Published:Updated:

"ப்ளீஸ் ஷாரிக் புரிஞ்சுக்கோ..!" பெஸ்ட் ஃப்ரெண்டுக்காக கலங்கிய ஐஸ்வர்யா #BiggBossTamil2

"ப்ளீஸ் ஷாரிக் புரிஞ்சுக்கோ..!" பெஸ்ட் ஃப்ரெண்டுக்காக கலங்கிய ஐஸ்வர்யா #BiggBossTamil2

"ப்ளீஸ் ஷாரிக் புரிஞ்சுக்கோ..!" பெஸ்ட் ஃப்ரெண்டுக்காக கலங்கிய ஐஸ்வர்யா #BiggBossTamil2

"ப்ளீஸ் ஷாரிக் புரிஞ்சுக்கோ..!" பெஸ்ட் ஃப்ரெண்டுக்காக கலங்கிய ஐஸ்வர்யா #BiggBossTamil2

"ப்ளீஸ் ஷாரிக் புரிஞ்சுக்கோ..!" பெஸ்ட் ஃப்ரெண்டுக்காக கலங்கிய ஐஸ்வர்யா #BiggBossTamil2

Published:Updated:
"ப்ளீஸ் ஷாரிக் புரிஞ்சுக்கோ..!" பெஸ்ட் ஃப்ரெண்டுக்காக கலங்கிய ஐஸ்வர்யா #BiggBossTamil2

‘மாணவக் கண்மணிகளின்’ சேட்டைகளும் கற்றல்களும் இன்றும் தொடர்ந்தன. ‘பாடகி’ ரம்யாவை ஆசிரியராக வைத்து சங்கீதம் சொல்லித் தரும் விளையாட்டை இன்று உருவாக்கியது நல்ல விஷயம். இதைப் போலவே அந்தந்த துறையினரின் அனுபவம் மற்றவர்களுக்கு பயன்படும்படியான டாஸ்க்குகளை ‘பிக்பாஸ்’ இனி உருவாக்கலாம். ஆனால் பெரும்பாலோனோர் சினிமாத்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால் பல்வேறு துறை சார்ந்த விஷயங்கள் வராது என்பது ஒரு குறை. 

இன்றைய நிகழ்ச்சியின் ‘நாயகி’ என ஐஸ்வர்யாவைச் சொல்லலாம் என்று தோன்றுகிறது. ‘நான் பேபி இல்ல’ என்று அவர் பொதுவாக சொல்லும் சமயங்களில் சிரிப்பு வந்தாலும் வேறு சமயங்களில் அவர் வெளிப்படுத்தும் முதிர்ச்சி வியக்க வைக்கிறது. அப்படியொரு தினம் இன்று. தங்களின் பிரியமானவர்களுக்கு கடிதம் எழுதும் பகுதியில் ‘தன் உயிர் நண்பனுக்கு’ என்று அவர் எழுதிய கடிதத்தில் மொழித் தகராறு இருந்தாலும் உண்மை இருந்தது. எனவே அது சிறந்த கடிதமாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை. 

"ப்ளீஸ் ஷாரிக் புரிஞ்சுக்கோ..!" பெஸ்ட் ஃப்ரெண்டுக்காக கலங்கிய ஐஸ்வர்யா #BiggBossTamil2

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தான் வாசித்த கடிதத்தால் எங்கே ஷாரிக் புண்பட்டிருப்பாரோ என்று நினைத்து அவரிடம் அதை தெளிவுப்படுத்தியது அபாரம். வந்த சில நாட்களில் ஷாரிக் மீது இவருக்கு தன்னிச்சையாக ஈர்ப்பு ஏற்பட்டாலும் ‘அவருக்கு இன்னொரு பெண் தோழி இருக்கிறார்’ என்பதை அறிந்தவுடன் முதலில் துயருற்று பின்பு விலகி நிற்கிறார் ஐஸ்வர்யா. என்றாலும் இவருடைய நோக்கில், ஷாரிக் மீது வைத்திருக்கும் அன்பு ‘உள்ளே’ அப்படியே இருப்பதால், தன்னுடைய கடிதத்தின் வார்த்தைகளால் ‘ஷாரிக்’ தன்னிச்சையாக புண்பட்டு விடக்கூடாது என்பதற்காக ‘அவன் என் பெஸ்ட் பிரெண்டு. வேற ஒண்ணுமில்ல’ என்று தெளிவுப்படுத்தியது, ஒரு நல்ல காதல் திரைக்கதையின் அற்புதமான பகுதி. 

