ரோஜா மட்டுமல்ல; இவர்களும் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த கதாநாயகிகள்தான்!| Photo Story

பிரபாகரன் சண்முகநாதன்

சினிமாவின் புகழும் வெளிச்சமும் அரசியல் பாதையில் ஒளியாக அமையும் என இங்கு வந்தவர்கள் நிறைய பேர். அப்படி திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த கதாநாயகிகளைப் பற்றி பார்ப்போம்.

ரோஜா ஆந்திரா நகரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் நேற்று அம்மாநில அமைச்சராக பதவியேற்றுள்ளார். அவரது 20 ஆண்டுகால அரசியல் பயணத்தில் இதுவொரு மைல்கல்.

திவ்யா ஸ்பந்தனா பொல்லாதவன், வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் நடித்தவர். கர்நாடக மாண்ட்யா தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். அதன் பிறகு போட்டியிட்ட 2014 தேர்தலில் வெற்றி கிடைக்கவில்லை.

ஸ்ம்ரிதி ராணி மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் அமைச்சர் 2003-ல் பாஜகவில் இணைவதற்கு முன்பு சின்னத்திரை நட்சத்திரமாகவும் மாடலாகவும் இருந்தார்.

Nusrat Jahan பெங்காலி நடிகையான இவர் 2019 தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

Mimi Chakraborty மாடல், தொலைக்காட்சி, திரைப்பட நடிகை என பணியாற்றியவர் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Urmila Matondkar பாலிவுட் ஹீரோயின் உர்மிளா மலையாளம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். 2019 காங்கிரஸ் சார்பாக மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்டார். 2020 ஷிவ் ஷேனாவில் இணைந்தார்.

நக்மா இந்தி சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு மொழி சினிமாக்களில் வெற்றிப் படங்களில் நடித்தவர். காங்கிரசில் இணைந்து 2014 தேர்தலை எதிர்கொண்டார். காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பு வகிக்கிறார்.

siddamanohar

Srabanti Chatterjee பத்திரிக்கையாளராக தன்னுடைய பயணத்தைத் தொடங்கியவர் நடந்த முடிந்த ஐந்து மாநில தேர்தலில் பாஜக சார்பாக மேற்குவங்கத்தில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் வெற்றி பெறவில்லை.

தமிழக முதல்வராக இருந்த ஜெ.ஜெயலலிதா அவர்களும் சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயப்ரதா, குஷ்பூ என நீளமான பட்டியல் இது. இந்தப் பட்டியலில் உங்களுக்கு பேவரைட் யாரென கமென்டில் சொல்லுங்க,