Published:Updated:

மிஸ்டர் பிக்பாஸ்... பிந்து மாதவிக்கு ஏன் இப்படி பண்ண நீ?! 95-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

மிஸ்டர் பிக்பாஸ்... பிந்து மாதவிக்கு ஏன் இப்படி பண்ண நீ?! 95-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate
News
மிஸ்டர் பிக்பாஸ்... பிந்து மாதவிக்கு ஏன் இப்படி பண்ண நீ?! 95-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

மிஸ்டர் பிக்பாஸ்... பிந்து மாதவிக்கு ஏன் இப்படி பண்ண நீ?! 95-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

மிஸ்டர் பிக்பாஸ்... பிந்து மாதவிக்கு ஏன் இப்படி பண்ண நீ?! 95-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

க்ளைமேக்ஸ் நெருங்கிவிட்டபடியால் இத்தனை நாள் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்த ‘மாணிக்கம்’  பிக்பாஸ், மீண்டும் தனக்குள் இருந்த ‘பாட்ஷா’ பிக்பாஸை வெளிக்கொண்டு வந்த நாள் இன்று. ஆம் பார்வையாளர்கள் ஃபைனல்ஸுக்குத் தயாராவதற்கான நெருப்பைப் பற்ற வைக்க நாளின் இறுதியில் சிறப்பான சம்பவம் ஒன்றை நிகழ்த்திவிட்டார். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நேற்றைய ‘திருடா திருடா’ டாஸ்க்கில் ஹரிஷ் வெற்றிகரமாக வைரத்தைத் திருடியிருந்தார். அதிலிருந்து தொடங்கியது இன்றைய நாள். காலை 8 மணிக்கு  ‘தாரை தப்பட்டை’ படத்திலிருந்து ‘வதன வதன வத வடிவேலனே’ பாடல்   ‘வேக்கப் சாங்’காக ஒலித்தது. வைரத்தைப் பறிகொடுத்த துக்கத்தில் கொஞ்சம் அசந்து தூங்கிவிட்டார்கள். 8 மணி வரை யாருமே எழுந்திருக்கவில்லை. பிறகு ஒவ்வொருவராக எழுந்து வெளியே வந்து ஆட, ஹரிஷ்  ‘ஆளை விடுங்கடா’ என்று கையெடுத்துக் கும்பிட்டு மீண்டும் Sleep Mode க்குப் போனார். பிந்துவும் ஆரவ்வும் சேர்ந்து ஆட, சிநேகன் ’Snake’கன்னாக மாறி மகுடி வாசித்துக் கொண்டிருந்தார். 

மிஸ்டர் பிக்பாஸ்... பிந்து மாதவிக்கு ஏன் இப்படி பண்ண நீ?! 95-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

ஆட்டம் முடிந்தது உள்ளே போனதும் ஆரவ்விடம் தனது புலன் விசாரணையைத் தொடங்கினார் சிநேகன். அவர் கவிஞரென்றபடியால் புலவன் விசாரணை என்றுகூடச் சொல்லலாம். ‘மதர் ப்ராமிஸ்..   கமல் சார் ப்ராமிஸ்.. நான் எடுக்கலை’ என்று ஆரவ் தனது நேர்மைக்கு கமலை ஜவாப்தாரியாக்கிக் கொண்டிருந்தார். கமல் மீதே சத்தியம் செய்துவிட்டபடியால் சிநேகனுக்கு ஆரவ் மீதிருந்த சந்தேகம் நீங்கியிருக்கும். ‘வண்ணாரப்பேட்டைல பாவாடை காணாம போனக்கூட என்னைதான் சொல்றாங்க’ என்று ஆரவ் தனது வழக்கமான கவுன்டரை எடுத்துவிட்டார். ‘எப்படி தூக்கிருப்பாங்க?’ என்று ஃபீலிங்க்ஸ் காட்டியபடியே படுக்கையறைவிட்டு வெளியேறினார் ஹரிஷ் (கேசுவலா இருக்காராம்..!). ‘பேண்ட் பாக்கெட்டை கவனிச்சேன் அதுல இல்ல’ என்று பிந்துவும்.. ‘ஹரிஷ் ரியாக்ஸனே வேற மாதிரி இருக்கு’ என்று ஆரவ்வும்… ஹரிஷ் மீதான தங்கள் சந்தேகத்தைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