‘பெண்கள் ஆண்களை காதலிப்பது போல் பாவனை செய்து விட்டு பிறகு எளிதாக கழற்றி விட்டு விட்டு போய் விடுவார்கள்’ என்கிற விஷயம் நகைச்சுவையாகவும் தீவிரமான தொனியிலும் திரைப்படங்களில் மறுபடி மறுபடி சொல்லப்படுகிறது. நடைமுறையில் கூட இளைஞர்கள் அதை நம்புகிறார்கள். எல்லாவற்றிலும் விதிவிலக்குகள் இருப்பது போல சில பெண்கள் அப்படி இருக்கலாம். ஆனால் காதல் என்கிற உணர்வில் மிக உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பவர்கள் பெண்களே என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம். அவர்கள் ‘உண்மையாக’ நேசித்த மனிதரை அவர்களால் ஆயுள் முழுக்க மறக்க முடியாது. ஒரு பெண் தன் காதலை விட்டு விலகுகிறாள் என்றால் குடும்ப அழுத்தம் முதற்கொண்டு அதற்கு பல்வேறு வகையிலான நியாயமான காரணங்கள் இருக்கும். இந்த நடைமுறைச் சிக்கல்களை ஆண்களால் பெரும்பாலும் புரிந்து கொள்ள முடியாது. ‘மச்சான்.. ஏமாத்திட்டாடா…’ என்று புலம்பி, தண்ணியடித்து அதிலும் ஒருவித சுகம் காண்பார்கள். 

"ப்ளீஸ் ஷாரிக் புரிஞ்சுக்கோ..!" பெஸ்ட் ஃப்ரெண்டுக்காக கலங்கிய ஐஸ்வர்யா #BiggBossTamil2

**

“ஆடுங்கடா.. மச்சான் ஆடுங்கடா” என்கிற ‘நாடோடிகள்’ திரைப்படப்பாடலோடு 31-ம் நாள் காலை விடிந்தது. காலையில் ஒலிக்கும் திரையிசைப்பாடல் முடிந்தவுடன் ‘உலக நீதி’ பாடலை சொல்ல வேண்டும் என்று சிநேகன் சொன்னதற்கு மாறாக, மக்கள் காஃபி அருந்தி, உலவிக் கொண்டிருக்கிறார்களே என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே ரித்விகா இவர்களை ஒருங்கிணைத்தார். கார்டன் ஏரியாவில் கூடி, ஒவ்வொரு வரியையும் ரித்விகா சொல்ல மற்றவர்கள் திரும்பச் சொன்னார்கள். 

“நீ வெள்ளந்தியா நடிக்கறேன்னு சில பேர் நினைக்கறாங்க.. நீ அப்படித்தான்னா… அப்படியே இரு.. யாரா இருந்தாலும் ரொம்ப நாளைக்கு நடிக்க முடியாதில்லையா.. மத்தவங்க ஹர்ட் பண்ணாம நாம நாமா இருந்தா போதும்” என்று சென்றாயனிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ரம்யா.. “நான் எப்பவுமே இப்படித்தாங்க.. ஜனனிக்குத் தெரியும். கேட்டுப்பாருங்க” என்று சென்றாயன் சொன்னதை ‘ஆமாம். எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் இவர் இப்படித்தான்” என்று பாதுகாப்பாக சாட்சியம் சொன்னார் ஜனனி.  

