Published:Updated:

``சீரியல் ப்ரோமோவுக்கு வர்ற கமென்ட்லாம் பார்க்கவே கஷ்டமா இருக்கும்!'' - `ஆயுத எழுத்து' ஆனந்த்

சரண்யா மற்றும் ஆனந்த்
சரண்யா மற்றும் ஆனந்த் ( ஆயுத எழுத்து )

`ஆயுத எழுத்து' சீரியலில் புதியதாய் கமிட்டாகியிருக்கும் ஆனந்துடன் ஒரு சிட் சாட்.

சின்னத்திரையைப் பொறுத்தவரை சீரியலின் நாயகியையும், நாயகனையும் தனித் தனியே மாற்றுவது சகஜமான ஒன்று. ஆனால், `ஆயுத எழுத்து' சீரியலில் ஒரே சமயத்தில் நாயகன், நாயகியென இருவரையுமே மாற்றியது சின்னத்திரை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. நாயகனகாக நடித்திருந்த அம்சத் கானுக்கு வெள்ளித்திரையில் வாய்ப்புகள் வந்ததால், சீரியலில் இருந்து விலகிக்கொண்டதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், சீரியலின் நாயகி ஸ்ரீத்து மாற்றப்பட்டதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. எது எப்படியோ... சீரியலின் புதிய ஜோடி சரண்யா மற்றும் ஆனந்த் ஆகியோருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியுள்ளது. சரண்யா ஏற்கெனவே பல்வேறு சீரியல்களில் நடித்து பரிச்சயமானவர்.

ஆனந்த்
ஆனந்த்

`போஸ்ட் மேன்' எனும் வெப் சிரீஸில் நடித்து பாராட்டுகளைப் பெற்ற ஆனந்த் செல்வன், இந்த சீரியலின் மூலம்  சின்னத்திரையில் அறிமுகமாகியிருக்கிறார். ஆறடி உயரம், கம்பீரத் தோற்றம், கிராமத்து இளைஞர், அந்த ரோலுக்கு அப்படியே பொருந்திப்போகும் முகம் என சக்தியின் கதாபாத்திரத்துக்குப் பலம் சேர்க்கிறார் ஆனந்த். சீரியலில் என்ட்ரியாகியிருக்கும் இவர், அது குறித்து நம்மிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

``நான் கோயம்புத்தூர் பையன். ஸ்கூல் முடிச்சதும், நடிப்புல ஆசை வந்துடுச்சு. விஸ்காம் படிக்கப் போறேன்னு வீட்ல சொன்னேன். ஆனா, அப்பா அம்மா வேண்டாம்னு சொல்லிட்டாங்க. சரின்னு அவங்க விருப்பப்படி காலேஜ் படிச்சு முடிச்சேன். அப்போவும் என் நடிப்பு ஆசை போகலை. ஒருபக்கம் பிசினஸ் பண்ணிக்கிட்டே, நடிக்கிறதுக்கும் என்னை நான் தயார்படுத்திக்கிட்டேன். அப்புறம் வீட்டை எதிர்த்து சென்னைக்கு வந்தேன்."

ஆனந்த்
ஆனந்த்
``நானும், என் மகளும் இருக்க எங்க முன்னாடியே மகாலக்ஷ்மிக்கு வீடியோ கால் போட்டு வெறுப்பேத்துவார்!'' -சீரியல் ஜெயஶ்ரீ

"சென்னையில சினிமாத் துறையைச் சேர்ந்த யாரையும் பெருசா தெரியாது. உதவி இயக்குநரான சக்தியை மட்டும்தான் தெரியும். அவர் மூலமா சில குறும்படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சதும், சின்னச் சின்ன வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. இன்னைக்கு வரைக்கும் என் வழிகாட்டி அவர்தான். சீக்கிரமே அவர் இயக்கின ஒரு படம் வெளியாகப்போகுது. அவருக்கு நான் ரொம்பவே கடமைப்பட்டிருக்கேன். சென்னை வந்து 3 வருஷமாச்சு. இந்த உழைப்புக்கெல்லாம் கிடைச்ச பலன்தான் `ஆயுத எழுத்து' வாய்ப்பு."

`` 'போஸ்ட் மேன்' வெப் சீரிஸ் பார்த்துட்டு என் நடிப்பு பிடிச்சிருந்ததால `ஆயுத எழுத்து' இயக்குநர் இந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கார். அதுமட்டுமல்லாம, ஏற்கெனவே `நாமிருவர் நமக்கிருவர்' சீரியலுக்கு ஆடிஷன் போயிருக்கேன். அந்த இயக்குநரும் என் பெயரை ரெஃபர் பண்ணியிருக்கார். எப்பவுமே ஒரு சீரியல்ல `இவருக்குப் பதில் இவர்'ன்னு போட்டாலே நெகட்டிவ் கமென்ட்ஸ் வர ஆரம்பிச்சிடும்."

ஆனந்த்
ஆனந்த்

``எனக்கும் நிறைய நெகட்டிவ் கமென்ட்ஸ் வந்துச்சு. நான் சீரியலுக்குப் புதுசு. இதுக்கு முன்னாடி மக்களுக்கு அடையாளம் தெரியிற மாதிரி எந்த சீரியலும் பண்ணதில்லை. அதனால என் நடிப்பு மீது நிறைய விமர்சனங்கள் எழுந்தது. சீரியல் ப்ரோமோவுக்கு வர்ற கமென்ட்லாம் பார்க்கவே கஷ்டமா இருக்கும்."

