அவள் விருதுகள்: ``பாமா கையால் விருது பெற்றிருந்தால், மகிழ்ந்திருப்பேன்'' - கனிமொழி! |#Visual Story

இ.நிவேதா & ஆ.சாந்தி கணேஷ்

மருத்துவம், சமூக சேவை, இலக்கியம், விவசாயம், சினிமா, விளையாட்டு எனப் பலத் துறைகளில் சாதிக்கும் பெண்களைத் தொடர்ந்து அங்கீகரித்து வருகிறது அவள் விகடன்.

அவள் விகடன்

அந்த வகையில் 18 பிரிவுகளில் இருந்து, 21 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு `அவள் விருதுகள்' நவம்பர் 18-ம் தேதி வழங்கப்பட்டன.

`அவள் விருதுகள்’ விழா

தொழுநோயாளிகளின் குடியிருப்புகளைத் தேடிச்சென்று, அவர்களுக்கு மருத்துவமும், சேவையும் வழங்கும் ரேணுகா ராம கிருஷ்ணனுக்கு `சேவை தேவதை’ விருதை, ஓய்வுபெற்ற நீதியரசி பிரபா ஸ்ரீதேவன் வழங்கினார். 

ரேணுகா ராம கிருஷ்ணன்

``தொழுநோயாளிகளை சமூகம் இன்னமும் தள்ளிவைத்தேதான் பார்த்துக்கொண்டிருக்கிறது. நான், அவர்களைத்தொட்டு மருத்துவம் செய்கிறேன். தொழுநோய் தொட்டால் ஒட்டிக் கொள்ளாது’’ என்று ரேணுகா ராமகிருஷ்ணன் அறிவுரை கூறினார்.

மருத்துவம்

ஷிவாங்கிக்கு, `வைரல் ஸ்டார்’ விருதை செஃப் தாமு வழங்கினார். விருதை வாங்கிய ஷிவாங்கி, நடிகர் வடிவேலுவின் டயலாக்ஸை பேசிக்காட்ட அரங்கம் சிரிப்புக்கடலில் மூழ்கியது.

ஷிவாங்கி - செஃப் தாமு

அடுத்து, `ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ என்ற நிறுவனத்தை ஆரம்பித்து, இதுவரை நூற்றுக்கணக்கான மாணவர்களை விண்வெளி நிலையங்களுக்கு அழைத்துச் சென்ற ஸ்ரீமதி கேசனுக்கு, `கல்வித் தாரகை’ விருதை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை வழங்கினார்.

ஸ்ரீமதி கேசன் - மயில்சாமி அண்ணாதுரை

``2 கே கிட்ஸ் தகவல் தொழில்நுட்பத்தில் மிகக்கூர்மையாக இருக்கிறார்கள். அவர்களை நாம் எப்படி உருவாக்குகிறோமோ, அப்படியே அவர்கள் உருவாவார்கள்’’ என்றார் ஸ்ரீமதி.

ஸ்ரீமதி

அதைத் தொடர்ந்து 15 திருநங்கைகள் ஒன்றிணைந்து `மதுரை டிரான்ஸ் கிச்சன்’ என்ற பெயரில் உணவகம் நடத்தி வரும் டீமுக்கு `வெற்றிப்படை’ விருது வழங்கினார் கனிமொழி.

மதுரை டிரான்ஸ் கிச்சன் டீம்

``எங்க வருமானத்துல ஒரு ஹோமை தத்தெடுத்து, அங்கிருக்கிற 90 தாத்தா, பாட்டிகளை பராமரிச்சுக்கிட்டு வர்றோம்’’ என்று நெகிழ்ச்சித் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்கள், டிரான்ஸ் கிச்சன் டீம் குழுவினர். 

டிரான்ஸ் கிச்சன் டீம்

சமூகத்தின் குரூர முகத்தையும், சாதிய பாலின வர்க்க பேதங்களின் கொடுமைகளையும் தன் எழுத்தின் மூலம் அடையாளப்படுத்தி வரும் எழுத்தாளர் பாமாவுக்கு `இலக்கிய ஆளுமை’க்கான விருதை வழங்கினார் கனிமொழி. 

பாமா - கனிமொழி

``என்னோட ஆதர்சமான எழுத்தாளர் பாமா. அவர்கள் கையால் நான் விருது பெற்றிருந்தால் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருப்பேன்’’ என்று உணர்ச்சிவசப்பட்டார் கனிமொழி. 

கனிமொழி