வெளியிடப்பட்ட நேரம்: 18:39 (25/10/2017)

கடைசி தொடர்பு:14:35 (26/10/2017)

''பிக்பாஸ் பத்தி இதுவரை தெரியாத ஓர் உண்மை சொல்லவா?’’ - சுஜா சர்ப்ரைஸ் (Video) #BiggBossTamil

சுஜா

லத்த எதிர்பார்ப்புடன் ரசிகர்களை 100 நாள்கள் கட்டிப்போட்ட 'பிக் பாஸ்' வீட்டிலிருந்த ஒவ்வொரு போட்டியாளரும் ஒவ்வொரு விதத்தில் மக்கள் மனதில் இடம்பிடித்தனர். 'பிக் பாஸ்' வீட்டை நம்மால் அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியாது. இதில், நமது பார்வைக்குச் சுயநலமானப் பெண்ணாகவும் கடினமான போட்டியாளராகவும் தெரிந்தவர் சுஜா. 

ஓவியா மாதிரி நடந்துகொள்ள முயற்சி செய்கிறார் என்ற விமர்சனம் சுஜாவை வெகுவாகக் காயப்படுத்தியது. ''ஒருத்தர் இடத்தில் நான் இருக்கேன்னா, அதுக்காக அவரை மாதிரியே நடிக்கிறேன்னு அர்த்தம் கிடையாது. நான் நானாக இருக்கேன். யாரை மாதிரியும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை'' என்று நிகழ்ச்சியின்போதே தெளிவுபடுத்தினார். 'பிக் பாஸ்' வீட்டில் தனது தந்தையை எண்ணி வருந்தியவருக்கு, கமல்ஹாசன் தந்தை ஸ்தானத்தில் இருப்பதாகக் கூறினார். 100 நாள்கள் முடியாமல் தன் வருங்கால கணவரைச் சந்திக்கப்போவதில்லை என அப்போது தெரிவித்திருந்தார் சுஜா. 'என் திருமணத்துக்கு வாங்க' எனக் கமலிடம் வேண்டுகோள் விடுக்க, கமல் 'ஓ.கே'' சொன்னதும் நெகிழ்ந்தார். அதுகுறித்தெல்லாம் பேச நமது அலுவலகத்துக்கு அழைத்திருந்தோம். 

அலுவலகத்துக்குள் நுழையும்போதே அனைவரிடமும் நலம் விசாரித்தார் சுஜா. வீடியோ நேர்காணல் என்றதும், '' 'பிக் பாஸ்' மாதிரி கட் பண்ணாமல், நான் என்ன பேசறேனோ அதை மக்களுக்கு காட்டுங்க' என ஆதங்கத்துடன் கோரிக்கை வைத்தார். அவருடன் தொடர்ந்து பேசினோம்... 

''சுஜா வீட்டில் எப்படி?'' 

''வீட்டுல எல்லாரையும் மாதிரிதான். காலையில் எழுந்து கோலம் போட்டுட்டு, சமையல் செய்துட்டு, அம்மா மற்றும் தங்கச்சியோடு ஜாலியா பேசிட்டு, எனக்காகக் கொஞ்ச நேரம் செலவுப் பண்ணுவேன். 'பிக் பாஸ்'ல என்னை எப்படிப் பார்த்தீங்களோ நிஜத்திலும் அப்படித்தான்.'' 

''ஏன் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துக்க நினைச்சீங்க?'' 

''அந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே கூப்பிட்டாங்க. அப்போ ஒரு படத்தில் நடிச்சுட்டிருந்தேன். அதனால், உடனே போக முடியலை. மறுபடியும் கூப்பிட்டபோது, அந்தப் படத்தில் என் போர்ஷன் முடிஞ்சிருச்சு. அதனால், கலந்துக்கிட்டேன்.'' 

''தினசரி காலையில் பிந்து, கணேஷ்ராம் டான்ஸ் ஆடுவாங்க. நீங்க என்ன செய்வீங்க?'' 

''எனக்கு சாமி நம்பிக்கை உண்டு. காலையில் எழுந்ததும் சாமி கும்பிடுவேன். அதுதான் என் தினசரி வழக்கம். 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் அதை ஒருநாள்கூட காட்டலை. இது எனக்கு ரொம்பவே வருத்தத்தை ஏற்படுத்திச்சு.'' 

''ஏன்டா 'பிக் பாஸ்' வீட்டுக்குள்ளே வந்தோமோனு ஃபீல் பண்ணீங்களா?'' 

''அப்படி மட்டும் நினைச்சதே இல்லை. நூறு நாள் முடியும் வரை இருக்கணும்னுதான் நினைச்சேன்.''

'' 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் உங்களைப் பற்றி வெளியே தெரியாத விஷயம்...''

''இருக்கு. இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கற ஒவ்வொருவருக்கும் பிஸிக்கல் அண்டு மென்ட்டல் டெஸ்ட்டை வெச்சுத்தான் உள்ளேயே அனுப்புவாங்க. அப்படியே எனக்கு டெஸ்ட் வெச்சப்பவே, எனக்குத் தனியா இருக்கிறது பயம்னு பிக் பாஸ் டீமுக்குத் தெரியும். அப்படி இருந்தும், என்னை ஒரு வாரம் தனியறையில் இருக்கவெச்சு ஏமாத்திட்டாங்க'' என்கிற சுஜாவுக்கு, ஓவியா கொடுத்த பிறந்தநாள் பரிசை மறக்கவே முடியாதாம். 

அப்படி என்ன பரிசு என்பதையும், 'பிக் பாஸ்' பற்றி வெளியே தெரியாத மேலும் பல சுவாரஸ்யமான தகவல்கள் பற்றியும் தெரிந்துகொள்ள, மறக்காம இந்த வீடியோவைப் பாருங்க.