ஹரிஷ் பாத்ரூமை க்ளீன் செய்வதற்காகச் செல்ல, சிநேகன் கணேஷை அழைத்து ஹரிஷைப் பின்தொடர்ந்து நடவடிக்கைகளைக் கண்காணிக்கச் சொன்னார். கணேஷ் கிளம்பியதும் ஆரவ், ‘அந்தாளு போய் ஓப்பனா சொல்லப்போறாரு.. சிநேகன் உங்களை ஃபாலோ பண்ணச்சொன்னாருனு’ என்று சொல்லிக்கொண்டிருக்க, அது என்ன பிரமாதம் அதைவிட ஸ்பெஷல் ஐட்டம் இருக்கு என்பதுபோல கணேஷ் திரும்பிவந்து, ‘இல்ல உண்மைலயே பாத்ரூம்தான் க்ளீன் பண்றாரு’ என்றார். ‘லாரிக்குள்ள கடத்தல் பொருள் ஒண்ணும் இல்ல சார்.. அவன் கடத்துனதே லாரியத்தான்யா’ காமெடிதான் நினைவுக்கு வந்தது.

மிஸ்டர் பிக்பாஸ்... பிந்து மாதவிக்கு ஏன் இப்படி பண்ண நீ?! 95-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

**

ஹரிஷைக் கன்ஃபஷன் ரூமுக்கு அழைத்து அவர் கையில் ஒரு சூட்கேசைக் கொடுத்து அனுப்பினார் பிக்பாஸ். ஹரிஷ் எல்லாரையும் அழைத்து அதைத் திறக்க 13 லட்சம் என்று எழுதப்பட்டிருந்தது. நேற்றைய 11 லட்சம் டீல் படியாததால் இன்னும் கொஞ்சம் உயர்த்தியிருக்கிறார்கள். வழக்கம்போல் அதே டயலாக்.. இந்தத் தொகையை எடுத்துக்கொண்டு வெளியேறலாம். ம்ஹூம் ஒரு பயலும் மதித்ததாகத் தெரியவில்லை. நல்லவேளையாக ‘தமிழ் மக்கள்’, ‘தர்ம யுத்தம்’ என்றெல்லாம் மீண்டும் வசனம் பேசாமல் இந்த முறை டீசண்டாக எழுந்து சென்றுவிட்டார்கள். ‘போய் தொலையானு சொல்லிப்பாக்குறாங்க கேட்க மாட்டேங்குறீங்களே’ என்று சிநேகனைக் கலாய்த்தார் ஆரவ்.

மிஸ்டர் பிக்பாஸ்... பிந்து மாதவிக்கு ஏன் இப்படி பண்ண நீ?! 95-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

ஹவுஸ் மேட்ஸ் அனைவரையும் லிவிங் ரூமில் உட்காரவைத்து டிவியில் ஹரிஷ் திருடியதை குறும்படமாக ஓட்டினார்கள். ‘நான் அப்பவே சொன்னேன்’ என்று ‘அருணாச்சலம்’  வி.கே ராமசாமியைப்போல் ரியாக்ஸன் கொடுத்தவாறே பார்த்துக்கொண்டிருந்தார்கள். வைரத்தை எங்கே மறைச்சு வச்சிருக்கீங்க என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் மௌனகுருவாக இருந்தார் ஹரிஷ். பிக்பாஸ், ஹரிஷ் வெற்றிபெற்றதாக அறிவித்து வைரத்தை எடுத்து வந்து டேபிள் மேல் வைக்கச் சொன்னார். ஹரிஷ் வைரத்தை எடுக்கச் செல்ல, ‘எங்கே இருந்ததுனு பாப்போம்’ என்று ஆரவ்வும் கணேஷூம் பின்தொடர்ந்தார்கள். டாய்லெட்டுக்குள் இருந்து வைரத்தை எடுத்து வந்து டேபிளில் வைத்தார். ‘நீங்க டான்ஸ் பண்ணலைன்னதும் சந்தேகப்பட்டேன்’ என்ற கணேஷின் கேள்விக்கு, ‘எனக்கு வயித்துவலி அதான் டான்ஸ் ஆடல’ என்று ஒண்ணாங்கிளாஸ் பையனைப்போல் ரீசன் சொன்னார் ஹரிஷ். ’எங்கே இருந்தது?’ என்று பிந்து கேட்டதற்கு, ‘அண்டர் தி வேர்’ என்று ஆரவ் கலாய்க்க, பிந்து ‘ச்சீ’ரித்தார்.

