Published:Updated:

போட்டோ தாக்கு

போட்டோ தாக்கு
பிரீமியம் ஸ்டோரி
News
போட்டோ தாக்கு

விளையாட்டுக்கும் சரி, அரசியலுக்கும் சரி, பொதுவான தத்துவம் குழிக்குள்ள தள்ளுறதுதான்.

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோ தாக்கு

எஸ்.சேக் சிக்கந்தர்

``அ.தி.மு.க ஆட்சியைத்தான் கலைக்க முடியலை... இதையாவது நல்லா கலைச்சு ஆடுப்பா!’’

@saravankavi

``அப்பா, அந்தப் பந்தைக் குறிபார்த்து சரியா தட்டுங்க!’’

``மொதல்ல உங்க தாத்தா சொன்னாரு, அப்புறம் அன்பழகன் சொன்னாரு, அப்புறம் துரைமுருகன், அப்புறம் வைகோ, இப்போ நீ சொல்லித் தர்றே..?

VKarthik

``பிரசாந்த் கிஷோருக்கு ஒரு போன் போடு தம்பி...’’

``எதுக்குப்பா..?’’

``எதுக்கும் ஒருவாட்டி அவர்கிட்ட ஆலோசனை கேட்டுக்கலாம்..!’’

@madakannu1

``விளையாட்டுக்கும் சரி, அரசியலுக்கும் சரி, பொதுவான தத்துவம் குழிக்குள்ள தள்ளுறதுதான். புரிஞ்சுது மை சன்!’’

@krishmaggi

“லைஃப் இஸ் எ கேம் மகனே... இங்கே தோக்குறவன் ஜெயிப்பான், ஜெயிக்கிறவன் தோற்பான்!’’

``ஆனா, நாம தோத்துக்கிட்டே இருக்கோமே டாடி..?’’

Ravikumar krishnasamy

``அந்தக் குச்சியைக் கொடுப்பா!’’

``எனக்கே உன் தாத்தா காலத்துக்குப் பிறகுதான் கிடைச்சுது! கொஞ்சம் பொறுத்துக்கோ!’’

@parveenyunus

``டாடி... அப்படியே அந்தக் குச்சியால பந்தை முட்டினா, அது குழிக்குள் போய் விழுந்துடும்.’’

``அது எனக்குத் தெரியும். காங்கிரஸை என்ன பண்ணினா அது கூட்டணிக்கு வெளியே போய் விழும்... அதைச் சொல்லு!’’

Sathia Moorthi

``அந்தப் பந்து அழகிரி, இந்தப் பந்து கனிமொழி, இரண்டையும் ஓரங்கட்டி அந்த உதயநிதி பந்தை எப்படி லாகவமா உள்ளே தள்ளுறேன் பாரு!’’

Ram aathinarayanan

``இதுக்கெல்லாம் `துண்டுச் சீட்டு’ தேவையில்லப்பா... பந்தைப் பார்த்து ஆடுங்க!’’

@vikneshmadurai

``என்ன மகனே... எப்படி அடிச்சாலும் விழ மாட்டேங்குதே?!’’’

``விடுங்கப்பா... `பில்லியர்ட்ஸ் விளையாடத் தெரியாது போடா’னு ஒரு டீ-ஷர்ட் போட்டுடலாம்!’’

Enos Ibrahim

``உதய்... இந்த தடவையாவது ஜெயிப்பேனா..?’’

``எடப்பாடிக்கு பில்லியர்ட்ஸ் எங்கே தெரியப்போகுது... நீங்கதான் ஜெயிப்பீங்க!’’

``உதய்... நான் 2021 தேர்தலைப் பத்திக் கேட்டேன்!?”

@Vkarthik_puthur

``அப்பா, நமக்கு நாமேன்னா என்னப்பா..?’’

``இந்த கேம்ல நீ ஜெயிச்சாலும், நான் ஜெயிச்சாலும் வெற்றி யாருக்கு..? நமக்குத்தானே... இதுக்குப் பேர்தான் மகனே நமக்கு நாமே!’’

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.