"ப்ளீஸ் ஷாரிக் புரிஞ்சுக்கோ..!" பெஸ்ட் ஃப்ரெண்டுக்காக கலங்கிய ஐஸ்வர்யா #BiggBossTamil2

காமிரா முன் நின்று பேசிக் கொண்டிருந்தார் பாலாஜி. ‘நித்யா.. எப்படி இருக்கீங்க? குழந்தை ஸ்கூல் போயிட்டாங்களா.. நீ இங்க இருந்த வரைக்கும் சப்போர்ட்டா இருந்த மாதிரி இருந்தது. மத்தவங்களும் ஆதரவு தெரிவிக்கறாங்க.. இருந்தாலும் ஏதோவொண்ணு குறையுது. நீ உன் வேலையை சிறப்பா செய்.. நான் கூட நிப்பேன்” என்று ‘புதிய’ பாலாஜியாக உருமாறிக் கொண்டிருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது. ஆனால், வெளியே வந்து நித்யா அளித்த பேட்டிகளை, பாலாஜி பார்க்கும் போது என்னாகப்போகிறதோ.

பாடல் ஆசிரியை ‘ரம்யா’வின் வழிகாட்டுதலில் மாணவர்கள் அடிப்படை சங்கீதம் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற அறிவிப்பு வந்தது. ‘தொண்டைத்தண்ணி போக பாட வேண்டும்’ என்பதை மாணவர்களுக்கு உணர்த்துவதற்காகவோ என்னமோ ‘தண்ணி பாட்டில்லாம் எடுத்து வெச்சுக்கங்க’ என்று நினைவுப்படுத்தினார் தலைமை ஆசிரியை ரித்விகா. 

"ப்ளீஸ் ஷாரிக் புரிஞ்சுக்கோ..!" பெஸ்ட் ஃப்ரெண்டுக்காக கலங்கிய ஐஸ்வர்யா #BiggBossTamil2

சங்கீத வகுப்பிலும் தன் சேட்டையை ஆரம்பித்தார் மஹத். தாமதமாக வந்து விட்டு ‘வெளியே நிற்க வேண்டும்’ என்று ஆசிரியை சொன்னதும் ‘சுச்சு’ போகணும் என்று அலப்பறையை துவங்க.. ‘அதெல்லாம் முன்னாடியே போகணும்’னு சொன்னேனா இல்லையா?” என்று கண்டிப்பான குரலில் ரித்விகா சொல்ல, ‘அதை முன்னாடிதான் போக முடியும்’ –னு சொல்வான் மிஸ்’ என்று வில்லங்கமான ஜோக் ஒன்றை அடித்தார் டேனி. வகுப்பறையே வெடித்து சிரித்தது. இதனால் ‘பெஞ்ச்’ மீது நிற்கும் தண்டனையை அடைந்தார் டேனி.

கர்நாடக சங்கீதத்தின் அடிப்படையான ஏழு ஸ்வரங்களான.. ‘ஸரிகமபதநி’ யை ஏறுவரிசையில் பாடுவது ஆரோகணம். இறங்குவரிசையில் பாடுவது அவரோகணம். இதை மிக எளிமையாக சொல்லித் தந்தார் ரம்யா. மற்றவர்கள் ஏறத்தாழ இதைப் பாடி விட்டாலும் சென்றாயன்தான் சற்று சிரமப்பட்டார். இதற்கிடையில் மற்றவர்களின் சேட்டையைத் தாங்க முடியாமல் ரம்யாவும் சிரித்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் இவர்கள் தன்னிச்சையான ஒத்திசைவுடன் பாடிய சேர்ந்திசை நன்றாகவே இருந்தது. என்னவொன்று “மேல் ஸ்தாயியை எட்டிப்பிடிக்க’ டேனிதான் அவ்வப்போது பெஞ்ச்சின் மீது ஏறி நிற்க வேண்டியிருந்தது. 