**

12 மணிக்கு இன்றைக்கான முதல் டாஸ்க்கை அறிவித்தார்கள். ‘பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பிறகு என்ன பேசுவீர்கள்?’ என்பதை ஒரு நிமிட செல்ஃபி குறும்படமாக எடுக்க வேண்டும். இதுதான் டாஸ்க்.  சிநேகன் சிந்தனையில் ஆழ்ந்தார். ஹரிஷ் போனை எடுத்துவந்து செல்ஃபி எடுக்க, அதைப் பார்த்துவிட்டு, ‘நல்லா இல்ல டெலிட் தட்’ என்று டெலிட்ட வைத்தார் பிந்து. இந்த பெண்கள் நல்லா இல்லை என்று டெலிட் செய்த செல்ஃபிக்களையெல்லாம் ஒரு இடத்தில் சேர்த்தால் கூகுள் சர்வர்க்கே சவால் விடும். 

மிஸ்டர் பிக்பாஸ்... பிந்து மாதவிக்கு ஏன் இப்படி பண்ண நீ?! 95-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

ஆளாளுக்கு பிராக்டிஸில் இறங்கினார்கள். ஹரிஷ் தூக்கத்தில் இருந்து எழுந்து, ‘நான் டைட்டில் வின் பண்ணிட்டேன்’ என்று கத்த, ‘ப்ரோ இன்னைக்குதான் லாஸ்ட் நாள் அதுக்குள்ளயா’ என்று ஆரவ் சொல்வது போல் சீன். இருவருமே நன்றாகத்தான் செய்தார்கள். ஆனால் பாவம் அதற்குள் மொபைல் லாக் ஆகி வீடியோ பதிவாகாமல் போய்விட்டது. இன்னொரு டேக் வாங்கினார்கள். கணேஷ் கையையே மொபைல் மாதிரி வைத்துக்கொண்டு ரிகர்சல் பார்த்துக்கொண்டிருந்தார். 

ஹரிஷ் அடுத்த சீனை எடுத்துக்கொண்டிருந்தார். பிக்பாஸ் டைட்டில் அவருக்குக் கிடைத்தவுடன் கத்தி துள்ளிக்குதித்து கீழே விழுந்து புரள்வதுபோல் நடிக்க போன் கீழே விழுந்து மீண்டும் லாக் ஆனது. (இதென்னடா ஹரிஷூக்கு வந்த சோதனை). ம்ஹூம் ரொம்ப குதிக்கக்கூடாது என்று லிவிங் ரூமில் அமர்ந்துகொண்டே அந்த சீனை எடுத்தார்கள். ‘வாழை வைத்த தமிழ் மக்கள்… தென்னை வைத்த தெலுங்கு மக்கள்’ என்று முக்கா நிமிடம் நேரம் அரசியல் வசனம் பேசி கடைசியில் எனக்கு பேச்சே வரல என்று முடித்தார் ஹரிஷ். 

பிந்து மாதவி ஷூட்டிங்.. அவர் வெற்றியாளர் என்று கோப்பையைக் கொடுக்க (பாத்ரூம் கழுவுற பிரஸ்.. ஏன்யா உங்களுக்கு வேற ப்ராப்பர்டியே கிடைக்கலையா?. அதை மைக்காக பாவித்து அதற்கு முத்தம் வேறு கொடுத்தார் பிந்து மாதவி. நீ தான்மா நடிகை), அவர் அதை வாங்கிக் கொண்டு ‘ரொம்ப தேங்க்ஸ்.. இந்த படத்தோட டைரக்டர், கேமரா மேன் எல்லாருக்கும் நன்றி’ என்று சொல்ல.. ஆரவ், ‘இது சினிமா அவார்டு இல்ல பிக்பாஸ் டைட்டில்’ என்று சொல்வது போல் சீன். சாக்லேட் கேக்கிற்குள் ஐஸ்க்ரீம் வைத்தாற்போல பிந்துமாதவிக்குள் இப்படி ஒரு கிரியேட்டரா? வாவ்டா. சிநேகன், டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டதும் கீழே அமர்ந்து ‘இந்த தருணத்தை மறக்கவே முடியாது’ என்று நெகிழ்ந்து பேசத் தொடங்க, பின்னிருந்து ஹரிஷூம் ஆரவ்வும் சிரித்துக்கொண்டிருந்தார்கள். 

மிஸ்டர் பிக்பாஸ்... பிந்து மாதவிக்கு ஏன் இப்படி பண்ண நீ?! 95-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

மீண்டும் ஒரு பெட்டி வந்தது. இந்த முறை 15 லட்சம். பெட்டியைக் கொண்டு வந்ததும் ‘எனக்கு வேண்டாம்’ என்று பிந்து எழுந்துசெல்ல, சிநேகன், ‘பிக்பாஸ் பேசுவாரு இருங்க’ என்று சொல்லி அமரச் செய்தார். வார்த்தை மாறாமல் அதே டயலாக்கைச் சொல்ல, ‘ஸாரி’ சொல்லி கலைந்தார்கள்.

