Published:Updated:

கோபத்தைக் குறைக்க யாஷிகாவின் டிப்ஸ்..! பிக் பாஸ் மிட்நைட் மசாலா

தார்மிக் லீ
கோபத்தைக் குறைக்க யாஷிகாவின் டிப்ஸ்..! பிக் பாஸ் மிட்நைட் மசாலா
கோபத்தைக் குறைக்க யாஷிகாவின் டிப்ஸ்..! பிக் பாஸ் மிட்நைட் மசாலா

ரம்பமாக இழுத்துக்கொண்டிருந்த தண்ணீர் தொட்டி டாஸ்க் ஒரு வழியாக நேற்று முடிந்துவிட்டது. அதுபோக பிக் பாஸால் சர்ப்ரைஸ் கொடுக்கப்பட்டு மும்தாஜுக்கு பிறந்தநாள் வாழ்த்தும், கேக்கும் கிடைத்தது. இந்த இடைப்பட்ட நேரத்தில் நேற்று பிக் பாஸ் மிட்நைட் மசாலாவில் என்ன நடந்தது!

* யாஷிகா அணிந்திருக்கும் ஆடைகள் அனைத்தும் அவருக்கே பிரத்யேகமாக செய்யப்பட்டிருக்கும்போல. எப்படித்தான் இவருக்கு மட்டும் இப்படிக் கிடைக்கிறதோ. இவருக்கு ஈக்குவலாக டஃப் கொடுக்கிறார், ஐஸ்வர்யா. வீட்டைச் சுற்றியிருக்கும் கண்ணாடிகளில் தன் அழகை ரசித்துக்கொண்டிருந்த யாஷிகா கேமராவின் அருகில் வந்து, 'நான் ஒரு ஜோக் சொல்றேன்' என்று ஆரம்பித்தார். 'வீட்டுல நான் ஃபோனைக் கீழே போட்டேன். ஆனா அது கீழ விழுகலை, ஏன்னு கண்டுபிடிங்க...' என கொஞ்சிக்கொண்டிருந்தார். 'சரி நானே சொல்றேன். ஃபோனை நான் ஏரோப்ளேன் மோட் போட்டிருந்தேன், ஸோ. ஃபோன் பறந்துருச்ச்ச்ச்சு...' என தங்கதுறையை ஓவர்டேக் செய்யும் ஜோக்குகளை கடித்துக்கொண்டிருந்தார்.  'என் ஜோக் பிடிச்சிருந்தா இன்னும் நிறைய சொல்றேன். சீக்கிரம் உங்களை மீட் பண்றேன்' எனச் சொல்லி ஃப்ளையிங் கிஸ் கொடுத்து விளையாடிக்கொண்டிருந்தார். குறும்பு! 

* பிக் பாஸ் அடுத்தபடியாக எல்லோருக்கும் புது டாஸ்க் கொடுத்திருப்பார் போல. கார்டன் ஏரியாவில் சில செடி தொட்டிகளும், டேபிள்களும் வைக்கப்பட்டிருந்தது. அனைவரும் அதற்கு தயாராகிக்கொண்டிருந்தனர். பாலாஜி அதற்காக பவுடர் அடித்து, விபூதி வைத்து ரெடி ஆகிக்கொண்டிருந்தார். சென்றாயன் அங்கிருந்த செடிகளுக்கு எப்படி தண்ணீர் ஊற்றுவது என வைஷ்ணவிக்கும், ரம்யாவுக்கும் அறிவுரை சொல்லிக்கொண்டிருந்தார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு செடி ஒதுக்கப்பட்டிருந்தது. எந்தெந்த செடி யார் யாருடையது என்று ஒவ்வொருவருக்கும் விளக்கம் அளித்துக்கொண்டிருந்தார், வைஷ்ணவி. சிறிது நேரம் கழித்து சென்றாயன் பால்ய மோடுக்குத் திரும்பி அங்கிருக்கும் டேபிள்களை வைத்து காவியம், கணிக் காவியம் விளையாடிக்கொண்டிருந்தார். அடுத்த கூத்துக்கு ரெடியாகுங்க பாய்ஸ். ஃபுல் ஃபன்தான். 

