வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (03/08/2015)

கடைசி தொடர்பு:15:19 (03/08/2015)

வெறும் ’புலி’ இல்லடா ‘பாயும் புலி’ டா - ட்விட்டரில் ஆர்யா சீண்டல்!

 ஆகஸ்ட் இரண்டாம் தேதியான நேற்று ஒரே நாளில் ‘புலி’ மற்றும் பாயும் புலி’ படத்தின் இசை வெளியீடு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் விஷால், ஆர்யாவை இசை வெளியீட்டிற்கு வரவேண்டாம். சென்ற முறை நீ பத்த வைத்ததே போதும் என செல்லமாக ட்வீட் செய்தார். 

அதற்கு ஆர்யாவும் பதிலுக்கு எங்கள் அண்ணன் புரட்சி தளபதி, பாயும் புலி இசை வெளியீடு என ட்வீட் செய்திருந்தார். அத்துடன் நில்லாமல் இன்னொரு ட்வீட்டில் ‘ வெறும் புலி இல்லடா பாயும் புலி இசை வெளியீடு டா’. இது கொட்டை எடுக்காத புலி டா ’ புரட்சித் தளபதி விஷால் பில்டப் ஓகே வா மாமா” என சீண்டி விட்டுள்ளார். 

இதற்கு ரசிகர் ஒருவர் விஷாலின் மைண்ட் வாய்ஸ் இதுவாக இருக்கும் என ‘நான் நல்லா பண்றனோ இல்லையோ ஆனா நீ நல்லா பண்ற என பதில் கமெண்ட் கொடுக்க’ சும்மா ஜாலிக்கு ப்ரோ என ஆர்யா கமெண்ட் கொடுத்துள்ளார். எனினும் இது விஜய் ரசிகர்களிடம் சற்றே சலசலப்பை உருவாக்கியுள்ளது. \

ஏற்கனவே இவர் படம் புலி என வைத்தவுடன் விஷாலின் படத்திற்கு ‘பாயும் புலி’ என பெயர் வைக்கப்பட்டதே இப்போது வரை மிம்ஸ்களை உருவாக்கி பிரச்னைகள் நடந்துவரும் நிலையில் தற்போது இதுவேறு நடந்துள்ளது. 

பிரபலங்கள் கலந்துகொண்ட பாயும்புலி பட இசை வெளியீட்டு விழாவிற்கு: https://www.vikatan.com/cinema/album.php?&a_id=4566

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்