**

இன்னும் மூன்று நாட்கள் தான் இருக்கு எவிக்சன் கன்பார்மா இருக்குமா என்று சிநேகன் கேட்க, கமல் சாரே சொல்லிட்டாரே இருக்கும்னு என்று ஆரவ் சொல்லிக்கொண்டிருந்தார். ‘மீண்டும் உலகத்தைப் பார்க்கப்போகிறேன்’ என்ற தலைப்பில் 100 வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு கவிதை வடித்தார் சிநேகன். ‘அவ்வப்போது தேநீர்.. எப்போதும் இளையராஜா பாடல்’ என்று மழை பெய்யும்போது ஃபேஸ்புக்வாசிகள் போடும் கவிதை போலவே இருந்தது அது.

‘சப்புனுலாம் முடிஞ்சிராது கடைசி எபிசோட்’ என்று ஹரிஷ் தன் அனுமானத்தைச் சொன்னார். ‘எப்படி சுவரை ஏறிக்குதித்து எஸ்கேப் ஆகலாம்?’ என்று ப்ளான் போட்டார்கள் ஹரிஷூம் ஆரவ்வும். நூறு நாள் முடிந்தபிறகு இந்த வீட்டிற்குள் இருந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று நடித்துக் காட்டினார்கள் இருவரும். ‘கன்ஃபஷன் ரூம் கதவை திறக்க மாட்டேங்குறான்… எடுறா அந்த சிலிண்டரை’ வடிவேலுவைப்போல் சலம்பலைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ‘இதுல தானடா குறும்படம் போட்டீங்க’ என்றார் ஹரிஷ். இது விளையாட்டுக்குப் பேசுன மாதிரி தெரியல. நோட் பண்ணுங்க பிக்பாஸ்.

மிஸ்டர் பிக்பாஸ்... பிந்து மாதவிக்கு ஏன் இப்படி பண்ண நீ?! 95-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

**

இன்றைய நாளின் டெய்லி டாஸ்க் ‘விருது வழங்கும் விழா’. டாஸ்க் பெயரை வாசித்ததும், ‘உருது??’ என்று இழுத்தார் பிந்து. பத்து விருதுகள் இருக்கும். அதை ஹவுஸ் மேட்ஸ் யாருக்கு வழங்க நினைக்கிறார்களோ அவர்கள் பெயரை எழுதித்தரவேண்டும்.  இது ஏற்கனவே நடந்ததுதான். சக்தி மீண்டும் வந்தபோது இப்படி ஒரு டாஸ்க் நடந்தது. அப்போது ஜூலிகூட சுஜாவுக்கு ‘நாடகக்காரி’ என்ற பட்டம்கூட கொடுத்தாரே. அதே டாஸ்க் இப்போது மீண்டும். எல்லாரும் விருதுக்கான பரிந்துரைகளை எழுதிக்கொடுத்தார்கள். 

பிறகு அவார்டு ஃபங்க்சனுக்கு ரெடியானார்கள். ஆரவ் சட்டை அயன் பண்றதுக்கெல்லாம் ஹரிஷ் தீம் ம்யூசிக் போட்டுக்கொண்டிருந்தார். மூன்றடுக்கு செயின் ஒன்றை அணிந்துகொண்டார் பிந்து. சிநேகன் சட்டை மாற்றும்போது அந்த பெட்ரூமில் இருந்து பிந்து திரும்பிடாதீங்க என்று ஆரவ் கத்த, (நல்லவேளை) பிந்து திரும்பாமலேயே ‘பாத்துட்டேன் பாத்துட்டேன்’ என்று கத்தினார். கணேஷை கன்பஷன் ரூமுக்கு அழைத்த பிக்பாஸ் அவரையே இந்த விருது வழங்கும் விழாவை நடத்தச் சொன்னார்.

ஆக்டிவிட்டி ஏரியாவில் அவார்டு நிகழ்ச்சி ஆரம்பமானது. ஆரவ் ஆடியன்ஸூக்குக் கைகாட்டுவதுபோல் பாவனை செய்தார். கணேஷ் நிகழ்ச்சியைத் தொடங்கினார். சென்ற முறை நடந்த அவார்டு ஃபங்க்சன் போல் இல்லாமல் இந்த முறை நல்ல நல்ல அவார்டுகள் என்று சொல்லி ஒவ்வொரு அவார்டுகளாக அறிவித்தார்.

