Published:Updated:

``நிஷா மாதிரியே ஒரு தைரியமான பெண் குழந்தையை கடவுள் பரிசா கொடுத்திருக்கார்!’’ - கணவர் ரியாஸ்

சின்னத்திரை காமெடி குயின், அறந்தாங்கி நிஷாவுக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது.  நிஷாவும் அவரின் கணவர் ரியாஸ் அலியும் செம ஹேப்பி. 

ரியாஸ், நிஷா
ரியாஸ், நிஷா

சின்னத்திரையின் காமெடி குயின் அறந்தாங்கி நிஷாவுக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது.  நிஷாவும் அவரின் கணவர் ரியாஸ் அலியும் செம ஹேப்பி.

நிஷா
நிஷா

கடந்த அக்டோபர் மாதம் விகடன் இணையதளத்தில் நிஷா அளித்திருந்த பேட்டியில், ``நான் துபாய் போயிட்டு ரெண்டு நாள் முன்னாடிதான் வந்தேன். என்னை ஏர்போர்ட்ல பார்த்த எல்லோருமே ஏன் இந்த சமயத்துல டிராவல் பண்றீங்கன்னு கேட்டாங்க. எல்லோருமே என் மேல இருக்கிற அக்கறையில், அன்பில்தான் கேட்குறாங்க. இந்த மாதிரி நேரத்துல டிராவலே பண்ணக்கூடாதுனு சிலர் அட்வைஸ் பண்ணாங்க. ஆனா, என்னைப் பொறுத்தவரைக்கும் நான் ரொம்ப தைரியமா இருக்கேன். வயித்துல இருக்கிற என் பிள்ளையும் தைரியமா இருக்கு.

என்னோட தன்னம்பிக்கைய இப்போவே என் குழந்தைக்குக் கொடுக்க ஆரம்பிச்சிட்டேன். நான் இவ்வளவு ரிஸ்க் எடுக்கக் காரணம், என் வேலை எனக்கு அவ்வளவு பிடிக்கும். என் வாழ்க்கையில நான் நிறையா அடி வாங்கியிருக்கேன். போராடியிருக்கேன். என் கணவர் அரசு வேலை பார்த்தாலும் பொருளாதார ரீதியா கஷ்டத்துலதான் இருக்கோம். எல்லா போராட்டத்தையும் தாண்டி மேல வர்றது ரொம்பக் கஷ்டம். அந்த இடத்தை நான் தக்க வெச்சிக்க நினைக்கிறேன். என் வயித்துல இருக்கும் என் குழந்தைக்காகவும் சேர்ந்துதான் ஓடுறேன்.

நிஷா
நிஷா

சில சமயம் கால்கள் வீங்கிடும். சோர்வா இருக்கும். அந்தச் சமயத்துல என்னோட காமெடி ஷோ வீடியோக்களைப் பார்ப்பேன். எனக்கு நானே என்கரேஜ் பண்ணிப்பேன். என்னால முடியும்... அவ்வளவு சீக்கிரத்துல சோர்ந்திடக் கூடாதுன்னு நினைச்சிப்பேன். அப்புறம், கடவுள் புண்ணியத்துல எனக்கு பிறக்கப்போகும் குழந்தை பெண் குழந்தையா இருக்கணும். என்னோட இந்த ஆசை நிறைவேறிட்டா இந்த வருஷம்தான் மகிழ்ச்சியான வருஷம். எந்தக் குழந்தையா இருந்தாலும் ஏத்துக்கணும்னு நான் மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ணுவேன். ஆனால், பெண் குழந்தை மீதான என் ஆசை அதிகரிச்சிட்டே இருக்கு. என் அம்மாவும் நானும் எல்லா சூழ்நிலையிலும் ஒருவருக்கொருவர் பலமா இருந்தோம். அதேமாதிரி எனக்கு என் பொண்ணு பக்கபலமா இருக்கணும்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

நிஷா எதிர்பார்த்தது போலவே அவருக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்தத் தகவலை அவரே தனது இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கிறார். குழந்தையின் பெயர், ``சஃபா ரியாஸ்’’.

நிஷா
நிஷா

அளவிட முடியாத மகிழ்ச்சியை நம்முடன் பகிர்ந்துகொண்ட நிஷாவின் கணவர் ரியாஸ், ``நிஷா ஆசைப்பட்ட மாதிரி பெண் குழந்தை பிறந்திருக்கு. கடந்த திங்கட்கிழமை வரை சென்னையில்தான் இருந்தோம்.`குக் வித் கோமாளி' ஷூட் போயிட்டிருந்தது. செவ்வாய்க்கிழமை வீட்டுக்குப் போனோம். கடைசி நேரம் வரைக்கும் அவங்களுக்கு பிடிச்ச காமெடி ஷோ பண்ணிக்கிட்டு இருந்தாங்க. ஒரே நாள்தான் நிஷா ஓய்வு எடுத்தாங்க. வியாழக்கிழமை காலை வலி வந்துருச்சு. நான் அலுவலகத்தில் இருக்கும்போது போன் பண்ணி, பதற்றமே இல்லாம `வலி வந்துருச்சி'ன்னு சொன்னாங்க.

ரியாஸ் அலி, அறந்தாங்கி நிஷா
ரியாஸ் அலி, அறந்தாங்கி நிஷா

நான் உடனே வீட்டுக்குக் கிளம்பிப்போய், அவங்களை திருச்சியில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கூட்டிட்டுப் போனேன். வலி வந்தப்போகூட பயப்படவே இல்ல, தைரியமா இருந்தாங்க. மாலை, சுகப் பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. அவங்க வேண்டுதல் வீண் போகலை. அவங்க நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதாதான் நடந்திருக்கு. கர்ப்ப காலத்தில் இப்படி ஷூட்டிங் ஷூட்டிங்னு ஓடுறாளேன்னு சொன்ன உறவினர்களும் இப்போ செம ஹேப்பி. நிஷா மாதிரியே ஒரு தைரியமான பெண் குழந்தையை எனக்கு கடவுள் பரிசா கொடுத்திருக்கார். ’’ என்று நெகிழ்ந்துவிட்டார்.

வாழ்த்துகள்!

``என் சூழல் வயித்துல இருக்க என் குழந்தைக்குத் தெரியும்!" - நெகிழும் அறந்தாங்கி நிஷா