உலக அளவில் பணக்கார நடிகர்கள் பட்டியல் வெளியீடு; டாம் குரூஸை முந்திய இந்திய நடிகர்!

நந்தினி.ரா

'World of statistics' என்கிற இணையதளம், உலக பணக்கார நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஒரே ஒரு இந்திய நடிகர் மட்டுமே இடம் பெற்றுள்ளார். தற்போது அப்பட்டியலில் இடம் பெற்றுள்ள நடிகர்களைப் பற்றி பார்போம்.

உலக பணக்கார நடிகர்கள்

உலக பணக்கார நடிகர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் ஜெர்ரி செயின்ஃபெல்ட். இவர் ஒரு அமெரிக்க நகைச்சவை நடிகர். ஜெர்ரி செயின்ஃபெல்ட்டின் சொத்து மதிப்பு 1 பில்லியன் டாலர்.

ஜெர்ரி சீன் ஃபீல்ட்

டெய்லர் பெர்ரி இப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கிறார். டைலர் பெர்ரி அமெரிக்காவைச் சேர்ந்த நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், மற்றும் எழுத்தாளர் ஆவார். இவரின் சொத்து மதிப்பு 1 பில்லியன் டாலர்.

டெய்லர் பெர்ரி

'தி ராக்' எனப் பிரபலமாக அறியப்படுபவர் டுவைன் ஜான்சன். மல்யுத்த வீரரும், ஹாலிவுட் நடிகருமான இவர் டுவைன் ஜான்சன் 800 மில்லியன் டாலரோடு 3-வது இடத்தில் உள்ளார்.

டுவைன் ஜான்சன்

உலக பணக்கார நடிகர்களின் பட்டியலில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக் கான் 4-ஆவது இடத்தை பிடித்திருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு 770 மில்லியன் டாலர். இப்பட்டியலில் இடம்பிடித்த ஒரே ஒரு இந்திய நடிகர் ஷாருக் கான் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாருக் கான்

ஹாலிவுட் சினிமாவின் பிரபல நடிக்ககளில் ஒருவர் டாம் குரூஸ். அவரது நடிப்பில் வெளிவந்த மிஷன் இம்பாசிபிள் படங்கள் மிகவும் பிரபலமானவை. 620 மில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளார்.

டாம் குரூஸ்.

இப்பட்டியலில் 6-வது இடத்தில் இருப்பவர் ஜாக்கிசான். குழந்தைகள் மற்றும் பதின்பருவத்தினரின் விருப்பத்துக்குரியவராக இருப்பவர். அதற்குக் காரணம் சண்டை காட்சியில் அவர் காட்டும் வேகம் மற்றும் அதை காமெடியாக அணுகும் முறையும்தான். இவரின் சொத்து மதிப்பு 520 மில்லியன் டாலர்.

ஜாக்கிசான்.

அமெரிக்காவைச் சேர்ந்த நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளரான ஜார்ஜ் குளூனி இப்பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு 500 மில்லியன் டாலர்.

ஜார்ஜ் குளூனி

ஹாலிவுட்டின் பிரபல நடிகரான ராபர்ட் டி நீரோ 500 மில்லியன் டாலருடன் இப்பட்டியலில் 8வது இடத்தில் இருக்கிறார்.

ராபர்ட் டி நீரோ

ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை மிகவும் பிரபலமான நடிகர் அர்னால்டு 450 மில்லியன் அமெரிக்க டாலருடன் 9 வது இடத்தில் உள்ளார்.

அர்னால்டு

நடிகரும் காமெடியருமான கெவின் ஹார்ட் இப்பட்டியலில் 10-வது இடத்தை பிடித்திருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு 450 மில்லியன் டாலர்.

கெவின் ஹார்ட்