Published:Updated:

`` `அவர் பெரிய ஆள்; கிண்டல் பண்ணாத'னு அப்பா சொன்னார்..!'' - `கொஞ்சம் நடிங்க பாஸ்' ஆதவன்

ஆதவன்
ஆதவன்

''எனக்கு 100 வாய்ஸ் பேசத் தெரியும் எனக் காண்பிக்க முயல்வதைவிட, எந்த வாய்ஸாக இருந்தாலும், அதில் பர்ஃபெக்டாக இருப்பேன் என்பதுதான் முக்கியம். அதை எல்லோருமே ஃபாலோ பண்ணணும்னு நினைக்கிறேன்'' என்கிறார் 'ஆதித்யா' ஆதவன்.

'ஆதித்யா டி.வி' தொடங்கிய காலத்திலிருந்து இப்போதுவரை தொகுப்பாளராக இருந்து வருபவர் ஆதவன். வி.ஜே, ஆர்.ஜே, மிமிக்ரி கலைஞர், உதவி இயக்குநர், நடிகர் எனப் பன்முகத் திறமை கொண்டவர். அவரிடம் பேசினேன்.

உங்களுக்கு மிமிக்ரி மீதான ஆர்வம் எப்போதிலிருந்து தொடங்கியது..?

''என் அம்மாகிட்ட இருந்துதான் எனக்கு இந்த வாய்ஸ் மீதான ஆர்வம் வந்தது. என் அம்மா ஒரு டாக்டர். நான் சிறுவனா இருக்கும்போது, அவங்க ஹாஸ்பெட்டலில் நடக்கும் விஷயங்களை சொல்லுவாங்க. அவங்க ஒவ்வொருவர் பத்தி சொல்லும்போது, அதை வேறு வேறு வாய்ஸில் பேசிக் காட்டுவேன். அதைப் பார்த்து அம்மா ரசிப்பாங்க. அந்த நேரத்தில், மயில்சாமி, லஷ்மணன் இருவரும் இணைந்து 'சிரிப்போ சிரிப்பு' என்கிற கேசட்டை வெளியிட்டாங்க. அவங்கதான் பலருக்குமான மிமிக்ரி ஆர்வத்துக்கு உரம் போட்டவர்கள். அந்த இன்ஸ்பிரேஷனை அப்படியே எடுக்க ஆரம்பிச்சுட்டேன்.''

உங்களுடைய முதல் வாய்ஸ் எது..?

ஆதவன்
ஆதவன்

''நான் முதன்முதலில் எடுத்த வாய்ஸ் கிருபானந்தவாரியாருடையது. நான் அவருடைய வாய்ஸை ரொம்ப நாள்களாகப் பேசுறது இல்ல. அவர் ஒரு மிகப்பெரிய ஸ்காலர் அவரை கிண்டல் பண்ணக் கூடாதுனு என் அப்பா சொன்னார். அன்றிலிருந்து இப்போது வரை அவருடைய குரலை எந்த மேடையிலும் பேசுவதில்லை. அப்பாக்கிட்ட பண்ணி காண்பிச்சதோடு சரி. அப்படி நிறைய விஷயங்களை அப்பா சொல்லிக் கொடுத்தார்.

ஆரம்பத்தில், மிமிக்ரி என்பது அத்தி பூர்த்தாற்போல் இருந்தது. பள்ளிக்கூடத்தில் 3,000 பேருக்கு மத்தியில் ஒரே ஒரு மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டா இருந்தேன். நான் பள்ளிக்கூடம் படித்த சமயம், 'அண்ணாமலை' படம் ரிலீஸ் ஆச்சு. அந்தப் படத்தில் வந்த டயலாக்கை என் நண்பர்கள்கிட்டப் பேசிக் காண்பிப்பேன். என்கூட இருக்கிறவங்க என்கிட்ட சினிமா கதைக் கேட்டா, நான் கதை மட்டும் சொல்லாம, அந்த நடிகர்களுடைய குரலில் படத்தின் மாஸ் டயலாக்கைப் பேசி காண்பித்து இதுதான் கதைனு சொல்லுவேன்.’’

நீங்கள் உதவி இயக்குநராகப் பணியாற்றிய படம் பற்றி..?

``அஜித் சார் கொடுத்த கிஃப்ட்; விரைவில் விஜய் சாரை இயக்குவேன்..!’’ - இயக்குநர் சிவா

'' 'குருவி' படத்திலிருந்து கிட்டத்தட்ட நான்கு வருஷம் தரணி சார்கிட்ட உதவி இயக்குநராக இருந்தேன். அதன் பிறகு தனுஷ் நடித்த '3' படத்தில் உதவி இயக்குநராக இருந்தேன். ’ஒய் திஸ் கொலவெறி’ பாடலில் ஆடியிருப்பேன்.''

ரஜினியின் தீவிர ரசிகராக மாறிய தருணம் நினைவில் இருக்கிறதா..?

