Published:Updated:

பிக் பாஸின் மார்னிங், மிட்நைட் மசாலாவில் என்ன நடக்கிறது!?

தார்மிக் லீ
பிக் பாஸின் மார்னிங், மிட்நைட் மசாலாவில் என்ன நடக்கிறது!?
பிக் பாஸின் மார்னிங், மிட்நைட் மசாலாவில் என்ன நடக்கிறது!?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த முறை இல்லாத ஒன்று இந்த சீஸனில் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அது மார்னிங் மற்றும் மிட்நைட் மசாலா என்று காலையும் இரவும் நடக்கும் சம்பவங்கள் ஆன்லைனுக்கெனப் பிரத்யேகமாக ஒளிபரப்பாகிறது. அப்படி என்னதான் அதில் நடந்தது, இன்று என்ன நடக்கப் போகிறது. இன்று இரவு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காட்சிகளுக்கு இவை முன்னோட்டமாக இருக்கும். பார்ப்போம்!

மார்னிங் மசாலா :

* அனந்த் வைத்தியநாதனின் தியானத்திலிருந்து ஆரம்பித்தது,நேற்றைய மார்னிங் மசாலா. மூச்சுப் பயிற்சி, மூச்சை இழுத்துவிடுதல் என பல்வேறு தியானங்களை மேற்கொண்டிருந்தார், அனந்த். ஐந்து நிமிட இடைவேளைக்குப் பின் மூச்சை இழுத்துவிட்டு, தியானத்தை முடித்துக்கொண்டார்.  

*  எல்லோரும் அவரவர் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருக்க, யாஷிகாவுக்கு அடிபட்ட விரலிலேயே மீண்டும் அடிபட்டது. மஹத் உடனே முதலுதவி டப்பாவைத் தேடி பொதுச் சேவையில் இறங்கினார். விரலில் கட்டுப்போட யாஷிகா கிச்சனிலிருந்து கத்தியை எடுத்து வந்து மஹத்திடம் கொடுத்தார். அதற்கு, `அதைக் கீழ வைங்க. கத்தியை எப்பவும் டைரக்ட்டா கொடுக்கக் கூடாது' என சென்டிமென்ட் டயலாக்கைப் போட்டார். 

* அனந்த் வைத்தியநாதன் தன்னுடைய தனிமை வாழ்க்கையைப் பற்றி பொன்னம்பலத்திடம் சொல்லிக்கொண்டிருந்தார். அதற்கு ஆறுதலாக, பொன்னம்பலம் வாழ்க்கைக்குத் தேவையான பல தத்துவங்களை எடுத்துச் சொன்னார். `இருக்கிறவங்களைவிட இல்லாதவங்களுக்குத்தான் ஈர்ப்பு அதிகம். அதே மாதிரி தனியா இருக்கிறவங்களுக்குத்தான் பாசமும் அதிகமா இருக்கும்'. 

* பாலாஜி கார்டன் ஏரியாவில் வாக்கிங் போய்க்கொண்டிருந்தார். நடுவில் கையில் காபியோடு வந்த நித்யா, `பாலாஜி ஐயா, காபி வேணுமா' என்று கேட்டார். `வேணாம்மா, நீயே குடி. ஹெல்த்தைப் பார்த்துக்க. வெயில்ல நிக்காத கருத்துற போற' என இவர் ஸ்டைலில் நக்கலடித்து, நடையைத் தொடர்ந்தார்.  

* துணி காயப்போட்டுக்கொண்டிருந்த யாஷிகாவையும், ஐஷ்வர்யாவையும் `வேலை ஒழுங்கா செய்ங்க, இது என்ன இப்படி போட்டிருக்கீங்க' என எஜமானர் தொனியில் அதட்டிக்கொண்டிருந்தார், மஹத். 

* பாத்ரூமில் குளித்துக்கொண்டிருந்த அனந்த் வைத்தியநாதனிடம், தன்னுடைய காணாமல்போன டவலின் அங்க அடையாளங்களைச் சொல்லி புலன் விசாரணை செய்துகொண்டிருந்தார் டேனியல். ஒரு வழியாக அடையாளங்கள் அனைத்தும் ஒத்துப்போக, `அது என்னுடைய துண்டு' என்று அனத்திக்கொண்டே இருந்தார், டேனி. `அட ஒரு நிமஷம் இருய்யா தர்றேன்' என்று கடிந்தார், அனந்த். 

* அனந்த் காலையில் செய்துகொண்டிருந்த அதே விஷயத்தை பட்டி டிங்கரிங் பார்த்து யோகாவாகச் செய்துகொண்டிருந்தார், பொன்னம்பலம். இவர்கள் இரண்டு பேருக்கும் குட்டிப் போட்டியாளராக சென்றாயனும் ஒரு பக்கம் தியானம் செய்துகொண்டிருந்தார். 

* உதவியாளர்கள் (மகளிர் அணி) அனைவரும் வீட்டைச் சுத்தப்படுத்துவது, எஜமானர்களுடைய (ஆண்கள்) துணிகளை துவைப்பது, ஐயர்ன் பண்ணுவது என இப்படியாக மார்னிங் மசாலா நிறைவடைந்தது. 

மிட்நைட் மசாலா :

* உதவியாளர்கள் (மகளிர் அணி) அனைவரும் வீட்டைச் சுத்தப்படுத்துவது, எஜமானர்களுடைய (ஆண்கள்) துணிகளை துவைப்பது, ஐயர்ன் பண்ணுவது என இப்படியாக மார்னிங் மசாலா நிறைவடைந்தது. 