"ப்ளீஸ் ஷாரிக் புரிஞ்சுக்கோ..!" பெஸ்ட் ஃப்ரெண்டுக்காக கலங்கிய ஐஸ்வர்யா #BiggBossTamil2

சங்கீதத்திற்கு ஏற்பட்ட அடுத்த சோதனை. வீட்டு உறுப்பினர்கள் நான்கு அணிகளாகப் பிரிக்கப்பட்டு திரையிசைப்பாடல்களை பாட வேண்டும். அணி 1. பாலாஜி – வைஷ்ணவி (‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்) அணி 2. சென்றாயன் மற்றும் மும்தாஜ் (செல்ஃபி புள்ள). அணி 3. ஐஸ்வர்யா, யாஷிகா மற்றும் பொன்னம்பலம் (அழகு மலர் ஆட). அணி.4. டேனி, மஹத், ஜனனி மற்றும் ஷாரிக். (என் வீட்டுல நான் இருந்தேனே).

மாணவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட பாடல்களை ‘பயிற்சி’ செய்து கொண்டிருந்தார்கள். இட்லித்தட்டு, ஸ்பூன், பிளாஸ்டிக் சேர், வாட்டர் பாட்டில் ஆகியவற்றை வாத்தியங்களாக உபயோகித்து ‘டேனி’ டீம் ‘என் வீட்டுல நான் இருந்தேனே’வை சிறப்பாக பாடிக் கொண்டிருந்தது. 

"ப்ளீஸ் ஷாரிக் புரிஞ்சுக்கோ..!" பெஸ்ட் ஃப்ரெண்டுக்காக கலங்கிய ஐஸ்வர்யா #BiggBossTamil2

பொன்னம்பலத்தோடு யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவை அணியாக சேர்த்தது பிக்பாஸின் ‘வில்லங்கமான நோக்கம்’ என்று முதலில் தோன்றினாலும் இதன் காரணமாக அவர்களுக்குள் இணக்கமும் நட்பும் தோன்றியது நல்ல விஷயம். ‘சிலம்பொலிகள் புலம்புவதை கேள்’ என்ற வரிகளை ஐஸ்வர்யா மென்று தின்னும் போது தமிழன்னையும் ஒருபக்கம் புலம்பியிருக்கக்கூடும். 

‘செல்ஃபி புள்ள’யை கொத்து பரோட்டா போட்டுக் கொண்டிருந்தார் சென்றாயன். ‘ரொம்ப மேலே போகாதே.. ஹார்ட் வெடிச்சுடும்’ என்கிற வடிவேலு காமெடியை டைமிங்காக வைஷ்ணவிக்கு காட்டிக் கொண்டிருந்தார் பாலாஜி. 

தங்களின் திறமையை மேடையில் அரங்கேற்றும் நேரம் வந்தது. ‘சுந்தரி நீயும் பாடலுக்கு பாலாஜியும் வைஷ்ணவியும் பாடி ஆடி அந்தப் பாடலின் மரியாதையை கீழிறிக்கினர். வைஷ்ணவி பார்க்காத சமயத்தில் ஜாலியாக தலையில் அடித்துக் கொண்டார் பாலாஜி. ‘செல்ஃபி புள்ள’ பாடலுக்கு சமந்தாவாக மும்தாஜை கற்பனை செய்து பார்க்க அசாத்தியமான தைரியம் வேண்டும். இங்கும் பாடலை கொத்துப் பரோட்டா ஆக்கினார் சென்றாயன். 

"ப்ளீஸ் ஷாரிக் புரிஞ்சுக்கோ..!" பெஸ்ட் ஃப்ரெண்டுக்காக கலங்கிய ஐஸ்வர்யா #BiggBossTamil2

பொன்னம்பலத்திற்கு குரு வணக்கம் வைத்து விட்டு பாடலைத் துவங்கினர் ஐஸ்வர்யாவும் யாஷிகாவும். ‘தகதகதோம்..’ என்று பொன்னம்பலம் ஆவேசமாக ‘ஜதி’ சொல்ல .. இருவரும் ‘குதி குதி’யென்று குதித்துத் தீர்த்தனர். ‘போதும் வந்துடுங்க.. இதுக்கு மேல தாங்காது’ என்று பாடலை முடித்தார் பொன்னம்பலம். பாடல் முடிந்தவுடன் ஒருவருக்கொருவர் கைதட்டிக் கொண்டதோடு பொன்னம்பலம் அமர பக்கத்தில் இடம் தந்தனர், ஐஸ்வர்யாவும் யாஷிகாவும். 