* யாஷிகா அங்கிருக்கும் 60 கேமராக்களில் 20 கேமரா முன் நின்று கிஸ் மேல் கிஸ்ஸாக கொடுத்து செம ஜாலி மோடில் இருந்தார். ஆனால் இதற்காக ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஜோக்கோடு வந்தால் வீ ஆர் பாவம். 'சென்னையில இருந்து இலங்கைக்கு பாலம் கட்டினா என்ன ஆகும்?' என்று கேள்வி கேட்ட யாஷிகா, அங்கிட்டும் இங்கிட்டும் குதித்து முடித்துவிட்டு, 'நான் பதில் சொல்றேன் யாருக்கும் சொல்லாதீங்க எனச் சொல்லி, 'காசு செலவாகும்' என மரண மொக்கையைப் போட்டு, அவரே குபீரென சிரித்துக்கொண்டார். 'இதை வெளியில வேற சொல்லி நான் செறுப்படி வாங்கிறதுக்கா... வேணாம் தாயி!')  மறுபக்கம் சென்றாயன் காவியம் கேமை விடுவதாக இல்லை. ஒரு டேபிளில் விளையாட்டை ஆரம்பித்தவர் வரிசையாக டேபிள்களை வைத்து விளையாட ஆரம்பித்துவிட்டார். 'சோதிக்காதீங்கடா எங்களைய... சோதிக்காதீங்க'

* மஹத்துக்கும் சென்றாயனுக்கும் மீண்டும் ஏதோ பஞ்சாயத்து வந்துவிட்டது. யாஷிகாவிடம் வந்த மஹத், 'நான் கோபத்தைக் குறைக்கணும், ரொம்ப கோபப்படுறேன்' என சொல்ல, 'இது ரொம்ப சின்ன பிரச்னை. அதுக்குனு ஒரு டைம் வரும். அப்போதான் கோபப்படணும். இப்போவே கோபப்பட்டா அதுக்கு யூஸ் இல்லை. ஆடியன்ஸ் பார்த்தா நீதான் கிறுக்கன் மாதிரி தெரிவ. சென்றாயன் அண்ணா பாவம். அவரையேபோய் ட்ரிகர் பண்ணிட்டு இருக்க' என மஹத்துக்கு அட்வைஸ் செய்துகொண்டிருந்தார், யாஷிகா. அநேகமாக பிரச்னை பெரிதாக இருக்கும்போல. மஹத் எதையோ தூக்கி எங்கோ வைத்துவிட்டார் போல. அதற்கு சென்றாயன் கடுப்பாகி மஹத்தை திட்டிவிட்டார், மஹத்தும் பதிலுக்கு மல்லுக்கு நிற்க பெரிய சண்டை என இவர்கள் பேசுவதில் இருந்து தெரியவருகிறது. இவர்களுடன் சேர்ந்து ஷாரிக்கும் ஐஸ்வர்யாவும் இதைப் பற்றி டிஸ்கஸ் செய்துகொண்டிருந்தனர். 

* மஹத், வெளியே சென்ற பின், யாஷிகா தான் சிறு வயதில் சென்னைக்கு வந்ததில் ஆரம்பித்து, 'எங்க அப்பா லெதர் பிஸ்னஸ் பண்றார். ஆனா இப்போ ரொம்ப டல் ஆகிருச்சு, சும்மாதான் இருக்கார்' என அவர் கதையை ஐஸ்வர்யாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார். இவர் பேசி முடித்ததும், ஐஸ்வர்யா ரகசியமாக பேசிக்கொண்டிருந்தார். 'வீட்டுக்கு போறதுக்கு எனக்கு இஷ்டம் இல்லை, ஸோ நான் இங்கே இருக்கேன். பிக் பாஸை நல்ல ஃப்ளாட்ஃபார்மா யூஸ் பண்ணிக்கணும். சீக்கிரமே எலிமினேட் ஆகக்கூடாது. அட்லீஸ்ட் ஒரு மாசமாச்சும் இருக்கணும்' என்று தயக்கத்துடன் யாஷிகாவிடம் ஃபீல் பண்ணிக்கொண்டிருந்தார். 'ஸாரி... உங்க அப்பா கண்டிப்பா பிரவுடா இருப்பாங்க. மேல இருந்து எல்லாமே பார்த்துட்டுதான் இருக்கார். கண்டிப்பா நீ இந்த வீட்டுல இருப்ப. வெளியல உனக்கு நிறைய ஃபேன்ஸ் இருக்கப் போறாங்க பாரு' என்று யாஷிகா ஐஸ்வர்யாவுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார்.

கிச்சனில் டேனி, மஹத், பாலாஜி பேசி விளையாடிக்கொண்டிருக்க, சென்றாயன் மும்தாஜிடம் ஏதோ சீரியஸாக பேசிக்கொண்டிருந்தார். ஆக மொத்தம் ஏதோ வினோதமான டாஸ்க்கும், சென்றாயன் - மஹத் சண்டையும் இருக்கும். இதற்கு மேல் எதுவும் சம்பவங்கள் நிகழ்ந்தால் எக்ஸ்ட்ரா போனஸ். பொறுத்திருந்து பார்ப்போம்!