மிட்நைட் மசாலா :

* பிக் பாஸ் உதவியாளர்களுக்கு (பெண்கள்) டாஸ்க் வழங்கியிருப்பார் போல. அனைவரும் தீவிரமாக டிஸ்கஸ் செய்துகொண்டிருந்தனர். ரித்விகா `நா ஆளான தாமரை' பாடலுக்கு டான்ஸ் ஆட பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தார். விதிமுறைகளில் மஹத் கொஞ்சம் கறாராக இருந்தார். அதைச் சென்றாயனுக்கு எடுத்துச் சொல்லும் முயற்சியில், இருவருக்கும் சின்ன வாக்குவாதமே ஏற்பட்டது. கோபம்கொண்டு படுக்கையறைக்குச் சென்றார், சென்றாயன். அவரை விடாமல் ரவுண்டுகட்டி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார், மஹத். 

* எஜமானர்களை கண்டுகொள்ளாமல் நித்யா, ரித்விகா, ஐஷ்வர்யா, யாஷிகா என இவர்கள் அனைவரும் யார் யார் எந்தெந்த பாட்டுக்கு டான்ஸ் ஆடுவது எனத் தீவிரமாகக் கலந்துரையாடிக்கொண்டிருந்தனர். பின், நடக்கப் போகும் நிகழ்வை யார் தொகுத்து வழங்கப்போகிறார் என்றும் டிஸ்கஸ் போய்க்கொண்டிருந்தது. தொகுப்பாளராக அனைவரும் மமதியை நினைத்து வைத்திருந்தார்கள். ஆனால், `பரவாயில்ல நான் இங்க இருக்கிறதால நான் பண்ணுவேன்னு நினைச்சுருப்பாங்க. வேறு யாராவது பண்ணட்டும்' எனப் பாட்டுப் பாட தயாராகிக்கொண்டிருந்தார், மமதி. 

* ஒவ்வொருவரும் டான்ஸ் ஆடுவது, பாட்டுப் பாடுவது எனக் கடுமையாகப் பயிற்சி செய்துகொண்டிருந்தார்கள். இன்றைக்கு எபிசோடுக்கான கன்டென்ட் இதுவாகத்தான் இருக்கும். ஜனனிக்கு `வசீகரா' பாடலின் ட்யூனை சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தார் ரம்யா. ஜனனியும் முயற்சியை விடுவதாக இல்லை. `வசீ.... வசீ... வசீ... வசீ...' என வசீகரா பாட்டை வெச்சு செய்துகொண்டிருந்தார். இதற்கு நடுவில் பொன்னம்பலம் குறுக்கும் மறுக்குமாக நடந்துகொண்டிருந்தார்.   

* வெளியே கார்டன் ஏரியாவுக்கு வந்த பொன்னம்பலம், அங்கிருந்த சென்றாயனின் அருகில் அமர்ந்து `வசீகரா' பாடலைப் பாடிக்கொண்டிருந்தார். கேமராவை லிவ்விங் ரூம் பக்கம் திரும்பியதும் மீண்டும் ஜனனியின் வசீகரா. அவரைத் தொடர்ந்து ரம்யா `நீதானே என் பொன் வசந்தம்' படத்தில் அவர் பாடிய `சற்று முன்பு' பாடலை ஜனனிக்கு அதே எனர்ஜியோடு பாடிக் காண்பித்தார். இருக்கு இன்னைக்கு என்டர்டெயின்மென்ட் இருக்கு!

* அனைவரும் உதவியாளர் மோடிலிருந்து பெர்ஃபாமர் மோடுக்கு வந்துவிட்டனர். நடப்பதையெல்லாம் பார்க்கும்போது இன்று பெரிய கச்சேரியே நமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. ரம்யா `சற்று முன்பு' பாடல், ஜனனி `வசீகரா' பாட, மமதி ஐந்து பாடல்களை ஒன்றிணைத்தும் பாடப்போகிறார்கள். இந்தப் பக்கம் யாஷிகா - ஐஷ்வர்யா கூட்டணி `கோடான கோடி', நித்யா `ஆட்டமா தேரோட்டமா' பாட்டுக்கு டான்ஸ் ஆடி பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தனர். 

இதுதான் மார்னிங் மசாலா, மிட்நைட் மசாலாவில் நடக்கும் கூத்துகள். உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் மிகவும் முன்னெச்சரிக்கையோடுதான் செயல்படுகிறார்கள் எனத் தெரிகிறது. இந்த ஷோவின் எடிட்டருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம். பொறுமையாக உட்கார்ந்து ஒவ்வொரு நிகழ்வையும் பார்த்து இதிலிருந்து தேரும் கன்டென்ட்டைக் கத்திரிப்பதற்குள் போதும் போதுமென்றே ஆகிவிடும். ஒரு கட்டத்துக்கு மேல் எந்த கன்டென்ட்டுமே தேறாது. 

இப்படியே சென்றால், உள்ளே சென்ற 16 பேரையும் வெற்றியாளர்களாக அறிவித்துவிடலாம். அந்தளவுக்கு பெர்ஃபாமன்ஸில் பின்னி எடுக்கிறார்கள். இதுபோக மிட்நைட் மசாலாவில் போட்டியாளர்கள் எல்லோரும் ரொம்பவே கேஷுவலாக இருக்கிறார்கள். அதான் டைட்டில்லே இருக்கோ! இப்படியே போய்க்கொண்டிருந்தால், போட்டியாளர்களிடம் வம்பு வளர்ப்பதுதான் பிக் பாஸுக்குப் பெரும் சவாலாக இருக்கும். அதற்காக எந்த எல்லைக்கும் துணிந்து இறங்குவார் இந்த பாஸ். ஆல் தி பெஸ்ட் பாஸ்! 

ஆமா, நேத்து நைட் ப்ரோமோவுல வந்த மும்தாஜையும், ஷாரிக்கையும் காணோம். வீ ஆர் வாட்சிங் பிக்பாஸ்!