எதிர்பார்த்தது போலவே ‘டேனி’ இசைக்குழு தங்களின் பாடலை சிறப்பாக பாடியதோடு, ‘சிறந்த அணியாகவும்’ தேர்வாகியது.

‘கோபத்தை குறைத்துக் கொள்கிறேன்’ என்று வாக்களித்திருந்தாலும் அவ்வப்போது ‘அந்நியன்’ மோடுக்கு போய் விடுகிறார் பாலாஜி. சென்றாயனுடன் அமர்ந்து பேசும் போது ‘முணுமுணுவென்ற’ குரலில் எவரையோ திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தார். நிறைய ‘ம்யூட்’கள். ‘நித்யா கத்தப் போகுது’ என்கிற பாவனை வேறு. 

"ப்ளீஸ் ஷாரிக் புரிஞ்சுக்கோ..!" பெஸ்ட் ஃப்ரெண்டுக்காக கலங்கிய ஐஸ்வர்யா #BiggBossTamil2

“யார் யார் என் கிட்ட எப்படி பழகறாங்கன்னு பார்த்துட்டு இருக்கேன்.. சென்றாயன் கிட்ட எஸ்.ஐ. பத்தி விளக்கம் கேட்டது பிரச்னையாச்சில்ல.. அவனோட பொறுப்பை பத்தி அவனுக்கு யாருமே சரியா சொல்லித் தரலை. எல்லோரும் அவனை வெச்சி காமெடி பண்ணாங்க.. பாலாஜி என்ன பண்ணார்னா... அவனோட பேன்ட்டை இழுக்கறது.. –தொப்பியை தட்றது..ன்னு என்னென்னமோ பண்ணிட்டு இருந்தாரு” என்று சொல்லிக் கொண்டிருந்த டேனியை இடைமறித்த ரம்யா.. “அந்த விஷயத்துல எனக்கும் கூட உன் மேல கோபம்தான். சென்றாயன் நடிக்கறாரான்னு சொல்றாங்க. எனக்குத் தெரியல. நான் அதை உணர்ற வரைக்கும் அதுக்கான benefit of doubt-ஐ அவருக்கு தந்துதான் ஆகணும்” என்று பேசிக் கொண்டிருந்தார். 

அடுத்த பகுதி கடிதம் எழுதுவது. ‘தங்களுக்கு நெருக்கமாக இருக்கும் உறவிற்கு தற்காலிக பிரிவினால் ஏற்பட்டிருக்கும் உணர்வை அன்பு, இரக்கம், கோபம், வருத்தம் ஆகிய உணர்வுகளின் மூலம் கடிதமாக எழுதி தெரிவிக்க வேண்டும். 

"ப்ளீஸ் ஷாரிக் புரிஞ்சுக்கோ..!" பெஸ்ட் ஃப்ரெண்டுக்காக கலங்கிய ஐஸ்வர்யா #BiggBossTamil2

‘என் உறவினர்களை சந்திக்காதது எத்தனை பெரிய தவறு என்பதை இங்கு வந்த பிறகு உணர்கிறேன். அவர்களின் அருமை இப்போதுதான் புரிகிறது. இனி சந்திப்பேன்” என்று இந்தப் பகுதியை துவங்கினார் ஜனனி. ‘தன்னுடைய ‘பெஸ்ட்’ பிரெண்டை மிஸ் செய்வதாக வருத்தப்பட்டார் ரம்யா. ‘தன்னுடைய தங்கை, உறவினர்கள் ஆகியவர்களை மிஸ் செய்வதாக சொன்ன சென்றாயன் ‘மக்களும் என் நண்பர்கள்தான்’ என்று ஐஸ் வைத்தார். (பொழச்சுக்குவே மக்கா!) 

