பிக் பாஸில் வெற்றிபெறத் தகுதியானவர் யார்..? உங்கள் கருத்து என்ன? #VikatanSurvey

‘14 பிரபலங்கள், 30 கேமராக்கள், 100 நாள்கள், ஒரே வீட்டில்’ என்ற அறிவிப்புடன் தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் மாஸ் ரெஸ்பான்ஸ். சமீபகாலமாக அரசியல் கருத்துக்களை ட்வீட்டி வரும் கமல்ஹாசன்தான் தொகுப்பாளர் என்ற சிறப்பும் இணைய... ‘பிக் பாஸ்’க்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு. 

bigg boss

பிக் பாஸ் தொடர்பாக விகடனில் வெளிவந்த கட்டுரைகளை காண இதை க்ளிக் செய்யவும்...

14 பிரபலங்களில் 13 பேர் ஓரணியாக நின்று பரணியை தனித்துவிட்டது, ஓவியாவை ஒதுக்கியது, ஆரவ்வின் மருத்துவ முத்தம், சினேகனின் கட்டிப்பிடி வைத்தியம், கணேஷ் வெங்கட்ராமால் காணாமல் போன முட்டைகள், அந்நியன் மோடுக்கு சென்ற ஜூலி, ‘சீராக’ இல்லாத காயத்ரி, ட்ரிகர் ஷக்தி... இப்படி சர்ச்சையும் சலசலப்புமாக கழிந்தன  பிக் பாஸ் வீட்டின் ஒவ்வொரு நாளும். இப்படி பயணமாகிவந்த பிக் பாஸ் இந்த வார சனிக்கிழமையோடு(30/09/2017) முடிவடைகிறது. 

பல எலிமினேஷன்களுக்குப்பிறகு தற்போது வீட்டில் எஞ்சியிருப்பது, சினேகன், கணேஷ்வெங்கட்ராம், ஆரவ், ஹரிஷ் கல்யாண் ஆகிய நான்கு பேர் மட்டுமே. இறுதி வாரத்திற்கு முன்னேறிய பிந்து நேற்றுதான் வெளியேறினார். இருந்தாலும் இந்த நால்வரில் பிக் பாஸ் டைட்டிலை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுவது இயல்புதான். 

இந்த நால்வரில் உங்களின் தேர்வு யாராக இருக்கும்? நீங்கள் யாருக்கு வாக்களிப்பீர்கள்... என்பதை இந்த சர்வேயில் உங்கள் வாக்காக பதிவிடுங்கள். 

அதற்கு முன்பாக பிக் பாஸ் போட்டியாளர்களின் பொதுவான பிளஸ் அண்ட் மைனஸ்களாக சொல்லப்படும் விஷயங்களை தெரிந்துகொள்ளுங்கள்:

சினேகன் :

சினேகன்

ஏழ்மையான விவசாய குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர். அதனால் எந்த ஒரு டாஸ்க்கையும் யோசிக்காமல் கலந்துகொண்டவர். அழுக்கு துணிகளை துவைப்பது, இஸ்திரி போடுவது, வீட்டு வேலைகளை இழுத்துப்போட்டு செய்வது... இப்படி மற்ற போட்டியாளர்கள் செய்யத் தயங்கும், செய்யத் தெரியாத விஷயங்களை இவர் செய்வது இவரின் பலம். ஆனால், ‘அந்த வீட்டின் கட்டுப்பாடே தன் கையில்தான் இருக்க வேண்டும்’ என்ற இவரின் ஆழ்மன எண்ணம்  செயல்பாடுகளில் வெளிப்படுத்துவது இவரது மைனஸ். 

ஆரவ் :

ஆரவ்

பெண்களை ஈர்க்கும் வசீகரன் , ஃபிட்டான உடல்வாகு... ஆணழகனுக்கான அத்தனை அம்சங்களும் ஒருங்கே பெற்றவர். பாகுபாடு இன்றி அனைவரிடமும் பழகும் குணம், எந்த டாஸ்க்காக இருந்தாலும் யோசிக்காமல் செய்வது, சக போட்டியாளர்களை அனுசரித்து செல்வது... என இவருக்கு பல பிளஸ்கள். ஆனால் தமிழக மக்களின் செல்லப்பிள்ளையாகிப் போன ஓவியா விஷயத்தில் இவர் நடந்துகொண்ட விதம் இவருக்கு மைனஸாக ஆகக்கூடும். 

கணேஷ் வெங்கட்ராம் :

கணேஷ் வெங்கட்ராம்

‘நாம யார் வம்புக்கும் போறதில்ல, யார் தும்புக்கும் போறதில்ல... நாம உண்டு நம்ம சோலி உண்டுனு போயிர்றது’..’ என்ற வடிவேலுவின் டயலாக்கையை வாழ்க்கையாக்கி  வாழ்ந்து வரும் கணேஷ் வெங்கட்ராமுக்கு பலமும் அதுதான், பலவீனமும் அதேதான். புதிய போட்டியாளராக சுஜா வீட்டிற்குள் வந்தப்பிறகு, அவரும் இவரும் சேர்ந்து ஆடிய ‘Buddy ஆட்டம் பலரையும் எரிச்சலடைய வைத்தது. அது கணேஷுக்கு எதிராக திரும்பலாம். 

ஹரிஷ் :

ஹரிஷ்

பிக் பாஸ் வீட்டில் குறைவான நாள் இருந்தவர் ஹரிஷ் கல்யாண். ‘இவர்தான் ஆரவ்விற்கு கடும் போட்டியாக இருப்பார்’ என பலரும் நினைத்தனர். ஆனால், இவர் வந்த நாள்முதல் ஆரவ்வுடன் முஸ்தஃபா முஸ்தஃபா ஃப்ரெண்டாகிவிட்டார். சமீபத்தில் ‘பிக் பாஸ் வீட்டில் யார் நல்ல நடிகன்’ என்பதை தேர்ந்தெடுக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் ஹரிஷ்தான் வீட்டில் இருப்பவர்களில் போலித்தன்மை இல்லாத இயல்பானவர் என முடிவானது. இதுதான் ஹரிஷின் மிகப்பெரிய ப்ளஸ். அதேபோல், எந்த ஒரு சின்ன பிரச்னை என்றாலும் சட்டென அப்செட் ஆகும் குணம், வீட்டுக்கு போகும் மனநிலைக்கு வந்துவிடும இயல்பு... இவை ஹரிஷின் மைனஸ். 

இவை பிக் பாஸ் போட்டியாளர்களின் பொதுவான ப்ளஸ் அண்ட் மைனஸ் மட்டுமே. மற்றபடி நீங்கள் யாருக்கு வாக்களிக்க நினைக்கிறீர்களோ அவருக்கு உங்கள் வாக்கை அளியுங்கள்.

 

Don't miss this

loading...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!