இசை தந்த தேவதை; தேன் குரலுக்குச் சொந்தக்காரி - ஸ்ரேயா கோஷல் பிறந்தாள் ஸ்பெஷல் | Visual Story

மு.பூபாலன்

தமிழ், தெலுங்கு, இந்தி என மொழிகளைக் கடந்து தன் தேன் குரலால் பலரது மனதைக் கட்டிப்போட்டிருக்கும் ஸ்ரேயா கோஷல் 1984 ல் மேற்கு வங்கத்தில் பிறந்தவர்.

நான்கு வயதில் இசையைக் கற்றுக்கொள்ளத் தொடங்கியவரின் முதல் ஆல்பமான `பென்தெக்கி பீனா' 1998 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியானது.

16 வயதில் அதாவது ஜீ தொலைக்காட்சியில் `ச ரி க ம ப'  ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று டைட்டில் வின்னரானார். 

பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி யின் தாயார் இவரது பாடும் திறனை வியந்து தன் மகனை அழைத்து நிகழ்ச்சியைப் பார்க்கச் சொல்ல, அவரும் குரலில் மயங்கி தன் அடுத்த படத்தில் அவரைப் பாடகராக அறிமுகப்படுத்தினார்.

4 முறை சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கிறார்.

ஏழு முறை சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருதினை வென்றிருக்கிறார்.

உலகின் தலைசிறந்த 'ஃபோர்ப்ஸ்' இதழில்  இந்தியாவின் நூறு சிறந்த பிரபலங்களில் ஒருவராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமை பெற்றவர் 

பல்வேறு தென் மற்றும் வட இந்திய மொழிப்பாடல்களுக்கு உயிர்கொடுக்கும் ஸ்ரேயாவுக்கு தமிழ் தெரியாது என்பதுதான் நம்பமுடியாத அதிசயம்.

'நன்னாரே நன்னாரே...', 'தாவணி போட்ட தீபாவளி' , 'முன்பே வா.. என் அன்பே வா..', 'உருகுதே மருகுதே', 'அய்யய்யோ', 'காதல் அணுக்கள்', 'நீதானே நீதானே' என பல படல்கள் பாடி இசை மேலே மிதக்க வைத்தவர ஸ்ரேயா!.

தேன் குரலில் மனதை மயக்கும் பாடல் தந்து கொண்டிருக்கும் இசை தேவதைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

பிறந்தநாள் வாழ்த்துகள் ஸ்ரேயா கோஷல்!