‘எழுதத் தெரியாது.. படிக்கத் தெரியாது’ன்னு சொல்லிட்டு எப்படி சூப்பரா எழுதியிருக்காரு” என்று சென்றாயனின் கடிதத்திற்கு மகிழ்ந்து போனார் ரித்விகா. (சென்றாயன், திட்டமிட்டு வெள்ளந்தி மனிதர் போல் நடிக்கிறார் என்கிற சந்தேகம் பலருக்கு இருக்கிறது போல). 

மறைந்த தன் தந்தைக்கு ‘உருக்கமான’ கடிதம் எழுதியிருந்தார் டேனி. ‘வானத்துல இருந்து, வீட்ல இருக்கிற அம்மாவைப் பார்த்துக்கங்க..  உங்கள் ‘செல்லா’ என்று அவர் எழுதியிருந்தது நெகிழ்வானதாக இருந்தது. ஷாரிக்கின் கடிதமும் ஓகே. ‘அப்பா.. அம்மா. நல்லாயிருக்கீங்களா.. இதுவரைக்கும் உங்களுக்கு நான் நன்றி சொன்னதில்ல..இந்த உலகத்திலேயே நீங்கதான் பெஸ்ட்’ என்று நெகிழ்வாக சொல்ல, ‘பேட்டா’வை பாசத்துடன் பார்த்துக் கொண்டிருந்த மும்தாஜ் தாங்க முடியாமல் அழுது தீர்த்தார். 

‘Hi Angel’ என்று துவங்கிய ஐஸ்வர்யாவின் உணர்வுபூர்வமான கடிதம் சிறப்பானதாக தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘தங்களின் மகள் ‘போஷிகா’வை பார்த்துக் கொண்டவர்களுக்கு நன்றி’ என்று எழுதியிருந்தார் பாலாஜி. (‘என் நினைவே அவனுக்கு வரலை.. பார்த்தீங்களா..” என்று பாலாஜியின் அம்மா விகடன் நேர்காணலில் குறைப்பட்டிருந்தார். இந்தக் கடிதத்தில் அம்மாவையும் பாலாஜி குறிப்பிட்டிருந்தது நல்ல விஷயம்). 

"ப்ளீஸ் ஷாரிக் புரிஞ்சுக்கோ..!" பெஸ்ட் ஃப்ரெண்டுக்காக கலங்கிய ஐஸ்வர்யா #BiggBossTamil2

தன் குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் அத்தைக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார் பொன்னம்பலம். 

தன்னுடைய கடிதத்தால் ஷாரிக் ‘ஏதேனும்’ புண்பட்டிருந்தால் மன்னிக்குமாறு வேண்டிக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. ‘நீ ஒருவேளை ஹர்ட் ஆவலாம். ஆனா நான் இதைச் சொல்லியே ஆகணும். அவன் அத்தனை உதவி செஞ்சிருக்கான். என் அப்பா அம்மா கூட முக்கியமில்ல.. அவன் அத்தனை முக்கியமானவன். நீ ஃபீல் பண்ணாத” என்றெல்லாம் ஐஸ்வர்யா ஆறுதல் சொல்ல.. அதெல்லாம் ஒண்ணுமில்லை. I feel happy for you’ என்று சொல்லிக் கொண்டிருந்தார் ஷாரிக். 

**

பிக்பாஸ் வீட்டில் தாங்கள் சந்தித்த பிரசனைகள். மனவருத்தம் போன்றவற்றைப் பற்றி ‘கவுன்சிலிங்’ எடுக்க வேண்டும் என்கிற அறிவிப்பை பிக்பாஸ் அறிவித்தார். கவுன்சிலிங்’ அளிப்பவரின் பெயரைக் கேட்டவுடன் தலை சுற்றியது. வைஷ்ணவியாம். 

“நீங்க எந்தப் பிரச்னையா இருந்தாலும் என் கிட்ட பேசலாம்.. பேர் சொல்லியோ.. சொல்லாமலோ.. சொல்லலாம். இது நம்ம ரெண்டு பேர்க்குள்ளதான் இருக்கும்” என்று உளவியல் மருத்துவராகவே மாறியிருந்தார் வைஷ்ணவி. ‘ரகசியம் காக்கப்படும்’ என்று அவர் மறுபடி மறுபடி சொல்லும் போதுதான் சந்தேகமே வந்தது. 

