கராத்தே சாம்பியன், புல்லட் ரைடர், பாத்ரூம் நேயர்! யார் இந்த யாஷிகா? #BiggBossTamil2

கராத்தே சாம்பியன், புல்லட் ரைடர், பாத்ரூம் நேயர்! யார் இந்த யாஷிகா? #BiggBossTamil2

`கவலை வேண்டாம்', `துருவங்கள் பதினாறு' படங்களில் நடித்திருந்தாலும், `இருட்டு அறையில் முரட்டுக் குத்து' படத்தின் சர்ச்சையால் பரவலாகப் பேசப்பட்ட நடிகை யாஷிகா ஆனந்த். தற்போது பிக் பாஸ்-2 நிகழ்ச்சியில் போட்டியாளர். இவரைப் பற்றிய மேலும் பல தகவல்களுக்கு யாஷிகாவின் அம்மா சோனல் ஆனந்தை தொடர்புகொண்டு பேசினோம். 

``எப்போதுல இருந்து யாஷிகாவுக்கு நடிப்புல ஆர்வம் வந்தது?" 

``எல்லாக் குழந்தைகளும் அழுதுகிட்டேதான் பிறக்கும். ஆனா, யாஷிகா சிரிச்சுக்கிட்டே பிறந்ததுனால, `She is an extraordinary child'னு டாக்டர்ஸ் சொன்னாங்க. ஸ்கூல்ல பயங்கரமா சேட்டை பண்ணுவா. நல்ல டான்ஸர். மிமிக்ரியிலேயும் ஆர்வம் இருக்கு. ஏழாம் வகுப்புப் படிக்கும்போதே `ஏக்தா கபூர்' தயாரிப்பு நிறுவனத்துல ஆக்டிங் கோர்ஸ் பண்ணா. தமிழ்ல கூத்துப்பட்டறையிலேயும் நடிப்புப் பயிற்சி எடுத்துக்கிட்டா. `நான் டிவியில தெரியணும். நடிகை ஆகணும். கஷ்டப்படுறவங்களுக்கு உதவி பண்ணணும்'னுதான் எப்போவும் சொல்லிக்கிட்டே இருப்பா. தவிர, ஸ்கூல் படிக்கும்போதே பல ஏழை குழந்தைகளுக்கு உதவி பண்ண ஆரம்பிச்சுட்டா. ரொம்ப காலம் நிறைய படங்கள், விளம்பரங்கள்ல சின்ன சின்ன ரோல் பண்ணிக்கிட்டிருந்தா. `நாம ஒருநாள் பெரியாளா வருவோம்'னு அவளுக்கு நம்பிக்கை இருந்துச்சு. அந்தப் பொறுமையும், தைரியமும்தான் யாஷிகாவை இந்த அளவுக்குக் கொண்டுவந்து நிறுத்தியிருக்குனு நினைக்கிறேன்."  

யாஷிகா ஆனந்த்

``எதிர்காலத்துல என்னவா ஆகணும்னு யாஷிகாவுக்கு விருப்பம்?"

``காலேஜ்ல 'பப்ளிக் அட்மினிஷ்ட்ரேஷன்' படிச்சா. தொடர்ந்து ஷூட்டிங் இருந்ததுனால, காலேஜுக்குப் போகமுடியல. `இப்போ இல்லைனாலும், கட்டாயம் பட்டம் வாங்குவேன்'னு சொன்னா. பைலட் ஆகணும்னும் ஆசைப்பட்டா. வளர வளர அவளோட கனவுகளும் மாறிக்கிட்டே இருந்தது. இப்போ நிறைய நல்ல கதைகள்ல நடிக்கணும் ஆசைப்படுறா!." 

``குடும்பம் பற்றி..."

``நாங்க பஞ்சாபி ஃபேமிலி. இப்போ டெல்லியில செட்டில் ஆகிட்டோம். யாஷிகாவோட அப்பா சேத்தன் ஆனந்த், பிராபர்ட்டி பிசினஸ் பண்றார். யாஷிகாவுக்கு 12-வது படிக்கிற தங்கச்சி இருக்கா. பெயர், ஒசீன். பரதநாட்டிய அரங்கேற்றம்லாம் பண்ணியிருக்காங்க. தம்பி பெயர் ரஜினீஸ், 8-ம் வகுப்புப் படிக்கிறான், பேஸ்கட் பால் பிளேயர்.