‘சாகசக்காரன்’ என்ற விருதை ஆரவ் ,சிநேகன் இருவரும் பெற்றுக்கொண்டார்கள். இரண்டு பேருக்கும் சேர்த்து அந்த விருதை மாட்டிவிட டெஸ்ட் ட்யூப் பேபி மாதிரி இருக்கு என்று கலாய்த்தார் ஹரிஷ். எதார்த்தமானவர் என்ற விருது பிந்து, ஆரவ் இருவருக்கும். ‘மக்களே.. மக்களுக்கு மக்களே..’ என்று தனது சுந்தரத்தமிழில் நன்றி நவிழ்ந்தார் பிந்து. ‘அமைதிப்படை’ பிந்து, ‘உழைப்பாளி’ என்ற விருதை சிநேகன் பெற்றுக்கொண்டு, ‘ஹார்ட் வொர்க் பண்ண ரொம்ப புடிக்கும். அதைத்தான் பிக்பாஸ் வீட்லயும் பண்ணேன். வேணும்னு பண்ணலை’ என்று தன்னிலை விளக்கமளித்தார். ‘சுட்டி’ ஹரிஷ் என்று தொடர்ந்தது விருதுகள். போனமுறை அவருக்கு ‘உப்புக்கு சப்பாணி’ விருது கிடைத்ததை நினைவுபடுத்தி இந்த முறை நல்ல அவார்டு வாங்கியிருப்பதாகச் சொன்னார். வீட்டின் செல்லப்பிள்ளை என்ற விருதை பிந்து பெற்றபோது கொஞ்சம் கண் கலங்கினார். ‘ரொம்ப சந்தோசம் பண்ண… பண்ணி..’ என்று பண்ணுதமிழை கொன்னு எடுத்தார். ‘ஆதிபுத்திசாலி’  (கணேஷ் அப்படித்தாங்க வாசிச்சாரு) என்ற விருது சிநேகனுக்குத் தரப்பட்டது. ‘காதல் மன்னன்’ விருதின் பெயரைச் சொன்னதும் எல்லாருமே சரியாக யூகித்தார்கள். ஆரவ் விருதைப் பெற்றுக்கொண்டு ‘இது என் முன்னால் இருப்பவர்களின் சதிச்செயல் ஆனால் பட்டம் நல்லா இருப்பதால் பெற்றுக்கொள்கிறேன்’ என்றார். ‘அணைக்கும் கரங்கள்’ என்ற விருது சிநேகனுக்கு (ஹெல்பிங் மைண்டாம்.. தப்பா நினைக்கக்கூடாது). ‘இந்த நாலு பேர் மனசுல இடம் புடிச்சா நாலு கோடி பேர் மனசுல இடம் புடிச்சா மாதிரி’ என்று சிநேகன் தத்துவம் நம்பர் 1230 ஐ பதித்தார். கணேஷூக்கு ஒழுக்கமானவர் என்ற விருது வழங்கினார்கள். அதைத் தன் அப்பாவுக்கு டெடிகேட் செய்தார். ‘ரொம்ப மகிழ்ச்சியா இருக்குல’ என்று சிநேகனும் ‘நான் எழுதுன எல்லாமே கரெக்டா வந்திருக்கு’ என்று ஆரவ்வும் மெச்சிக்கொண்டார்கள். 

மிஸ்டர் பிக்பாஸ்... பிந்து மாதவிக்கு ஏன் இப்படி பண்ண நீ?! 95-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

**

இரவு 9:30 க்கு ஹவுஸ்மேட்ஸ் எடுத்த குறும்படம் அவர்களுக்கே போட்டுக்காண்பிக்கப்பட்டது (எத்தனை நாளைக்குத்தான் அந்த தண்டனைய நமக்கே தருவாய்ங்க). முதலில் ஆரவ், பிக்பாஸ் பெரிய களம், லைஃப் சேஞ்சிங்காக இருந்தது என்பதையும் என்டர்டெயின்மெண்ட் இண்டஸ்ட்ரீயில் தொடர்ந்து இருப்பேன் என்பதையும் சுட்டிக்காட்டினார். அதோடு இந்த டைட்டிலை வின் பண்ணனும்னு தொடர்ந்து ஏங்கிக் கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டார். மேலும் நிறைய பேரின் படிப்பு, மருத்துவத்துக்கும் உதவுவேன் என்றார். இந்த வாரத்தின் தொடக்கத்தில், சுஜா வெளியேறி கடைசி ஐந்துபேர் இருந்த நிலையில் பிக்பாஸ் ஒரு முக்கிய கட்டளையிட்டிருந்தார். அது, மக்கள் ஓட்டுகளை வைத்து வெற்றியைத் தீர்மானிக்கும் கடைசி வாரம் இது என்பதால் யாரும் நேரடியாகவோ, டாஸ்க் மூலமாகவும் மக்களிடம் ஓட்டுக்கேட்கக் கூடாது என்பது. இவர்களின் குறும்படங்கள் நேரடியாக ஓட்டுக்கேட்கவில்லை என்றாலும் ‘எனக்கு ஏன் ஓட்டுப் போடவேண்டும்?’ என்கிற தொனியிலேயேதான் பேசியிருக்கிறார்கள். இதையெல்லாம் பிக்பாஸ் கேட்பாரா? 