"ப்ளீஸ் ஷாரிக் புரிஞ்சுக்கோ..!" பெஸ்ட் ஃப்ரெண்டுக்காக கலங்கிய ஐஸ்வர்யா #BiggBossTamil2

கவுன்சிலிங் பெற முதலில் வந்த டேனி சொன்ன  பிரச்னையே ‘வில்லங்கமாக’ இருந்தது. ‘பாலாஜி வாயு பிரச்னை காரணமாக அவ்வப்போது ‘டர்புர்’ரென்று சத்தம் போடறாராம். சொன்னாலும் ‘நான் என்னப்பா பண்றது.. அதுவா வருது’ ன்றாராம். இது ஆரோக்கியம் தொடர்பான பிரச்னையும் இல்லையா?” என்று டேனி சொல்ல.. ‘கடவுளே.. மொதல் கேஸே.. “கேஸ்’ பிரச்னையோடவா துவங்கணும்.. என்று வைஷ்ணவி நொந்து போயிருப்பார். “ஜனனி சொன்னா.. அவர் கேட்பார். மருந்து மாத்திரை எடுத்துக்கச் சொல்லலாம்.. சரியா…” என்று ஆலோசனை சொன்னார் வைஷ்ணவி. 

வைஷ்ணவியின் இந்த ‘கவுன்சிலிங்கைத்’ தாண்டி இன்னொருபுறம் வேறொரு ‘கவுன்சிலிங்கும்’ நடந்து கொண்டிருந்தது. மஹத்திற்கு சில உபதேசங்களைத் தந்து கொண்டிருந்தார் ஐஸ்வர்யா..  யாஷிகாவிற்கும் மஹத்திற்குமான உறவைப் பற்றி அது இருந்தது என்பதாக யூகம். “ஆயிரம் இருந்தாலும் என் ‘பிராச்சி’தான் எனக்கு முக்கியம். அவ ஸ்பெஷல்’ என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார் மஹத்.

அவர் ஏதோவொரு மனக்குழப்பத்தில் இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. வைஷ்ணவியிடம் அவர் சொல்லிக் கொண்டிருந்த விஷயமும் இதுதான். “நான் அடிப்படையில் உணர்ச்சிபூர்வமான ஆசாமி.. நான் நம்பறவங்க, மத்தவங்களைப் பத்தி எது சொன்னாலும் அதை உடனே நம்பிடுவேன். அவங்க சொல்ற வார்த்தைகங்லாம் விஷம் மாதிரி எனக்குள் ஏறிடும். அவங்க யாரைப் பத்தி சொன்னாங்களோ.. அவங்களைப் பார்க்கும் போது எனக்கு தன்னாலே கோபம் வருது.. ஆனா நான் நம்பினவங்களே.. அவங்க கூட கொஞ்சி பேசிட்டு இருக்கறது பார்க்கும் போது.. யாரை நம்பறதுன்னு தெரியல’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். 

"ப்ளீஸ் ஷாரிக் புரிஞ்சுக்கோ..!" பெஸ்ட் ஃப்ரெண்டுக்காக கலங்கிய ஐஸ்வர்யா #BiggBossTamil2

மஹத் ‘எடுப்பார் கைப்பிள்ளை’யாக இருக்கிறார்’ என்பதே இதன் சுருக்கம். ‘எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்பதே இதற்கான மருந்து. 

‘அம்மாவைப் பார்க்கணும்’ என்கிற குழறலான வார்த்தைகளுடன் பிற்பாடு மஹத் அழுது கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. ‘ஹோம் சிக்னெஸ்’ காரணமாகவோ அல்லது ஏதோவொரு குற்றவுணர்ச்சியில் அவர் அல்லாடுகிறார் என்று தோன்றுகிறது. ‘ஏதோதோ சொல்லி குழப்பி விட்டுடறாங்க’ என்று புலம்பிக் கொண்டிருந்த மஹத்தை, ரம்யா, ஐஸ்வர்யா மற்றும் ஜனனி ஆகியோர் சமாதானப்படுத்தினார்கள். மனதளவில் ஆண்கள் எத்தனை பலவீனமானவர்கள் என்பது நிரூபிக்கப்பட்ட தருணம் இது. 

