தமிழ் சினிமாவின் ஆல்ரவுண்டர் சிம்புவைப் பற்றிய 10 சுவாரஸ்யமானத் தகவல்கள் #HBDSilambarasan

பிரபாகரன் சண்முகநாதன்

சிம்பு சிறு வயதில் 'உறவை காத்த கிளி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி இன்றைக்கு மாநாடு வரை 30 ஆண்டுகள் திரைத்துறையில் இயங்குகிறார்.

படப்பிடிப்புத் தளத்தில் நுழையும்போது சின்னதாக ஸ்டெப் போட்டுக்கொண்டுதான் உள்ளே நுழைவார். மொத்த யூனிட்டையும் அந்த உற்சாகம் பற்றிக்கொள்ளுமாம்.

நடிகர், இசையமைப்பாளர், பாடகர், இயக்குநர் என ஆல்ரவுண்டர் ஆத்மன் சிம்புவிடம் மறைக்க எதுவும் இல்லை. சர்ச்சைகளோ பிரச்சனைகளோ அவருக்கு எப்போதும் தடையே இல்லை.

சிக்கன் சம்பந்தப்பட்ட உணவுகள் சிம்புவின் பேவரைட். எப்படியும் தினமும் உணவில் தவறாமல் இடம் பெறுமாறு பார்த்துக் கொள்வார்கள்.

ஆடை பிரியர். அவரது வீட்டில் ஒரு மிகப் பெரிய அறை ஆடைகளால் நிரம்பி வழிகிறது. எந்த நாட்டுக்குப் போனாலும் ஆடை வடிவமைப்பாளர்களை சந்தித்து விடுவார்.

சிம்புவின் ஆல்டைம் வெல்விஷ்ஸர்களாக மூன்று பேரைக் குறிப்பிடுவார். அப்பா, அம்மா, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்.

அடுத்து ஒரு படத்தை அப்பா மாதிரி இசையையும் சேர்த்து செய்யலாம் என்று முடிவில் இருக்கிறார். அதற்காக தம்பி குறளோடு சேர்ந்து சனி, ஞாயிறுகளில் பயிற்சியில் இருக்கிறார். சந்தேகம் வந்தால் அனிருத்தும் வந்து தீர்வு அளிக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசை ரொம்பவும் பிடிக்கும். நினைத்த நேரத்தில் அவரால் ரஹ்மானை சந்திக்க முடியும். அவரும் வித்தியாசமான புது பாடல் போட்டால் சிம்புவிற்கு அனுப்பி வைப்பார்.

Silambarasan

அண்ணாசாலையின் நட்சத்திர ஹோட்டலில் தான் ஷூட்டிங் நடக்கும்போது தங்குகிறார். நேரம் கழித்து வரும்போது அம்மாவை தொந்தரவு செய்ய விரும்புவதில்லை. அவருடன் அவரது நண்பர்கள் இரண்டுபேர் எப்போதும் துணைக்கு இருக்கிறார்கள்.

தங்கை இலக்கியாமீது ரொம்பவும் பிரியம். ஒரு மாதம்கூட தங்கை முகம் பார்க்காமல் இருக்க முடியாது. உடனே ஹைதராபாத் போய் தங்கையையும் தங்கை மகனையும் பார்த்துவிட்டு செல்லம் கொஞ்சி விட்டு வந்து விடுவார்.

காதல் கிசுகிசுக்களில் அதிகம் இடம்பெறும் சிம்புவின் கல்யாண அப்டேட்டுக்காக அவரின் ரசிகர்கள் வெயிட்டிங். ஹாப்பி பர்த்டே சிம்பு!