, Her Majesty போன்ற படங்களிலும் இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கதாபாத்திரம் இடம்பெற்றிருக்கிறது.