கணேஷ் ரொம்பவும் பொறுமையாக பேசினார். டாக் ஆஃப் தி டவுன் ஷோவுல டைட்டில் வின் பண்ணப்பறமும் நீங்க இப்படி பொறுமையாதான் பேசுவீங்களா ப்ரோ? பிந்து ரிகர்சலிலேயே அவருடைய குறும்படம் என்ன என்பது தெரிந்துவிட்டது. ‘எனக்கு ஓட்டு போடுற’ என்று விவகாரமான தமிழில் திணறித் திணறிச் சொல்ல, டிவியில் இது வரும்போது வெட்கப்பட்டுக் கண்களை மூடிக்கொண்டார். 

சிநேகன் தான் பேசிக்கொண்டிருக்கும்போது பின்னால் ஆரவ், ஹரிஷ், பிந்து சிரித்துக்கொண்டிருந்ததை இப்போதுதான் கவனித்தார் போல, சிடுசிடுவென அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார். அன்று கமல் முன்பு சொன்ன அதே நூலகம் திறக்கும் ஐடியாவை இப்போதும் ‘பகிரங்கமாக’ அறிவித்தார். ஹரிஷ் கல்வி உதவியும் மருத்துவ உதவியும் செய்வேன் என்றார். பிறகு கனவு போல எழுந்திருப்பதாக காட்சி அமைத்திருக்க, இதையும் போட்டாங்களா என்று ஆரவ் சிரித்தார்.  

இதில் சிநேகனின் குறும்படம் மட்டும் உண்மைக்குக் கொஞ்சம் பக்கத்தில் இருந்தது. உண்மையிலேயே அவர் பிக்பாஸ் டைட்டில் வின் பண்ணினால் இப்படித்தான் பேசியிருப்பார். மற்றவர்கள், சிலர் நகைச்சுவை செய்திருந்தார்கள், ஆரவ் பிரச்சார நெடி, கணேஷ் செயற்கை. 

**

சிநேகனை வாக்குமூல அறைக்கு அழைத்தார் பிக்பாஸ். மீண்டும் கையில் ஒரு பெட்டியைக் கொடுத்து அனுப்பினார். பிந்து ஏன் இவ்ளோ சீரியாஸா இருக்கு என்று ‘ஆல் இஸ் வெல்’ சொல்லிக்கொண்டிருந்தார். பெட்டியுடன் வந்த சிநேகனைப் பார்த்ததும் இந்த முறை பதினேழா இருபதா என்று நினைத்திருப்பார்கள். ஆனால் உள்ளே இருந்தது ஒரு செய்தி. ‘நீங்கள் எவிக்சனுக்கு தயாராகுங்கள்’ என்று எழுதப்பட்டிருந்தது. மயான அமைதி குடிகொண்டது. எல்லார் முகத்திலும் சோகத்தின் ரேகைகள் படர்ந்திருந்தது. ‘ஈவ்னிங்ல இருந்து ரொம்ப சிரிச்சுட்டோம்ல’ பிந்து கவலைப்பட்டார். ‘டாஸ்க்காகூட இருக்கலாம்’ என்று சமாதானம் சொல்லிக்கொண்டார் ஹரிஷ்.

வீட்டிற்கு வெளியே கார்டன் ஏரியாவில் ஐந்து சிறிய மேடைகள் அமைத்திருந்தார்கள். ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவரின் பெயர் ஒட்டப்பட்டிருந்தது. ‘டாஸ்க் மூலமா அனுப்புவாங்களா? இல்லை ஓட்டிங் வச்சு அனுப்புவாங்களா’ என்ற குழப்பம் ஆரவ்வுக்கு. ‘பிக்பாஸ்ல எது வேணா நடக்கலாம்’ என்று சோகமானார் கணேஷ். அவருக்கு தான்தான் எலிமினேட் ஆவோம் என்ற பயம் அதிகமாகவே இருப்பது தெரிந்தது.

