பிரபாகரன் சண்முகநாதன்
கிராமத்து பின்னணியில் யதார்த்தமான இளைஞனாக ராம் சரணை காட்டி, அழுத்தமான கதையை சொல்லிய ரங்கஸ்தலம் தற்போதைய தெலுங்கு சினிமாவின் ட்ரெண்ட் செட்டர்.
ரஸ்டிக் ஃப்ளேவரில் வரும் ராம்சரணின் இந்த படத்துக்கு இன்ஸ்பிரேஷன் நம்ம 'பருத்திவீரன்'தான்
லுங்கியை ஏத்திக்கட்டி, ஒரு பக்கம் தோளைத் தூக்கி, சித்தூர் வட்டார வழக்கைப் பேசி என தன்னை புஷ்பராஜாக மாற்றிக்கொள்ள பயங்கரமாக மெனக்கெட்டிருக்கிறார் அல்லு அர்ஜுன்.
'அலா வைகுந்தபுரமுலோ' படத்தில் செம ஸ்வாகாக இருந்தவர், 'புஷ்பா'வில் நல்ல பெர்ஃபார்மர் என நிரூபித்திருக்கிறார்
'பாகுபலி'யில் மிரட்டியவர், 'காடன்' படத்தில் மெலிந்து தன் உடல்வாகை மாற்றி உடல் மொழியை மாற்றி நடித்தது கவனிக்கப்பட்டது.
சாய் பல்லவி, ராணாவின் நடிப்பில் 'விரட்டப்பர்வம்' என்ற படம் வெளியாக காத்திருக்கிறது. நக்ஸலைட்டுகள் பத்தின கதை இது.
'அசுரன்' போல கிளாஸிக் படத்தை ரீமேக் செய்ய வெங்கடேஷ் எப்படி இந்த லுக்கிற்கு பொருந்துவார் என்ற கேள்விக்கு பதிலாய், படுமாஸாக வெளியானது 'நாரப்பா'வின் ஃபர்ஸ்ட் லுக் !
நானி படத்திற்கு படம் சேஞ்ச் ஓவர் காட்டி வருகிறார். ஜெர்ஸி' - கிரிக்கெட் படம், 'கேங் லீடர்' - ஃபேமிலி டிராமா, 'V' - நெகட்டிவ் ஷேட்.
'ஷியாம் சிங்கராய்' படத்தில் நானி டூயல் ரோலில் கலக்கியிருந்தார். பீரியட் போர்ஷனில் வரும் நானிதான் ஹைலைட் !
ரவிதேஜா தன் பங்கிற்கு தானும் ரஸ்டிக் படமொன்று நடிக்கவேண்டும் என்று நினைத்துவிட்டார். 'டைகர் நாகேஸ்வர ராவ்' என்பதுதான் படத்தின் பெயர்.