Yashika Anand's Siblings

என்னைவிட அப்பாகிட்டதான் யாஷிகா ரொம்ப குளோஸ். வாழ்க்கைனா எப்படி இருக்கும்ங்கிற நிதர்சனத்தை அவளுக்குக் கத்துக்கொடுத்தது அவங்க அப்பாதான்.

யாஷிகா ஆனந்த் குடும்பம்

`அடிபட்டுதான் பாடம் கத்துக்க முடியும். அதனால, பிள்ளைங்க ஏதாவது பிரச்னையைச் சந்திச்சா, பெற்றோர்கள் அவங்களுக்கு உதவி பண்ணக் கூடாது. அப்போதான் பிரச்னைகளை சமாளிக்கக்கூடிய பக்குவம் அவங்களுக்கு வரும்'னு அவங்க அப்பா அடிக்கடி சொல்வார்." 

``பொண்ணு கிளாமரா நடிக்கிறதைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?" 

``கிளாமரா நடிக்கிறதுல எனக்கும் அவங்க அப்பாவுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. சின்ன வயசுல இருந்தே என் பொண்ணு ஓப்பன் டைப். எல்லா விஷயத்தையும் எங்ககிட்ட பேசுவா. அளவுக்கு  மீறிய மெச்சூரிட்டி அவகிட்ட இருக்கு. அதனால, நானும் அவரும் யாஷிகாவை ஒரு குறுகிய வட்டத்துக்குள்ள அடைக்க விரும்பலை. அவளுக்கு புல்லட் வண்டி ஓட்டக் கத்துக்கொடுத்தது, கராத்தே கிளாஸுக்கு அனுப்பியதெல்லாம் அவங்க அப்பாதான். யாஷிகா கராத்தே பிளாக் பெல்ட் சாம்பியன்." 

யாஷிகா ஆனந்த்

`` `இருட்டு அறையில் முரட்டுக் குத்து' படத்தைப் பார்த்து நீங்க என்ன ரியாக்ட் பண்ணீங்க?" 

``யாஷிகாவுக்குப் பதினாறு வயசுல `துருவங்கள் பதினாறு' பட வாய்ப்பு கிடைச்சது. பிறகு வந்த படங்கள்ல எல்லாம் பயங்கர அடல்ட் கன்டென்ட்ஸ் இருந்ததுனால, நடிக்க ஓகே சொல்லலை. `பாடம்' படத்துல இந்தி டீச்சர் ரோல் பண்ணாங்க. அதுக்கப்புறம்தான் `இருட்டு அறையில் முரட்டுக் குத்து' சான்ஸ் வந்தது. என்னென்ன கேரக்டர்ஸ்ல நடிக்கலாம்னு அவதான் முடிவு பண்றா. நானும் அவரும் தலையிடுறதில்லை." 

``வீட்டுல யாஷிகா எப்படி? `பிக் பாஸ்' வீட்டுக்குள்ள அவங்க எப்படி இருப்பாங்கனு நினைக்கிறீங்க?" 

``மொபைல் இல்லாம ஒரு நிமிடம்கூட யாஷிகாவால இருக்கமுடியாது. குளிக்கும்போதுகூட போன்ல பாட்டு கேட்குற பழக்கம் இருக்கு. சமூக வலைதளங்கள்ல ரொம்ப ஆக்டிவ். விதவிதமான உணவுகள் சாப்பிடுறது, அடிக்கடி டூர் போறது யாஷியாவுக்கு ரொம்பப் பிடிக்கும். வீட்டு வேலைகள் எதையும் அவ பார்த்ததேயில்லை. பிக் பாஸ் வாய்ப்பு வந்ததும், `நீ எப்படி வீட்டு வேலைகளையெல்லாம் பண்ணப்போற?'னுதான் கேட்டேன். `நான் எல்லாத்தையும் சமாளிப்பேன்மா'னு சொன்னா!" என்கிறார், யாஷிகாவின் அம்மா சோனல் ஆனந்த்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!