மிஸ்டர் பிக்பாஸ்... பிந்து மாதவிக்கு ஏன் இப்படி பண்ண நீ?! 95-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

இன்றிரவு இந்த வீட்டில் ஒருவருக்குக் கடைசி இரவு என்று பேசத் தொடங்கினார் பிக்பாஸ். அவரவர் பெயர் போட்ட மேடைகளில் ஏறி நிற்க விளக்குகள் மாறி மாறி எறியும் யாருக்கு பச்சை விளக்குகள் போடுகிறார்களோ அவர் காப்பாற்றப்பட்டவர். சிவப்பு விளக்குகள் வருபவர் எவிக்ட் ஆக வேண்டும். 

ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாக அமர்ந்துகொண்டார்கள். பேய் அறைந்தார்போல் முகமானது அனைவருக்கும். சிநேகன் ரொம்பவே கலங்கிப்போனார். ‘டோன்ட் க்ரை’ என்று அவருக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார் பிந்து. ‘பிக்பாஸ் வீட்ல என்ன வேணா நடக்கலாம் நான் தயாரா இருக்கேன்’ என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அனைவரையும் கார்டன் ஏரியாவுக்கு வரச் சொன்னார் பிக்பாஸ்.

எல்லாரும் அந்த சிறிய மேடையில் ஏறிக்கொள்ள லைட்டுகள் மாறி மாறி எறிந்து நின்றது சிநேகன் முகத்தில் மட்டும் பச்சை விளக்கு அடிக்கப்பட்டது. அவர் சேஃப். எல்லாரையும் கீழே இறங்கச்சொன்னார். சிநேகன் கண் கலங்க, ‘ஸ்ட்ராங்க இருங்க’ எல்லாரும் ஆறுதல் சொன்னார்கள். திரும்பவும் மீதி நான்கு பேரையும் மேடை மீது ஏறச்சொன்னார். இது ஒரு நல்ல யுக்தி. தொடர்ந்து விளக்குகள் அடித்து ஒருவர் ஒருவராக பச்சை காண்பித்துக்கொண்டிருப்பதற்குப் பதிலாக ஒருவர் சேஃப் என்று அறிவிக்கப்பட்ட பிறகு சிறிது இடைவெளிவிட்டால் அந்த இடைவெளியில் அவர்களுக்கு பிபியே வந்துவிடும். 

விளக்குகள் மாறி மாறி அடிக்க இந்த முறை கணேஷூக்கு பச்சை விளக்கு காண்பிக்கப்பட்டது. மீண்டும் அனைவரையும் கீழிறங்கச் சொன்னார்கள். மிகுந்த வருத்தத்தில் இருந்த கணேஷூக்கு இப்போது ஒரு நிம்மதி வந்திருக்கும். 

மீண்டும் சிநேகன், கணேஷ் தவிர மூவரையும் மேடையேற்றி விளக்குகள் அடித்தார்கள். இம்முறை காப்பாற்றப்பட்டது ஆரவ். ஆரவ்வால் இதை வெற்றியாக நினைத்து சந்தோசப்படமுடியவில்லை. அவர் ஒரு பேரதிர்ச்சியில் இருந்து மீண்ட நிலையில் பேச்சின்றி இருந்தார். ‘போறதுனாகூட ஓக்கே சேஃப் ஆகிட்டாதான் இன்னும் கவலை’ என்றார். ‘புதன்கிழமைனால கொஞ்சம் அசால்டா இருந்துட்டேன்’ என்று ஹரிஷ் பதட்டப்பட்டார். 

எதுவாயிருந்தாலும் பரவாயில்லை என்று பிந்துவும் ஹரிஷூம் மீண்டும் மேடையேறினார்கள். அந்த ரணகளத்திலும் ஹரிஷ் தலை கலைந்திருக்கிறதா என்று கண்ணாடியில் பார்த்துக்கொண்டார். ‘உங்கள் இருவரில் ஒருவரின் பயணம் இப்போது முடிவுக்கு வர இருக்கிறது’ என்று பிக்பாஸ் மேலும் திகிலூட்ட, அவர்களின் ஹார்ட் பீட் கன்னாபின்னாவென உயர்ந்திருக்கும்.

