Published:Updated:

அறைந்து அறைந்து அன்பு செய்யுங்கள்! பிக் பாஸ் மிட்நைட் மசாலா ஃபார்முலா #BiggBossTamil2

தார்மிக் லீ
அறைந்து அறைந்து அன்பு செய்யுங்கள்! பிக் பாஸ் மிட்நைட் மசாலா ஃபார்முலா #BiggBossTamil2
அறைந்து அறைந்து அன்பு செய்யுங்கள்! பிக் பாஸ் மிட்நைட் மசாலா ஃபார்முலா #BiggBossTamil2

அறைந்து அறைந்து அன்பு செய்யுங்கள்! பிக் பாஸ் மிட்நைட் மசாலா ஃபார்முலா #BiggBossTamil2

மஹத்தின் கோபம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் எதையோ தூக்கிப் போட்டு உடைத்து தன் கோபத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார். என்றைக்கு அங்கிருக்கும் கேரமாக்களையும், டி.வியையும் தூக்கிப்போட்டு உடைக்கப்போகிறார் எனத் தெரியவில்லை. நேற்று எபிசோடின் முடிவில் பாலாஜியுடன் மல்லுக்கு நின்றுகொண்டிருந்தார். இந்தப் பஞ்சாயத்தைத் தொடர்ந்து பிக் பாஸ் மிட்நைட் மசாலாவில் என்ன நடந்தது?

* ஏதாவது ஒன்று சொல்லி தினம் ஒரு பிரச்னையில் சிக்குகிறார், பொன்னம்பலம். பிக் பாஸ் வீட்டின் சர்ச்சைக்குரிய ஆளாகவே மாறிவிட்டார். ஷாரிக்கிடம் இன்னைக்கு செவ்வாய் கிழமைதானே என்று கேட்டு விரல் விட்டு எண்ணி கிழமைகளை மனப்பாடம் செய்துகொண்டிருந்தார். ஒருவேளை கமல் வந்து நம்மிடம் கேள்வியாய் கேட்பார் என்பதற்காகவோ. எல்லோரும் ஒரு கும்பலை உருவாக்கி கமென்ட் அடித்துக்கொண்டிருக்க, பொன்னம்பலம் மட்டும் வீடு முழுக்க தன்னந்தனியாய் உலா வந்துகொண்டிருந்தார். ஸோ சேட்!

* ஸ்டோர் ரூமில் வைக்கப்பட்டிருந்த டாஸ்க் விவரங்களை எடுத்து ரித்விகாவும் ஷாரிக்கும் மட்டும் வாசித்துக்கொண்டிருந்தார்கள். `இந்த ரூல்ல இருக்கிற முதல் விஷயத்தையே இவங்க ஒழுங்காப் பண்ணல’ எனச் சொல்லிவிட்டு, வரிசையாக விதிமுறைகளை வாசித்துக்கொண்டிருந்த ரித்விகா, போலீஸ் (மஹத், மும்தாஜ், சென்றாயன்) மீது இருவரும் குறைகளாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதன் பிறகு இவர்களுடன் இணைந்த வைஷ்ணவியும் சேர்ந்து, தங்களது உடைமைகளைப் பாதுகாத்துக்கொண்டே, `லக்ஸரி பட்ஜெட் டாஸ்கில ஜெயிப்பது எப்படி’ என பயங்கரமாகத் திட்டம் தீட்டிக்கொண்டிருந்தனர்.

* மஹத் போலீஸ் அதிகாரியாக டாஸ்கில் பொறுப்பேற்றிருப்பது நம் அனைவருக்கும் தெரியும். அதன் பிறகு வந்த புது டாஸ்கின்படி பாலாஜி நிருபராகவும், ரம்யா வீடியோகிராஃபராகவும் மாறி மஹத்திடம் சில கேள்விகளைக் கேட்டனர். `இந்த வீட்டுல காவல் துறை சரியா இருக்குனு இங்க இருக்க மக்கள்தாம் சொல்றாங்க. அது எந்த அளவுக்கு உண்மைனு சம்பந்தப்பட்ட அதிகாரிகிட்டே கேட்போம்' எனச் சொல்லி மைக்கை நீட்டினார், பாலாஜி. முழு காவல் துறை அதிகாரியாகவே மாறிய மஹத், `காவல் துறை கண்டிப்பாத் தன் கடமையைச் செய்யும். பொது மக்களும் இதுக்கு ஒத்துழைக்கணும்' எனச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கேமராவை வேறு பக்கம் திருப்பிவிட்டார்கள். அநேகமாக பாலாஜி ஏடாகூடமாகக் கேள்விகள் கேட்க, அதற்கு கடுப்பாகி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கும் என நினைக்கிறேன். 

