பிக்பாஸ் சீசன் 2-வின் ஓவியா, ஜூலி யார்? வாசகர்களின் சர்வே ரிசல்ட்! #FunGameResult

பிக்பாஸ் சீசன் 2-வின் ஓவியா, ஜூலி யார்? வாசகர்களின் சர்வே ரிசல்ட்! #FunGameResult

பிக் பாஸ் முதல் சீசனில் ஓவியா, ஜூலி, சினேகன், காயத்ரி ரகுராம், நமிதா, ஆரவ் என பல பிரபலங்கள் தங்களது ஒரிஜினல் முகத்தை காட்டியதால் வைரலானார்கள். அதே போல் இந்த சீசன் போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருக்கும் யாஷிகா ஆனந்த், பொன்னம்பலம், மஹத், டேனியல் அன்னி போப், ஆர்.ஜே.வைஷ்ணவி, ஜனனி ஐயர், அனந்த் வைத்தியநாதன், ரம்யா என்.எஸ்.கே, சென்றாயன், ரித்விகா, மும்தாஜ், தாடி பாலாஜி, தொகுப்பாளினி மமதி, நித்யா, ஷாரிக் ஹாசன், ஐஷ்வர்யா தத்தா ஆகியோர் முதல் சீசனின் எந்த போட்டியாளர்களைப் பிரபலிப்பார்கள் என விகடன் இணையதளத்தில் ஃபன் கேம் ஒன்றை நடத்தினோம். இந்த கேமில் ஆர்வமாக கலந்துகொண்ட பலர், தங்களின் கருத்துகளை பதிவு செய்தனர். 

பிக் பாஸ்

ஓவியா - யாஷிகா ஆனந்த்:

ஓவியா

பிக் பாஸ் மூலம் ஒரு ஆர்மிக்கே சொந்தக்காரரான ஓவியாயைப் போல் இந்த சீசனில் யார் இருப்பார் என்ற கேள்விக்கு, பலர் யாஷிகா ஆனந்தைதான் தேர்வு செய்திருக்கிறார்கள். அவருக்கு 37.1 சதவிகித வாக்குகளும் ஜனனி ஐயருக்கு 23.1,  ரித்விகாவுக்கு 5.9,  ஐஷ்வர்யா தத்தாவுக்கு 8.9, சென்றாயனுக்கு 5.3 சதவிகிதம் என வாக்குகள் வந்துள்ளன.

சினேகன் - அனந்த் வைத்தியநாதன்:

சினேகன்

இந்த சீசனின் சினேகனாக அனந்த் வைத்தியநாதன்தான் இருப்பார் என 28.9 சதவிகிதமும் பொன்னம்பலத்திற்கு 19.3, மஹத்திற்கு 10.4, டேனியல் அன்னி போப்பிற்கு 8.2,  தாடி பாலாஜிக்கு 12.1 சதவிகிதமும் வாக்குகள் வந்துள்ளன.

பரணி - சென்றாயன்:

பரணி

பிக் பாஸ் ஆரம்பித்து சில நாள்களே ஆன நிலையில் பரணியை பல இடங்களில் ஞாபகப்படுத்தி வருகிறார் சென்றாயன். இவருக்கு 66.1 சதவிகித நபர்களும் ரித்விகாவுக்கு 11.3, டேனியல் அன்னி போப்பிற்கு 9, அனந்த் வைத்தியநாதனுக்கு 3.1, தாடி பாலாஜிக்கு 2.7 சதவிகித நபர்களும் வாக்களித்துள்ளனர்.

ஹரிஷ் கல்யாண் - மஹத்:

ஹரிஷ் கல்யாண்

இந்த சீசன் ஹரிஷ் கல்யாணாக மஹத்திற்கு 61.4 சதவிகிதமும் ஷாரிக் ஹாசனுக்கு 23.4, டேனியல் அன்னி போப்பிற்கு 5.8 சதவிகிதமும் வாக்குகள் வந்துள்ளன. 

பிந்து மாதவி - ஜனனி ஐயர்:

பிந்து மாதவி

பிக் பாஸ் இரண்டாவது சீசனின் முதல் கேப்டனான ஜனனி ஐயரே இந்த சீசனின் பிந்து மாதவி என 44.8 சதவிகித வாசகர்களும் யாஷிகா ஆனந்த்துக்கு 15, ஐஷ்வர்யா தத்தாவுக்கு 11.7, ரித்விகாவுக்கு 10.8, ஆர்.ஜே வைஷ்ணவிக்கு 6.3 சதவிகித வாசகர்களும் வாக்களித்திருக்கிறார்கள். 

காயத்ரி ரகுராம் - மும்தாஜ்:

காயத்ரி ரகுராம்

முதல் சீசனில் காயத்ரியின் ரோலை இப்போதே கையில் எடுத்திருக்கும் மும்தாஜ்தான் இந்த சீசனின் காயத்ரி ரகுராம் என 47.8 சதவிகிதமும், தொகுப்பாளினி மமதிக்கு 19.4, ஆர்.ஜே வைஷ்ணவிக்கு 13.5, நித்யாவுக்கு 6.3, ரம்யா என்.எஸ்.கே.வுக்கு 5.3 சதவிகித வாசகர்கள் தங்களது ஆதரவை தெரிவித்திருக்கிறார்கள். 

