கதைசொல்லப்போன இயக்குநர் டு காதல் கணவர்; நயன்தாரா- விக்னேஷ் சிவன் காதல் கதை!

பிரபாகரன் சண்முகநாதன்

விக்னேஷ் சிவன் நயன்தாராவை முதலில் சந்தித்தது 'நானும் ரவுடி தான்' படத்திற்கு கதை சொல்வதற்கு போனபோதுதான்.

ஆட்டோவில் நயனுக்கு கதை சொல்லபோன போது விக்னேஷுக்கு இருந்த ஒரே எதிர்பார்ப்பு, கதை பிடிக்கலைனாலும் நயன்தாராவை நேரில் பார்க்கவாவது போகிறோம் என்பதுதான்.

ஆனால் நயனுக்கு கதை பிடித்து படப்பிடிப்பில் இயக்குநரையும் பிடித்துவிட்டது. காதல் பிறந்த கதையை இருவரும் பெரிதாக வெளியே பேசவில்லை.

படப்பிடிப்பில் இருவரும் காதலிக்கத் தொடங்குகின்றனர். அங்கு செட்டில் இருந்தவர்களுக்கேகூட இது தெரியாதாம்.

அதன் பிறகுதான் விஜய்சேதுபதிக்கே இந்தச் செய்தியைச் சொன்னதாக விக்னேஷ் சிவன் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டார்.

இருவரும் காதலிக்கிற செய்தி காற்றில் பரவிய போதும் அதனை அதிகாரபூர்வமாக இருவரும் பகிரவில்லை.

சிங்கப்பூரில் நடந்த விருதுகள் விழாவில் நயன்தாரா, தனக்கு விருது கொடுக்க விக்னேஷ் சிவனை ஸ்பெஷலாக மேடைக்குக் கூப்பிட்டார்.

நயன்தாரா சோசியல் மீடியாவில் இல்லை. அதற்கும் சேர்த்து விக்னேஷ் சிவன் தான் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களைப் பதிவேற்றுவார்.

கோவில், சர்ச், மசூதி, வெளிநாட்டு சுற்றுலா, வருடப்பிறப்பு என்றால் குடும்ப சந்திப்பு இப்படி தங்களின் நேரத்தை ஒன்றாக செலவிட்டனர் இருவரும்.

ஒரு தரமான படத்திற்கு பிறகு தான் தங்களின் திருமணம் என முடிவெடுத்தவர்கள் அதற்காக காத்திருக்கவும் செய்தனர்.

'காத்துவாக்குல ரெண்டு காதல்' படம் முடிஞ்சதும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன.

கதை சொல்லப்போன விக்னேஷ் சிவன் கரம் பிடித்த இவர்களின் காதல் கதையே ஒரு படத்திற்கான மெட்டிரியல். இன்றைக்கு திருமணம் செய்துகொண்ட கியூட் ஜோடிக்கு வாழ்த்துகள்.