போல்ட்,இண்டிபென்டன்ட் ஆர்டிஸ்ட்; ரசிகர்களின் கண்ணம்மா - ஸ்ருதி ஹாசன் ஸ்பெஷல் ஆல்பம் #HBDShrutiHaasan

பிரபாகரன் சண்முகநாதன்

தன்னைப் பற்றி வரும் கிசுகிசுக்களை பெரிதாக எடுத்து கொள்வதில்லை . எனக்கு பயன்படாததை நான் கேர் செய்வதில்லை என்கிறார் ஸ்ருதி.

இசையமைப்பாளர், பாடகர் எனப் பல திறமைகளை கொண்ட ஸ்ருதியின் குரலில் முதன் முதலாக வந்த பாடல் தேவர்மகன் படத்தின் 'போற்றிப் பாடடி பெண்ணே'. அப்போது அவருக்கு வயது 6.

தான் நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என்பதையெல்லாம் தாண்டி என்டர்டெய்னராக இருக்க வேண்டும் என்பது தான் ஸ்ருதியின் ஆசை.

ஸ்ருதிக்கு மிகவும் பிடித்த படம் மகாநதி. நடிகர் சொல்லவே வேணாம் உலக நாயகன் தான்.

ஸ்ருதி நடிக்க வந்தது இயல்பாக நடந்தது. ஸ்ருதி நடிக்க வந்த போது அம்மா கொடுத்த அட்வைஸ் 'ஹார்ட் ஒர்க் பண்ணு' என்பது தான்.

தான் போல்டாக இன்டிபென்டன்ட் ஆக இருக்க காரணம் அப்பா தான் என்கிறார் ஸ்ருதி. அப்பாவைப் போல பொண்ணு!

விஷயம். இசை, நடிப்பைத் தாண்டி அவருக்கு எழுதுவதும் மிகவும் பிடிக்கும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுவேன் என்கிறார். அழகிய ரைட்டர்!

"எந்த லேங்வேஜா இருந்தாலும் வேலையைச் சரியா பண்ணலைன்னா வாய்ப்பு கிடைக்காது" நெபோட்டிசம் பற்றிய ஸ்ருதியின் கருத்து இதுதான்.

"மேக்-அப் போடாமல் இருந்தால் என்னை பலருக்கு தெரியாது. தெரிந்து வந்து பேசினால் பேசுவேன். விருப்பம் இருந்தா போட்டோ எடுக்க அனுமதிப்பேன்" என்கிறவர் காய்கறி வாங்க தானே சூப்பர் மார்க்கெட்டுக்கு செல்லக் கூடியவர். எளிமையும் அழகு.

"தனித்துவத்தை இழக்காதீங்க, மது அருந்தி வாகனம் ஓட்டாதீங்க, சீட் பெல்ட் கட்டாயம் அணியுங்க" என்றெல்லாம் கல்லூரி விழாக்களில் அட்வைஸ் பகிர்வார். தேவதை சொன்னா கேளுங்க பாஸ்! ஸ்ருதிக்கு ஹாப்பி பர்த்டே!