``நான் நடிக்கணும்னு முடிவு பண்ணி, சென்னை வந்த நாள்ல இருந்து லைஃப்ல நிறைய நெகடிவ்தான் நடந்திருக்கு. அதனால, இந்த வலி எனக்குப் பெருசா தெரியலை. நல்லா நடிச்சா மக்கள் மனசுல இடம் பிடிச்சிடலாம்னு நம்பிக்கை இருக்கு. அதுக்குத் தகுந்த மாதிரி நிறைய பாசிட்டிவ் கமென்ட்டும் வர ஆரம்பிச்சிருக்கு. சீரியலுக்கு நான் புதுசானாலும், என் டீம் செம ஜாலியா இருக்காங்க. என்னோட நடிக்கிற எல்லோரும் ரொம்ப சகஜமா என்கூட பழகுறாங்க. அப்புறம் ஒரு படத்துல கேரக்டர் ரோல் பண்ணியிருக்கேன். படமும் சீக்கிரம் வந்துரும்."

ஆனந்த்
ஆனந்த்

``எல்லாமே சரியா போய்கிட்டிருக்கு. அம்மா - அப்பாதான் இன்னும் கோவமா இருக்காங்க. இந்தத் துறையப் பார்த்து பயப்படுறாங்க. இந்த சீரியலை முடிச்சிட்டு வீட்டுக்கு வரச் சொல்றாங்க. என் அப்பா ஏர் ஃபோர்ஸ்ல இருந்து ஓய்வு பெற்றவர். அதனால, அவர் படிப்புக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பார். இந்தத் துறையில் நான் இருக்குறது பிடிக்கலைனாலும் `ஆயுத எழுத்து' சீரியல்ல நான் நடிச்ச எபிசோடு வரும்போது சொந்தக்காரங்களுக்கு போன் பண்ணிப் பார்க்கச் சொல்வாங்க. ஒரு கான்டாக்ட் விடாம போன்ல இருக்கிற எல்லோருக்கும் எஸ்.எம்.எஸ் பண்ணிடுவார் அப்பா."

``அம்மாவைப் பொறுத்தவரை நான் சொந்த ஊர்ல இருக்கணும். அவ்வளவுதான். என் அண்ணன் வெளிநாட்டுல இருக்கார். அவர்தான் எனக்கு ஃபுல் சப்போர்ட்.  `ஆயுத எழுத்து' சீரியல்ல என்னைப் பார்த்து, என் குடும்பத்தைவிட என் உறவினர்கள் ரொம்ப ஹேப்பி. சமீபத்துல, உறவினரோட கல்யாணத்துக்காக ஊருக்குப் போயிருந்தேன். எல்லோரும், `ஏன் கலெக்டரைக் கூட்டிட்டு வரலை; அந்தப் புள்ளையை பாவம் ரொம்பதான் கொடுமைப்படுத்துறீங்க; உன் அம்மா பேச்சைக் கேட்டுட்டு ஏன் இப்படி நடந்துக்குற'னு ஒரே சீரியல் பேச்சுதான். எனக்கு ஒரே சங்கடமா போயிடுச்சு. அதெல்லாம் சும்மா சீரியலுக்கு மட்டும்தான்னு சமாதானப்படுத்தினேன்" என சீரியலைப் பற்றி பேசி முடித்தார்.

ஆனந்த்
ஆனந்த்
`` `முன்னாடிக்கு இப்ப ரொம்ப அழகா இருக்க'னு டயலாக் வைக்கிறாங்க!'' - `ஆயுத எழுத்து' சீரியல் பிரச்னை

இன்ஸ்டாவில் தன்னுடைய சிறு வயது புகைப்படத்தையும், அண்மையில் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்திருந்த ஆனந்த், `மூணு வருஷத்துல இப்படி ஆகிவிட்டேன்' எனக் குறிப்பிட்டிருந்தார்.  மூன்று வருடத்தில் எப்படி இவ்வளவு பெரியவனாக வளர்ந்தாய் என்று ரசிகர்களும், நண்பர்களும் அவரைக் கலாய்த்து வருகின்றனர்.

ஆனந்த்
ஆனந்த்

உங்களுடைய வயசு என்ன என்று அவரிடம் கேட்க, ``ப்ளீஸ் என் வயசு மட்டும் கேட்காதீங்க. நான் ரொம்பச் சின்னப் பையன். அப்போ ரொம்ப ஒல்லியா உயரமா இருந்தேன். அதனால எல்லாரும் கிண்டல் பன்ணுவாங்க. `என்னை இப்படி ஓட்றாங்களே'னு எனக்குள்ள ஃபைர் வந்துச்சு. எப்படியாச்சும் வெயிட் போட்டு சினிமாவுல நடிக்கணும்னு ஆசை வந்துடுச்சு. `வாரணம் ஆயிரம்' படம் வந்தப்போ, ஜிம் போய் உடம்பை ஏத்தினேன். அவ்வளவுதான்’’ என்று சொல்லி நகர்ந்தார்.

அடுத்த கட்டுரைக்கு