மிஸ்டர் பிக்பாஸ்... பிந்து மாதவிக்கு ஏன் இப்படி பண்ண நீ?! 95-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

ஹரிஷ் பெருமூச்சு விட்டு கண்களை மூடிக்கொண்டார். விளக்குகள் எரியத்தொடங்கியது. ஹரிஷூக்கு பச்சையும் பிந்துவுக்கு சிவப்பு விளக்கும் காண்பிக்கப்பட்டது. பிந்து இந்நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகிறார். ஹரிஷ் கண்களை மூடியிருந்ததால் சிறிது நேரத்திற்கு பிறகே பார்த்தார். 

**

பிந்து வெளியேறும் படலம் தொடங்கியது. ‘டைம் டூ கோ’ என்று அவர் சொன்னபோதே கண்கள் மெல்ல ஈரமாகத் தொடங்கியிருந்தது. எல்லோரையும் கட்டிக்கொண்டார். அவருக்கான பெட்டி வந்தது. சிநேகன் கேவிக் கேவி அழத் தொடங்க, பிந்து சமாதானம் செய்தார். ஆனால் அவருக்கும் சிரிக்கும் உதடுகளைக் கடந்து கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. ‘இந்த வாரம் நல்லாப் போச்சு எந்தப் பிரச்னையும் இல்லாம’ என்று சொல்லிவிட்டு காலைல எந்திரிச்சதும் உங்க யார் முகத்தையும் பார்க்க முடியாதுனு நினைச்சாதான் கவலையா இருக்கு என்றார். 

வழக்கம்போல் போர்டில் பிரிவுச் செய்தி எழுத வேண்டும். பிந்து ஆங்கிலத்தில் சொல்ல அதை சிநேகன் தமிழ்ப்படுத்தி எழுதினார். கையெழுத்தும் தமிழில் போட விரும்புவதாக பிந்து கேட்டுக்கொள்ள அவர் கைபிடித்து தமிழில் எழுத உதவினார் சிநேகன். சனிக்கிழமை எல்லாரும் மீட் பண்ணுவோம் என்று எல்லாரையும் உற்சாகப்படுத்தி செல்ஃபி எடுத்துக்கொண்டார். எக்ஸ்பிரசனே வரமாட்டேங்குது என்று ஹரிஷ் தன் ஃபீலீங்க்ஸை பதிவு செய்தார். சிநேகன் மீண்டும் அழ, நான் ஹேப்பியாதான் போறேன், என் முன்னாடி அழுதா நானும் அழுவேன் என்று சமாதானப்படுத்தி விடைபெற்றார். காலைல எல்லாரும் டான்ஸ் ஆடுங்க என் ஸ்டெப் போடுங்க என்று சியர் அப் செய்து விடைபெற்றார் பிந்துமாதவி.

மிஸ்டர் பிக்பாஸ்... பிந்து மாதவிக்கு ஏன் இப்படி பண்ண நீ?! 95-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

இவையெல்லாம் நடந்த போது நேரம் நள்ளிரவு ஒரு மணியைத் தாண்டி இருந்தது. அர்த்தராத்திரியில் இப்படி ஒரு பிரளயத்தை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். வழக்கமாக ஞாயிறு எவிக்சன் இருக்கும் மனதளவில் யாரோ போகப்போகிறார்கள் என்று தயாராகி இருப்பார்கள், ஆனால் இன்று திடீரென ஒரு பிரிவு. இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இதை ஹவுஸ் மேட்ஸ் எப்படி எடுத்துக்கொள்ளப்போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். சோகமே உருவாக காட்சியளித்தார்கள் அனைவரும்.

பிந்துமாதவிக்கான குறும்படம் காண்பிக்கப்பட்டது. என்ட்ரீ, குறும்புகள், சோகம், டாஸ்க் என எல்லாம் கலந்த கலவையாக இருந்தது குறும்படம். இந்த குறும்படங்களை எடிட் செய்பவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் சபாஷ். பிந்துமாதவிக்கு மட்டுமில்லை இதுவரை வெளியேறிய எல்லா போட்டியாளர்களுக்கும் போடப்பட்ட குறும்படங்கள் மிக நேர்த்தியாக எடிட் செய்யப்பட்டிருந்தது. தோட்டத்துப் பூக்களில் சிறந்த பூக்களை மட்டும் பறித்து, தொடுத்து, மாலையாக்கி பெருமாளுக்குச் சூட்டும் ஆண்டாளைப்போல், போட்டியாளர்களின் அத்தனை நாள் பயணங்களில் இருந்தும் மிகச் சிறந்த நினைவுகளை பொறுக்கி எடுத்து மிக அழகாகத் தொடுக்கிறார்கள்.