`அந்த ஸ்டைல்னால ரஜினி இழந்தது என்ன தெரியுமா?' - மேக்கப் மேன் ஆர்.சுந்தரமூர்த்தி

'' ‘அன்புள்ள ரஜினிகாந்த்', 'மிஸ்டர் பாரத்' போன்ற படங்களில் இருந்தே ரஜினியின் தீவிர ஃபேன். ரஜினியின் ரசிகன் என்பது ஒரு ஃபீல். வார்த்தைகளால் அதைச் சொல்லவே முடியாது. 'பேட்ட' படத்தில் கார்த்திக் சுப்புராஜ் ஒரு சீன் வைத்திருப்பார். பாபி சிம்ஹா ஒரு பையனை மிரட்டிட்டு இருப்பார். அப்போ ஒரு விசில் வரும். அந்த சீன்ல ரஜினியின் தீவிர ரசிகர் என்பதை இயக்குநர் காட்டியிருப்பார். ரஜினியின் 'ஆடுபுலி ஆட்டம்' படத்தில் மகேந்திரன் சார் ரஜினியிடம் பேசியிருக்கிறார். அந்த வசீகர முகத்தைப் பார்த்த பிறகு, 'முள்ளும் மலரும்' படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்திருப்பார். அதுதான் ரஜினியிசம்.’’

ரஜினியை நீங்கள் முதன்முதலாக சந்தித்த தருணம்..?

ஆதவன்
ஆதவன்

'' ‘கொஞ்சம் நடிங்க பாஸ்' பார்த்து நல்லா இருந்ததாக ரஜினி சொன்னாராம். இதை எப்படி கன்ஃபார்ம் பண்றதுனு தெரியல. அந்த நேரம் 'லிங்கா' பட ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது. எனக்கு ராதாரவி நெருக்கம். அதனால் அவர்கிட்ட இந்த விஷயத்தைக் கேட்டேன். அடுத்த நாளே ரஜினியைப் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது. அவரைப் பார்த்ததும், என்னை அறிமுகப்படுத்தியபோது, 'தெரியுமே..! ஆதவன். 'கொஞ்சம் நடிங்க பாஸ்' ஹிட்டான ஷோவாச்சே'னு சிரிச்சிட்டே சொன்னார். அதுக்குமேல என்னப் பேசுறதுனே தெரியல. ஆடிப்போயிட்டேன்.''

உங்களுடைய மீடியா பயணம் எப்போது ஆரம்பித்தது..?

''2007-ம் ஆண்டு ரேடியோ மிர்ச்சியில் ஆர்.ஜே-வாகச் சேர்ந்தேன். 2008-ல் 'கலக்கப்போவது யாரு 4'-ல் வின்னர். பிறகு, ஆதித்யா டி.வி ஆரம்பிச்சப்போ என்னைக் கூப்பிட்டாங்க. இடையில் ரேடியோ மிர்ச்சியிலும் வேலை பார்த்தேன், சன் நெட்வொட்க்கிலும் வேலைபார்த்தேன். சினிமா மீதிருந்த ஆசையால் அதிலும் வேலைபார்த்தேன்.''

"நான் லேட்டஸ்டாக எடுத்துப் பேசிய வாய்ஸ் அஜித்துடையது.''
ஆதவன்

இப்போது வளர்ந்துவரக்கூடிய மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்களுக்கு உங்களின் அட்வைஸ்..?

Ajith, Nirav Shah
Ajith, Nirav Shah

''நான் மிமிக்ரி பண்ண காலகட்டத்தில் ஒரு விஷயத்தை புதுமையாகப் பண்ணேன். ஒரு நடிகரின் வாய்ஸை எடுக்கும்போது, அவருடைய எல்லா மாடுலேஷனையும் பேசணும்னு நினைப்பேன். அதேமாதிரி பேசிப் பார்ப்பேன். எனக்கு 100 வாய்ஸ் பேசத் தெரியும் எனக் காண்பிக்க முயல்வதைவிட, எந்த வாய்ஸாக இருந்தாலும், அதில் பர்ஃபெக்டாக இருப்பேன் என்பதுதான் முக்கியம். அதை எல்லோருமே ஃபாலோ பண்ணணும்னு நினைக்கிறேன். அதேநேரம், அவங்க குரலுக்கு எந்த வாய்ஸ் ஏற்றதோ அந்த வாய்ஸ்களை முயற்சி பண்றது நல்லது. நிறைய ஷோக்களில் நாங்க எந்த வாய்ஸையும் பேச மாட்டோம். வரக்கூடிய இளைஞர்களை பேச வைப்போம். அதனால்தான் இத்தனை வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட் வராங்க. நான் லேட்டஸ்டாக எடுத்துப் பேசிய வாய்ஸ் அஜித்துடையது.''

அடுத்த கட்டுரைக்கு