வெளியிடப்பட்ட நேரம்: 19:01 (25/09/2015)

கடைசி தொடர்பு:19:05 (25/09/2015)

ஆன்லைனில் வெளியாகும் குற்றம் கடிதல்!

தேசிய விருது பெற்ற குற்றம் கடிதல் படம் வெளிநாடு வாழ் தமிழர்களையும் மகிழ்ச்சிவிக்க ஆன்லைனில் வெளியாக இருக்கிறது. பிரம்மா இயக்கத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில் வெளியான படம் குற்றம் கடிதல். மாணவர்கள், ஆசிரியர்களுக்கான உறவை பிரதிபலிக்கும் படமாக வெளியாகியிருக்கும் இப்படம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்தப் படம் வெளியாவதற்கு முன்பாகவே சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது பெற்றுள்ளது. கோவாவின் பனோரமா மற்றும் ஜிம்பாப்வே சர்வதேச திரைப்பட விழா இவையிரண்டிலும் திரையிடப்பட்ட முதல் தமிழ்ப் படம் இதுதான் எனலாம். ஆயிரத்தில் ஒருவன், ஆரண்ய காண்டம் படங்களுக்குப் பிறகு மும்பை திரைப்பட விழாவில் கலந்துகொண்ட மூன்றாவது தமிழ்ப் படம் இந்தப் படமே. மேலும் கலந்துகொண்ட விழாக்களில் சிறந்தப் படத்திற்கான விருதைப் பெற்று வந்துள்ளது.

இந்நிலையில் பல வெளி நாடு வாழ் மக்களின் பார்வைக்கும் நல்ல தமிழ் படங்கள் சேர வேண்டும் என்ற நோக்கில் ஹீரோ டாக்கீஸ்.காம்தமிழ் படங்களை ஆன்லைனில் நல்ல தரத்தில் , குறைந்த விலையில், மேலும் 5.1. சரவுண்டிங்கில் விற்பனை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது குற்றம் கடிதல் படம் ஆங்கில சப் டைட்டிலுடன் வெளியாகியுள்ளது. லிங்கா, உத்தம வில்லன், பாபநாசம், என்னை அறிந்தால், மாரி, மாஸ் போன்ற படங்களை அடுத்து தற்போது குற்றம் கடிதல் படம் இங்கு வெளியாகும் அதே நாளில் ஆன்லைனிலும் வெளியாகியுள்ளது.இந்த முறை திருட்டுத்தனமாக ஆன்லைனில் டவுன்லோடு செய்துப் பார்க்கும் பழக்கத்திற்கும் முடிவுக் கட்டும் என்பதில் சந்தேகமில்லை. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க