ட்விட்டரில் தனது ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸை அப்டேட் செய்த ஓவியா..!

தமிழ் சினிமாவில் பல படங்கள் நடித்திருந்தாலும் பெரிதும் பிரபலமாகாமல் இருந்தவர் ஓவியா. இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற பிறகு, ஓவியாவின் நடவடிக்கைகள் பலருக்கும் பிடித்துப்போக ஓவியா ஆர்மியை ஆரம்பித்து அதகளம் பண்ணினார்கள் அவரது ரசிகர்கள்.

ஓவியா ட்வீட்

பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் சக போட்டியாளரான ஆரவ்வை ஓவியா காதலிப்பதாக கமலிடம் சொன்னார். தனது முடிவில் உறுதியாக இருப்பதாகவும் அவர் சொல்லியிருந்தார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த ஓவியா, ரசிகர்களை சந்திக்கும் போதும், அவரே பேசி வெளியிட்ட செல்ஃபி வீடியோவிலும் தான் ஆரவ்வை காதலிப்பதாக சொல்லியிருந்தார். அது தனது விருப்பம் தயவுசெய்து அதைப் பற்றி யாரும் கேட்கவேண்டாம் என்றும் சொல்லியிருந்தார். தனது முடிவில் உறுதியாக இருந்த ஓவியா தற்போது ட்விட்டரில், single and satisfied என அவரது ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸை ட்வீட் செய்துள்ளார். ஆரவ்வை காதலிப்பதாக சொல்லிவந்த ஓவியா, தற்போது சிங்கிள் என தனது ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸை மாற்றியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!