நேற்று ஆங்கர்; இன்று ஆக்டர்; சின்னத்திரையைக் கலக்கும் நடிகைகள்! | Photo Story

பிரபாகரன் சண்முகநாதன்

ஆங்கர் பணியில் எக்கச்சக்க பொறுமை வேண்டும். ஆக்டர் பணியில் மெச்சத்தக்க வகையில் நடிக்க வேண்டும். சிலர் இரண்டிலும் கலக்கியவர்கள். அப்படி, `ஆங்கர் டு ஆக்டர்' ஆன சிலரை இங்கு பார்ப்போம்.

வைகா கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான அம்மன் சீரியலில் பாம்பாக நடித்தவர். மலையாளத்தில் ஏற்கெனவே படங்கள் நடித்திருந்தாலும் தமிழில் இவர் ஆங்கராக அறிமுகமாகி ஆக்டராக வலம் வருகிறார்.

விலாசினி @ ஹாசினி ரேடியோ சிட்டி ஆர்.ஜே, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர், ஆக்டர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பல முகங்கள் கொண்டவர் `பாவம் கணேசன்' சீரியலில் ஆக்டரும் ஆனார். இவர் இளையராஜாவின் சகோதரி மகள்.

திவ்யா கணேஷ் பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கதாபாத்திரத்தில் நடிக்கும் இவர் ஆக்டிங்குக்கு வருவதற்கு முன்பு செய்தி தொலைக்காட்சி ஒன்றில் அமானுஷ்யம் பற்றிய நிகழ்ச்சியைத் தொகுக்கும் பணியில் இருந்திருக்கிறார்.

தர்ஷினி கன்னடா ‘உதயா மியூசிக்’ தொகுப்பாளினியான இவர், தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சில்லுனு ஒரு காதல்’ தொடரின் கதாநாயகி. அந்த சீரியலில் மிடுக்கான போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அர்ச்சனா ஆதித்யா டி.வி-யில் ஆங்கராக அறிமுகமானவர் தற்போது, விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் `ராஜாராணி சீசன் 2'-ல் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ப்ரீத்தி குமார் தந்தி டிவியில் ப்ரோக்ராம் ப்ரொடியூசராக பணியைத் தொடங்கியவர் பின்னர் வி.ஜே இப்போ நடிகை. சன் டி.வி ‘வானத்தைப் போல’ தொடரிலும், ஜீ தமிழில் 'நினைத்தாலே இனிக்கும்’ தொடரிலும் நடித்து கொண்டிருக்கிறார்.

சங்கீதா `ஆங்கரிங்ல வாழணும்... சீரியலில் நடிக்கணும்..' என தத்துவம் பேசும் இவர் ஐடி துறையில் இருந்து ஆங்கர் பிறகு ஆக்டர். கனா காணும் காலங்கள் புது சீரீஸில் மலர் டீச்சர்.

ஜாக்குலின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமானவர் 'தேன்மொழி பிஏ' சீரியலில் லீட் கேரக்டராக நடித்துள்ளார். ஆக்டிங்குக்கு சென்றாலும் இன்னொரு பக்கம் விஜே ஆகவும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

திவ்யா விஜய் டிவியில் வேலைக்காரன் தொடரில் நடித்து வருபவர் முன்பு சமையல் மந்திரம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவர். அந்த நிகழ்ச்சி அவருக்குத் தைரியத்தைக் கொடுத்ததாகக் குறிப்பிடுகிறார்.

பார்வதி சன் டி.வி-யின் `வணக்கம் தமிழா' உட்பட பல நிகழ்ச்சிகளில் வி.ஜே-வாக அறிமுகமானவர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் `புதுப்புது அர்த்தங்கள்' தொடரில் கதாநாயகியாக நடிக்கிறார்.

ஃபரீனா அசாத் பாரதி கண்ணம்மா தொடர் வெண்பா என சொன்னால் தான் தெரியும். நெகட்டிவ் ரோலில் நடித்தாலும் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஏராளமான நிகழ்ச்சிகளில் ஆங்கராக பணியாற்றியுள்ளார்.

ஸ்வேதா சுப்பிரமணியன் 10 வகுப்பு படிக்கும் போதிருந்து ஏகப்பட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் டான்ஸ், ஆங்கரிங் என கலக்கி கொண்டிருந்தவர், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘சித்திரம் பேசுதடி' சீரியலில் நடித்து கொண்டிருக்கிறார்.

இவர்களில் உங்கள் பேவரைட் யார் என்பதைக் கமென்ட்டில் சொல்லுங்க.