Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“சமையல்ல இருந்து சண்டை வரை... எல்லாமே ரியல்னு சொன்னார்!” வையாபுரி மனைவி #BiggBossTamil

பிக் பாஸ் வையாபுரி

" 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு முன்னும் பின்னும் என்கிற அளவுக்கு எங்க வாழ்க்கை பெரிய அளவில் மாறியிருக்கு. பணம், புகழைவிட அன்பு நிறைந்தவராக என் கணவர் வீட்டுக்கு வந்திருக்கிறார்" என நெகிழ்ச்சியாகப் பேசுகிறார் ஆனந்தி. 'பிக் பாஸ்' போட்டியிலிருந்து இரு தினங்களுக்கு முன்பு எலிமினேட் செய்யப்பட்டு, வீடு திரும்பியிருக்கும் கணவர் வையாபுரி பற்றி பேசுகிறார்.

"சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சியைப் பார்க்க நான் போகலை. அன்னிக்கு என் வீட்டுக்காரர்தான் எலிமினேட் ஆகியிருக்காரு. அதனால், இரவு வீட்டுக்கு வந்துட்டார். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீர்னு வந்து நின்னதும் இன்ப அதிர்ச்சியில் அழுதுட்டேன். 'எதுக்கு அழுறே? எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது. புது வையாபுரியா வந்திருக்கேன்'னு சொன்னார். நானும் பிள்ளைளும் சந்தோஷப்பட்டோம். ஆரத்தி எடுத்து அவரை வீட்டுக்குள்ளே கூட்டிட்டுப் போனேன். 

வையாபுரி குடும்பம்

வீட்டுக்குள்ள வந்ததும் உணர்ச்சிவசப்பட்டவராக இருந்தார். 'பிக் பாஸ்' வீட்டில் ஒரே குடும்பமா இருந்தோம். தினந்தினம் சண்டை சச்சரவு, காமெடி, கிண்டல்னு இருக்கும். இனி அதெல்லாம் எனக்குக் கிடைக்காது'னு ஃபீல் பண்ணினார். அப்புறம், 'இத்தனை நாளா உன்னையும் குழந்தைங்க ஷ்ரவன், ஷிவானியையும் புரிஞ்சுக்காம இருந்துட்டேன். உங்களை நிறையவே காயப்படுத்தியிருக்கேன். இதுக்கெல்லாம் எவ்வளவு ஸாரி கேட்டாலும் போதாது. இனி நான் அன்பானவனா நடந்துக்குவேன்'னு சொன்னார். 'எங்களுக்கும் உங்க மேல நம்பிக்கை இருக்குது'னு சொன்னோம். அன்னிக்கு முழுக்கவே தூங்காமல் பேசிட்டே இருந்தோம். 'பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்குறது ஸ்கிரிப்ட்டுனு சொல்றாங்க. அங்கே நடந்ததெல்லாம் உண்மைதானா? மறைக்காமச் சொல்லுங்க'னு கேட்டோம். 'ஸ்கிரிப்டா இருந்தா அது எங்க முகத்தில் செயற்கையா வெளிப்பட்டிருக்கும். சமையலிலிருந்து சண்டை வரைக்கும் எல்லாமே ரீல் இல்லை. ரியலா நடந்த விஷயம். அந்த வீட்டில் இருக்கிற எல்லாப் போட்டியாளர்களும் அவங்க துணியைத் துவைச்சு அயர்ன் பண்ணிக்கணும். கண்டிப்பா சமைக்கணும். அதெல்லாம் போகத்தான், டாஸ்க் செய்றதும் பேசிக்கிறதும்'னு சொன்னார்" என்கிற ஆனந்தி, நவராத்திரியைக் கணவருடன் சேர்ந்து சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளார்.

“போன வாரம் செஞ்ச எல்லா டாஸ்குமே கஷ்டமா இருந்துச்சுனு சொன்னார். ஞாயிற்றுக்கிழமை நாங்க அவர் எலிமினேஷன் ஆகும் எபிசோடைப் பார்த்தோம். சொந்த பந்தங்களுக்கு போன் பண்ணி மனம்விட்டுப் பேசினார். இனி மேல் உங்களை அடிக்கடி அவுட்டிங் கூட்டிட்டுப்போவேன். உங்க தேவைகளைப் பூர்த்திசெய்வேன்'னு சொன்னார். நேற்று பொண்ணைக் கூட்டிட்டு அவுட்டிங் போனார். பிக் பாஸ் வீட்டில் நிறைய டிஷ் சமைச்சேன்னு சொன்னதும், 'எனக்குச் சமைச்சுக் கொடுக்கமாட்டீங்களா?'னு கேட்டேன். 'என்ன வேணும்னு சொல்லு. செய்துகொடுக்கிறேன்'னு சொன்னார். 'ரெண்டு நாள் ரெஸ்ட் எடுங்க. அப்புறம் நீங்க எது செஞ்சுக் கொடுத்தாலும் நான் சாப்பிடுறேன்'னு சொல்லியிருக்கேன். அவர் முன்னைவிட ரொம்பவே ஒல்லியாகிட்டார். அதுதான் வருத்தமா இருக்குது. அதனால், அவருக்குப் பிடிச்ச உணவை செய்துகொடுக்கிறேன். அவர் இல்லாமதான் எங்க வீட்டுல விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி நிகழ்ச்சிகளைக் கொண்டாடினோம். இப்போ வந்துட்டதால், நவராத்திரியைச் சிறப்பா கொண்டாடத் திட்டமிட்டிருக்கிறோம். அவர் வெளியே வரும்போது சக போட்டியாளர்கள் அழுதது அவர் மேல வெச்சிருக்கும் அன்பைக் காட்டுச்சு. அதனால், அவருக்கு நிறைய நல்ல பெயரும் புகழும் கிடைச்சிருக்குது. 

மனைவியுடன் வையாபுரி

84 நாளாக 'பிக் பாஸ்' வீட்டிலிருந்தது பெரிய விஷயம்தான். ஆனா, சமீபத்தில்தான் ரொம்பவே கான்ஃபிடன்டா எல்லா டாஸ்கையும் செய்ய ஆரம்பிச்சார். அதனால், இன்னும் ரெண்டு வாரம் அந்த வீட்டில் இருந்திருந்தால் இன்னும் சந்தோஷப்பட்டிருப்பேன். எங்களை குடும்பத்தோடு 100 வது நாள் விழாவுக்கு வரச் சொல்லியிருக்காங்க. கட்டாயம் கலந்துகிட்டு, ஃபைனலுக்கு வரும் போட்டியாளர்களை உற்சாகப்படுத்துவோம். 'பிக் பாஸ்' வீட்டில் காமெடி பண்ணி எல்லாப் போட்டியாளர்களையும் சிரிக்கவெச்சாரு. தொடர்ந்து நிறைய படங்களில் நடிச்சு புகழ்பெறுவார்னு மனசார நம்பறேன். நாங்க எல்லோருமே ரொம்ப ரொம்ப ஹேப்பி" எனப் புன்னகைக்கிறார் ஆனந்தி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?