* எதிரெதிரே அமர்ந்து ஷாரிக்கும் பொன்னம்பலமும் தியானம் செய்துகொண்டிருந்தனர். பொன்னம்பலத்துக்கு டஃப் கொடுக்க முடியாத ஷாரிக், இழுத்து கொட்டாவி விட்டார். தியானம் பண்ணா இதெல்லாம் வருமோ! இந்தக் களேபரங்களுக்கு நடுவில் மஹத்துக்குக் கடுமையான காய்ச்சல் போல. கண்ணு முழி பிதுங்கி நோயாளியாகப் படுத்திருந்தார். ஜனனி பொன்னம்பலத்திடமிருந்து சில மாத்திரைகளை வாங்கி மஹத்துக்குக் கொடுத்தார். வைஷ்ணவி, வழக்கம்போல் கழுத்து நரம்பு புடைக்க அந்த டாஸ்கின் விதிமுறைகளை மஹத்திடம் சொல்லி வாதிட்டுக்கொண்டிருந்தார். `செத்தாலும் தோண்டி ரூல்ஸ் சொல்லுவா போல' என்றபடி பாவமாகப் படுத்திருந்தார், மஹத். 

* கார்டன் ஏரியாவில் நித்யா, சென்றாயன், பாலாஜி, ரம்யா என இவர்கள் நான்கு பேரும் பேசிக்கொண்டிருந்தனர். `ஏன் மாமா சாப்பிடாம இருக்க, போய் சாப்பிடு' என பாலாஜிக்கு அறிவுரை சொல்லிக்கொண்டிருந்தார், சென்றாயன். பாலாஜி பேசுவதற்குள் அவரை இடைமறித்து, `இவரு எப்பவுமே இப்படித்தான். 9 வருஷமா இதையேதான் பண்ணிட்டிருந்தார். சாப்பிடு சாப்பிடுனு பின்னாலே போவேன். எனக்குப் பசிக்கலனு சொல்லிட்டு நைட் நான் தூங்குனதுக்கு அப்புறம் நடு ராத்திரில போய் சாப்பிடுவார்' எனக் கலாய் சேர்ந்த அக்கறையோடு சென்றாயனிடம் சொல்லிக்கொண்டிருந்தார், நித்யா. `மாமா போட்டுக்க மாமா' என்றபடி சென்றாயனுடன் குஷியில் விளையாடிக்கொண்டிருந்தார், பாலாஜி. 

* யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் அவர்களது அறையில், அறைந்து அறைந்து விளையாடிக்கொண்டிருந்தனர். `யாராவது ஒரு ஸ்லாப் பண்ணா கல்யாணம் ஆகாது, இன்னோரு ஸ்லாப் பண்ணுங்கனு சொல்லுவேன்' என `சந்தோஷ் சுப்ரமணியம்’ ஜெனிலியா போல் யாஷிகாவிடம் கொஞ்சிக்கொண்டிருந்தார், ஐஸ்வர்யா. இதைக் கேட்ட உடனேயே பலீர் என ஓர் அறை விட்டார் யாஷிகா. ஒரு கட்டத்தில் இருவருக்கும் கிறுகிறுப்புத் தலைக்கேறி, அவர்களை அவர்களே அறைந்துகொண்டனர். `ரொம்ப நேரம் நல்லாத்தானே பேசிக்கிட்டு இருந்தாய்ங்க!'

வைஷ்ணவியிடம் சமரசமாக கிச்சனில் வந்து நீண்ட நேரம் பேச முயற்சி செய்துகொண்டிருந்தார், பொன்னம்பலம். ஆனால், வைஷ்ணவி இவர் கேட்பதற்கு முகம் கொடுத்தே பேசாமல் இருந்தார். ஆக மொத்தம் பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கேங் கிடைத்துவிட்டது. இனிமேல்தான் புறம் பேசுவது அதிகமாக இருக்கும். ஆனால், பொன்னம்பலம்தான் பாதிக் கடலில் தத்தளிப்பது போல் `எங்கிட்டுப் போவது' என தெரியாமல் இருக்கிறார். தொடர்ந்து பார்ப்போம்!

அடுத்த கட்டுரைக்கு