மயில் தோகை, சோப்பு நுரை, எண்ணெய்க் குமிழி; வர்ணஜாலம் காட்டுவது ஏன்? I Visual Story

இ.நிவேதா

வண்ணங்கள் மிகவும் அழகானவை. வண்ணங்களைப் பார்க்கையில், மனதுக்குள் புத்துணர்ச்சியை உணரமுடியும். ஆனால், இத்தகைய வண்ணங்கள் எப்படி நம் கண்களுக்குத் தெரிகிறது?

ஒரு பொருளின் மீது வெளிச்சம் படும்போது அந்தப் பொருள் வெளிச்சத்தைப் பிரதிபலித்தால் அப்போது வண்ணங்கள் உண்டாகும்.

இரிடெசன்ஸ் (Iridescence) என்பதற்கு வானவில் எனப் பொருள். மற்ற நிறங்களுடன் ஒப்பிடுகையில் வானவில் வண்ணங்கள் ஒரு தனித்துவத்தைப் பெற்றுள்ளன.

பொதுவாக பார்வைக் கோணம் அல்லது வெளிச்சத்தின் கோணத்தை மாற்றும்பொழுது இந்த வானவில் வண்ணங்கள் தோன்றும். இதற்கு கோனியோகுரோமிசம் (Goniochromism) என்று பெயர்.

இந்த வண்ணங்கள் பிரகாசிக்கும்; மினுமினுக்கும். உதாரணமாக, தெருவில் சிந்தப்பட்ட எண்ணெய் தூரத்தில் இருந்து நடந்துவருபவருக்கு பிரகாசித்து, மினுமினுப்பாக பல வண்ணங்களோடு தெரியும்.

அதேபோல் ஒரு மயில் தோகையை விரித்தாடும்போது அதை எதிரில் பார்ப்பவருக்கும், பக்கவாட்டில் பார்ப்பவருக்கும், தொலைவில் பார்ப்பவர்க்கும் வெவ்வேறு வித வண்ணங்கள் தெரியும்.

மயிலின் இறகானது பழுப்பு நிறம்தான். ஆனால், ஒரு நபரின் பார்வைக்கோணம் மாறும்பொழுது அவை மின்னும் நீலமாகவும், பச்சை வண்ணங்களாகவும் தெரியும்.

இந்த வானவில் வண்ணங்களின் நிகழ்வுகளை, சில தாவரங்கள் பல விலங்குகள், பட்டாம்பூச்சி இறக்கைகள், கடல் சிப்பிகள் மற்றும் சில கனிமங்களிலும் காணலாம்.

பறவைகளின் இறக்கைகள்: (கிங் பிஷர், ஹம்மிங் பறவை, கிளிகள், வாத்து, மற்றும் மயில்)

பிஸ்மத் படிகம், இயந்திர எண்ணெய் கசிவு, (குறுந்தகடு) சிடி-யின் மேற்பரப்பு, டிவிடி-க்கள் .

மேக சீர் குலைவின்போது மேகங்களின் ஓரங்களில் உருவாகும் வண்ணங்கள். நீரில் விடப்பட்ட எண்ணெய் மற்றும் சோப்பு குமிழி.