சக்தி - பொன்னம்பலம்:

சக்தி

இந்த சீசனின் சக்தி இவர்தான் என பொன்னம்பலத்திற்கு 18.9, தாடி பாலாஜிக்கு 18.6, டேனியல் அன்னி போப்பிற்கு 13.5, தொகுப்பாளினி மமதிக்கு 8.3, ஆர்.ஜே வைஷ்ணவிக்கு 6 சதவிகித வாசகர்கள் வாக்களித்துள்ளனர்.

வையாபுரி - தாடி பாலாஜி:

வையாபுரி

தாடி பாலாஜிதான் வையாபுரி என 32.2 சதவிகிதமும் பொன்னம்பலத்திகு 26.2, அனந்த் வைத்தியநாதனுக்கு 16.8, டேனியல் அன்னி போப்பிற்கு 6.2 சதவிகிதமும் வாக்குகள் வந்துள்ளன.

கஞ்சா கருப்பு - டேனியல் அன்னி போப்:

கஞ்சா கருப்பு

இந்த சீசனின் கஞ்சா கருப்பு இவர்தான் என டேனியல் அன்னி போப்பிற்கு  21.8 சதவிகிதமும், பொன்னம்பலத்திற்கு 18.2, தாடி பாலாஜிக்கு 15.5, சென்றாயனுக்கு 12.2, அனந்த் வைத்தியநாதனுக்கு 9.9 சதவிகித வாக்குகள் வந்துள்ளன.

நமிதா - ஆர்.ஜே வைஷ்ணவி:

நமிதா

இந்த சீசனில் நமிதாவாக ஆர்.ஜே வைஷ்ணவி இருப்பார் என  37.2 சதவிகிதமும் மும்தாஜுக்கு 18.7, தொகுப்பாளினி மமதிக்கு 12.2, யாஷிகா ஆனந்த்துக்கு 9.5, ரம்யா என்.எஸ்.கே.வுக்கு 6.4 சதவிகிதமும் வாக்குகள் வந்துள்ளன.

ஜூலி - நித்யா:

ஜூலி

இந்த சீசனின் ஜூலியாக நித்யாவுக்கு 32.5 சதவிகித வாசகர்களும், தொகுப்பாளினி மமதிக்கு 10.7, ஆர்.ஜே வைஷ்ணவிக்கு 10.4, ஐஷ்வர்யா தத்தாவுக்கு 9.5, ரித்விகாவுக்கு 9.1 சதவிகித வாசர்களும் வாக்களித்துள்ளனர்.

ஆரவ் - ஷாரிக் ஹாசன்:

ஆரவ்

பிக் பாஸ் முதல் சீசனில் வெற்றியாளரான ஆரவ்வைப் போல் இந்த சீசனில் ஷாரிக் ஹாசன் இருப்பார் என 33.2 சதவிகிதமும், மஹத்துற்கு 11, ஐஷ்வர்யா தத்தாவுக்கு 10.1, யாஷிகா ஆனந்த்திற்கும் ரித்விகாவுக்கும் 6.2 சதவிகிதமும் வாக்குகள் வந்துள்ளன. 

ரைஸா - ஐஷ்வர்யா தத்தா:

ரைஸா

'அடப்போங்கய்யா' என்ற ஒன்றை டயலாக்கால் ஃபேமஸான ரைஸாவை, இந்த சீசனில் ஐஷ்வர்யா தத்தா பிரதிபலிப்பார் என 28.9 சதவிகிதமும், ரம்யா என்.எஸ்.கே.வுக்கு 13.7, ஆர்.ஜே வைஷ்ணவிக்கு 11.9, ரித்விகாவுக்கு 10, யாஷிகா ஆன்ந்த்திற்கு 9.8 சதவிகித வாசகர்களும் வாக்களித்துள்ளனர்.

ஆர்த்தி - தொகுப்பாளினி மமதி:

ஆர்த்தி

ஆர்த்தியாக இந்த சீசனில் தொகுப்பாளினி மமதி இருப்பார் என 22.6 சதவிகிதமும், ரம்யா என்.எஸ்.கே.வுக்கு 18.9, நித்யாவுக்கு 11, ரித்விகாவுக்கு 10.4, தாடி பாலாஜிக்கு 6.2 சதவிகிதமும் வாக்குகள் வந்துள்ளன. 

சுஜா - ரித்விகா:

சுஜா

இந்த சீசன் சுஜா, ரித்விகாதான் என 18.4 சதவிகித வாக்குகளும், ரம்யா என்.எஸ்.கே.வுக்கு 11.8, நித்யாவுக்கு 11.2, ஐஷ்வர்யா தத்தாவுக்கு 10.3, தொகுப்பாளனி மமதிக்கு 7.6 சதவிகித வாக்குகளும் வந்துள்ளன.

கணேஷ் வெங்கட்ராம் - ரம்யா என்.எஸ்.கே:

கணேஷ் வெங்கட்ராம்

இதுவரை நாம் பார்த்த எல்லா போட்டியாளர்களும் ஒரே பாலினமாக இருந்தார்கள். ஆனால், இந்த கேள்விக்கு மட்டும் கணேஷ் வெங்கட்ராமாக ரம்யா என்.எஸ்.கே இருப்பார் என முடிவு வந்திருக்கிறது. ரம்யாவுக்கு  26.7, ஷாரிக் ஹாசனுக்கு 17.7, அனந்த் வைத்தியநாதனுக்கு 9, ரித்விகாவுக்கு 7.8, டேனியல் அன்னி போப்பிற்கு 6.7 சதவிகித வாக்குகள் வந்துள்ளன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!