Published:Updated:

2 பல்பு, 1 சென்சார் கட், 1 கல்யாண விண்ணப்பம்..! - பிக்பாஸ் மிட்நைட் மசாலா டீஸர்

தார்மிக் லீ

இதற்கு நடுவில் பிக் பாஸிடமிருந்து அறிக்கை வந்ததா அல்லது டாஸ்க்கா எனத் தெரியவில்லை, அனைவரும் சோபாவில் அமர்ந்திருந்தார்கள். இது பிக்பாஸ் மிட்நைட் மசாலா டீஸர்!

2 பல்பு, 1 சென்சார் கட், 1 கல்யாண விண்ணப்பம்..! - பிக்பாஸ் மிட்நைட் மசாலா டீஸர்
2 பல்பு, 1 சென்சார் கட், 1 கல்யாண விண்ணப்பம்..! - பிக்பாஸ் மிட்நைட் மசாலா டீஸர்

* பெட்ரூமில் வேலையில்லாமல் சுற்றிக்கொண்டிருந்த ஜனனியைக் கூப்பிட்டு, `இந்தாங்க நீங்க இதை கட் பண்ணுங்க' எனச் சொல்லி ஒரு தட்டில் பூண்டுகளைக் கொடுத்தார் மமதி. ஜனனிக்கு வேலை கொடுக்கப்பட்ட மறு கணமே, `நான்தான் இருக்கேன்ல' என்றபடி பூண்டுகளை உரிக்க உதவிக்கு வந்தார் ஷாரிக். வேலைகள் முடிந்ததும் ஜனனி ஷாரிக்கிடம், `தேங்க்ஸ் டா தம்பி' என்று சொல்லியது.... ஷாரிக்குக்கு பல்போ பல்பு!

* சமைத்துக்கொண்டிருந்தவர்களைச் சுட்டிக் காட்டி வைஷ்ணவியிடம் `என்ன டிபன்' என்று பாலாஜி கேட்டதுக்கு, `தெரியல ஏதோ சூடா பண்றாங்க' என்றார் வைஷ்ணவி. அப்போது மமதி அருகில் இல்லை. `அப்போ சுடு தண்ணி வைக்க வேண்டியதுதானே' என்று பாலாஜி கிண்டலடித்தார். மமதி அருகில் வந்தவுடன், `இந்தக் கிண்டல்தானே வேணாம்ங்கிறது, நமக்காகத்தானே அவங்க பண்றாங்க' என்று வைஷ்ணவி சொல்ல, பாலாஜிக்கு பல்போ பல்பு! 

* மஹத்தும் ரம்யாவும் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்துகொண்டிருந்தனர். மஹத் சில உடற்பயிற்சி டிப்ஸ்களை ரம்யாவுக்குச் சொல்லிக்கொடுத்தார். இவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஐஷ்வர்யா, `நானும் வொர்க்கவுட் பண்ணணும்' என ஏக்கத்தோடு சொல்ல, `அதெல்லாம் ஒண்ணும் வேணாம். உனக்குக் கால் சரியாகட்டும் அப்புறம் பண்ணிக்கலாம்' என்று ஷாரிக் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். `tag that ஃப்ரெண்டு, பொண்ணுங்களை பார்த்து பார்த்து கவனிச்சுக்குவான்’ மீம் ஞாபகத்துக்கு வந்தது.

* மமதியும் மும்தாஜும் டின்னர் செய்துகொண்டிருந்தனர். அப்போது மும்தாஜிடம் வந்த ஐஷ்வர்யா, `நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கணும்' எனச் சொல்ல, `கொடுக்கிறதா வேண்டாமானு நான் யோசிச்சுதான் சொல்லுவேன்' என்று ஐஷ்வர்யாவிடம் வம்பிழுத்துக்கொண்டிருந்தார் மமதி. அனந்த், `மும்தாஜை ஏன் கல்யாணம் பண்ணிக்கணும்' எனக் கேட்டதற்கு, `அவங்க ரொம்ப அழகா இருக்காங்க' என வெட்கப்பட்டுக்கொண்டே பதிலளித்தார். அய்யயோ அப்போ ஷாரிக்கோட வாழ்க்கை?!

* இதற்கு நடுவில் பிக் பாஸிடமிருந்து அறிக்கை வந்ததா அல்லது டாஸ்க்கா எனத் தெரியவில்லை, அனைவரும் சோபாவில் அமர்ந்திருந்தார்கள். அந்த இடத்தில் கட் ஆன சீன், வேறோர் இடத்துக்கு ஜம்ப் ஆனது. ஐஷ்வர்யா மிதமான வேகத்தில் ட்ரெட் மில்லில் வாக்கிங் செய்துகொண்டிருந்தார். கூடவே யாஷிகாவும், ஷாரிக்கும் அரட்டை அடித்துக்கொண்டிருந்தனர். `யார் யாருக்கு என்னென்ன சாப்பாடு பிடிக்கும்' என்ற டாப்பிக்கை இழுத்த ஷாரிக், `எனக்கு நீட்டமா ஒண்ணு இருக்குமே என்னாது, ஆங்... முருங்கைக்காய். அது எனக்கு ரொம்பப் பிடிக்கும்' என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது, யாஷிகா சில சென்சார் வசனங்களில் கவுன்டர் கொடுத்துக்கொண்டிருந்தார். ஐஷ்வர்யா செய்யும் ஒவ்வோர் அசைவுக்கும் ஏதாவது சொல்லிக்கொண்டேயிருந்தார், ஷாரிக். 

* நித்யா பாலாஜியிடம் சமாதானம் ஆகிவிட்டார் போல. பாஸிங்கில் திரும்பிய கேமரா காட்டிய ஃப்ரேமில் பாலாஜி, நித்யா, டேனியல், சென்றாயன் என நான்கு பேரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். `பவர் ஸ்டார் வர்றதா சொன்னாங்க' என நித்யா கேட்க, `அவர்லாம் வந்தாப்லனா ரெண்டு நாள், மூணு நாள்கூட தாக்குப்பிடிக்க மாட்டாப்ல' எனக் கூறினார் பாலாஜி.