`ஷாருக் கான் முதல் சன்னி லியோன் வரை!' வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற சினிமா பிரபலங்கள்

நந்தினி.ரா

வாடகைத் தாய் முறையில் குழந்தைப் பெற்றுக் கொள்வது என்பது சினிமா பிரபலங்களுக்கிடையே சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது. அந்த வகையில் வாடகைத் தாய் முறையில் குழந்தைப் பெற்றுக்கொண்ட சினிமா பிரபலங்கள் யார் யார் என்று பார்போம்.

குழந்தை நட்சத்திரமாகத் திரையுலகில் அறிமுகமான ஆமிர் கான் இந்தித் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருகிறார். பாலிவுட் ஜோடிகளான ஆமிர் கானும், கிரன் ராவும் அவர்களது மகன் ஆசாத் ராவ் கானை கடந்த 2011-ஆம் ஆண்டு வாடகைத் தாய் மூலம் பெற்றுள்ளனர்.

இந்தியில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ஷாருக் கான். அவரின் இளைய மகனான அப்ராம் கானை, ஷாருக் கானும் அவரின் மனைவியும் கடந்த 2013 ஆம் ஆண்டு வாடகைத் தாய் மூலம் பெற்றெடுத்துள்ளனர்.

ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா ஜோடிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அதில் முதல் குழந்தையைப் பெற்றுக்கொண்ட ஷில்பா ஷெட்டி தனது இரண்டாவது மகள் சமிஷாவை, கடந்த 2020 ஆம் ஆண்டு வாடகைத் தாய் மூலம் பெற்றுள்ளார்.

பாலிவுட்டில் மட்டுமின்றி அனைத்து திரையுலகிலும் பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். சன்னி லியோனும் வாடகைத் தாய் மூலம் தான் குழந்தை பெற்றெடுத்துள்ளார். சன்னி லியோன் – டேனியல் வெபர் ஜோடிக்கு வாடகைத் தாய் மூலம் ஆஷர், நோவா என்ற இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.

நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 2018ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகரான நிக் ஜோன்ஸை திருமணம் செய்துக்கொண்டார். பிரியங்கா சோப்ரா, நிக் ஜோன்ஸ் தம்பதியினரும் கடந்த ஜனவரி மாதம் மல்டி மேரி என்ற பெண் குழந்தையை வாடகைத் தாய் மூலம் பெற்றெடுத்துள்ளனர்.

பிப்ரவரி 7, 2017 அன்று தனது இரட்டைக் குழந்தைகளான யாஷ் மற்றும் ரூஹி ஜோஹரை வாடகைத் தாய் மூலம் தான் கரண் ஜோஹர் பெற்றார்.

பிரபல நடிகர் ஷ்ரேயாஸ் – தீப்தி ஜோடி வாடகைத் தாய் மூலம் 2017-ல் மகள் ஆத்யாவுக்கு பெற்றோராகி உள்ளனர்.

இந்த வரிசையில் தற்போது கோலிவுட் பிரபலங்களான நயன்தாரா - விக்னேஷ் சிவனும் இடப்பெற்றுள்ளனர். அவர்கள் இருவரும் வாடகைத் தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரப் பூர்வ தகவலை அவர்கள் தரப்பில் தெரிவிக்கவில்லை.