சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

காயம் ஆற்றும் காலம்!

யானைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
யானைகள்

கொட்டும் மழையில் நிகழ்ந்த இந்த சாகசம், அழகிய புகைப்படக் கவிதையாக...

காயம்பட்ட காட்டு யானையை மயக்க ஊசி போட்டு, கும்கி யானைகள் உதவியுடன் பிடித்துவந்து சிகிச்சை தருவது வழக்கம். நீலகிரி மாவட்டம் கூடலூரில் ‘சில்வர் மான்ஸ்ட்ரா’ என்ற பெயர் கொண்ட காட்டு யானை, மோசமான காயத்துடன் அவதிப்பட்டு வந்தது‌. மயக்க ஊசி செலுத்தினால் உயிருக்கே ஆபத்து என்பதால், தங்கள் உயிரைப் பணயம் வைத்து எட்டு கும்கி யானைகளின் துணையுடன் அதைச் சுற்றி வளைத்துப் பிடித்துவந்து க்ராலில் அடைத்து சிகிச்சை தந்தனர். கொட்டும் மழையில் நிகழ்ந்த இந்த சாகசம், அழகிய புகைப்படக் கவிதையாக...

இது என் காடும்கூட... மீண்டும் வருவேன் என கும்கியிடம் சொல்லிச் செல்கிறது அந்த நினைவில் காடு உறைந்துபோன மிருகம்.

காலில் கட்டப்பட்டிருந்த கயிற்றை மாற்றி மாற்றி இறுக்கியும் அவிழ்த்தும் மனிதர்கள் வழிநடத்த, உடனிருந்து அழைத்து வருகின்றன கும்கிகள்.

இதுவரை கண்டிராத ஒரு புதிய பயணத்திற்குத் தயாராகிறது மான்ஸ்ட்ரா

காட்டின் பிள்ளையை சிகிச்சைக்குக் கூட்டிச் செல்ல லாரியில் ஏற்றி, அங்கேயே முதலுதவி.

அடுத்த சில வாரங்களுக்கான தன் தற்காலிக வீட்டிற்குள் நுழைகிறது மான்ஸ்ட்ரா.

க்ராலை அடைத்துவிட்டு விடைகொடுக்கின்றன கும்கிகள், 'மீண்டுமொரு நாள் கானகத்தில் சந்திப்போம்' என்கிற வாக்குறுதியோடு.