வெளியிடப்பட்ட நேரம்: 16:09 (17/03/2015)

கடைசி தொடர்பு:16:09 (17/03/2015)

மாரி படக்குழுவினருக்கு தனுஷின் விருந்து!

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் நடித்த 'மாரி' படம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. படப்பிடிப்பு முடிந்த இறுதி நாளான நேற்று படப்பிடிப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் தனுஷ் விருந்தளித்துள்ளார்.

தனுஷின் வுண்டர்பாரும், ராதிகா சரத்குமாரின் மேஜிக் ஃப்ரேம்ஸும் இணைந்து 'மாரி' படத்தை தயாரித்து வருகின்றன. விஜய் யேசுதாஸ் இந்தப் படத்தின் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமாகிறார். படத்திற்கு இசை அனிருத்.

இதன் படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்தது. கடைசி நாளான நேற்று விருந்துக்கு ஏற்பாடு செய்த தனுஷ், தன் கையாலேயே அனைவருக்கும் விருந்து பரிமாறியுள்ளார். மேலும் இந்த படத்தில் அனிருத்தும் ஒரு குத்து பாட்டுக்கு நடனம் ஆடியுள்ளார். இதன் புகைப்படங்க்ள் இணையங்களில் தர லோக்கல் பாய்ஸ் என்ற பெயரில் டேகுடன் ஹிட்டடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

இப்படத்தை அடுத்து தனுஷ் பிரபு சாலமன் இயக்கத்திலும், வேல்ராஜ் இயக்கத்திலும் ஒரே நேரத்தில் நடிப்பார் என தெரிகிறது. ‘மாரி’ படத்தின் ஷூட்டிங் முடிவுற்றதையடுத்து ’ மாரி மீசையுடன் எனது கடைசி க்ளிக் என பாலாஜி மோகன் தனுஷின் மீசையை கத்தரிப்பது போல் ஒரு போஸ் கொடுத்து ட்விட்டரில் குறும்பாக ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் தனுஷ். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்