பிரபாகரன் சண்முகநாதன்
மே 1 அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான நாள். அஜித்துக்கு மாஸான பிறந்தநாள். அஜித் படங்களில் இடம்பெறும் பஞ்ச் வசனங்களுக்கு பயங்கர மாஸ் இருக்கும். அப்படியான வசனங்கள் இதோ.
``என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா"
``உடம்புல கை இருக்கும் கால் இருக்கும் மூக்கு இருக்கும் முழி இருக்கும் ஆனா உயிர் இருக்காது"
``காசுக்காக என்னவென்னலாம் பண்ணுவேன். ஆனா தன்மானத்துக்கு ஒரு தகராறுன்னா தலையே போனாலும்.. "
``என்னோட நண்பனா இருக்கத்துக்கு எந்தத் தகுதியும் வேணாம். ஆனா எதிரியா இருக்கதுக்கு தகுதி வேணும்.''
``சரித்திரத்த ஒரு நிமிஷம் திருப்பி பாருங்க. அது நமக்கு கத்து கொடுத்திருக்கது ஒன்னு தான். நாம வாழணுனா யாரை வேணாலும் எத்தனை பேர வேணாலும் கொல்லலாம்.''
``நீ எந்த சாதின்னு நினைக்கிறியோ நான் அந்த சாதி. இரத்தத்துல சாதியை பார்க்காத. மொத்தத்துல நான் உழைக்கிற சாதி.''
``ஜெயிக்கிறதுக்கு ஆயிரம் எதிரிகளை கொல்லலாம். தப்பில்லை. ஆனால் ஒரு துரோகிய உயிரோட விட்டா பெரிய தப்பு.''
``நான் பார்த்து பார்த்து தண்ணீர் ஊத்தி வளர்த்த வீட்டு மரம் கிடையாது. தானா வளர்ந்த காட்டு மரம். என்ன வெட்ட நினைச்சா கோடாரிகூட சிக்கிக்கும்.''
``நம்ம கூட இருக்கவங்கள நாம பார்த்துகிட்டா; நமக்கு மேல இருக்கவன் நம்மள பார்த்துப்பான்''
``திஸ் இஸ் மை *** கேம். இத எங்க ஆரம்பிக்கணும் எப்போ ஆரம்பிக்கணும் எப்போ முடிக்கணும்ங்கிறத நான் தான் முடிவு பண்ணணும்.''
அஜித்தின் ட்ரேட் மார்க் வசனமான `அது'ல தொடங்கி சமூக அக்கறை கொண்ட `நோ மீன்ஸ் நோ' வசனம் வரை அவரது முத்திரை பதித்த வசனங்கள் ஏராளம். அவற்றில் உங்களுக்கு பேவரைட் எது என்பதை கமென்டில் சொல்லுங்க.