இன்னொருபுறம் வைஷ்ணவியின் ‘கவுன்சிலிங்’ விடிய விடிய விடாமல் நடந்தது. “இங்க சில பேர் எமோஷன்ஸை கண்ட்ரோல் பண்ணிக்கறாங்க.. உதாரணத்திற்கு ஷாரிக் எந்த எமோஷனையும் வெளியே  காண்பிக்க மாட்டேங்கறான். இது என்னை கன்ப்யூஸ் பண்ணுது’ என்று சொல்லிக் கொண்டிருந்தார் யாஷிகா. 

"ப்ளீஸ் ஷாரிக் புரிஞ்சுக்கோ..!" பெஸ்ட் ஃப்ரெண்டுக்காக கலங்கிய ஐஸ்வர்யா #BiggBossTamil2

இன்னொரு பக்கம், மும்தாஜிடம் பேசிக் கொண்டிருந்தார் டேனி. ‘சிநேகன் கிட்ட திரும்பத் திரும்ப கேள்வி கேட்டது தொடர்பா சென்றாயனை நான் கிண்டல் பண்ணிட்டு இருந்தேன். மஹத் என்னைக் கூப்பிட்டு ‘அவனை அப்படில்லாம் சொல்லாதடா.. ஹர்ட் ஆகிடப் போறான்’னு அட்வைஸ் பண்றான். என்னைப் பத்தி என்னை நெனக்கறாங்க.. அவ்ள மந்தம்-னா.. சென்றாயனை குரங்கு.. சொறிநாய்.. ன்னு என்னென்னமோ சொன்னது இவன்.. நான்தான் இவனை கரெக்ட் பண்ணேன். இவன் வந்து இப்ப எனக்கு அட்வைஸ் பண்றான். “எனக்கும் சென்றாயனுக்கும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கு’ன்னு சொன்னப்புறம்தான் அடங்கினான்.  இவன் இன்னாவோ.. ஹீரோ மாதிரியும்.. நான் என்னமோ வில்லன் மாதிரியும்.. என்னங்கடா நடக்குது இங்க” என்றெல்லாம் ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தார் டேனி. 

“மஹத் உங்களைப் பத்தி சொன்ன ஒரு கமெண்ட்.. என்னை ரொம்ப அஃபெக்ட் பண்ணிச்சு.. ஆம்பளைங்க தங்களுக்குள்ள கிண்டல் பண்ணிக்கறது வேற… பொம்பளையைப் பத்தி பேசறது வேற..நீங்களும் அதுக்கு இடம் தர்றீங்க..” என்று வைஷ்ணவியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் பொன்னம்பலம்.. 

“என்னடா.. இது! மத்தவங்க பிரச்னையைப் பத்தி விசாரிக்கலாம்னு வந்தா.. நம்மளயே பிரச்னையாக்கறாங்க” என்று மனதிற்குள் வைஷ்ணவி நினைத்துக் கொண்டாரோ என்னமோ.. ‘இதுக்கு சொல்யூஷன் என்னன்னா.. என்று தொண்டையைச் செருமிக் கொண்டு ஆரம்பிக்க.. ‘அதெல்லாம் தேவையில்ல.. டைம் வேஸ்ட்’ என்று பொன்னம்பலம் கதவைச் சாத்தியது நல்ல காமெடி. ‘நான் சொல்லித்தான் தீருவேன்.. ஒரு மருத்துவரா.. அது என் கடமை’ என்று வைஷ்ணவி அடம்பிடிக்க.. “சுருக்கமா சொல்லுங்க’ என்று இன்னொரு பவுண்டரியை விளாசினார் பொன்னம்பலம். வைஷ்ணவியை போதுமான அளவிற்கு வெறுப்பேற்றியவுடன் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சொல்லியபடி விடைபெற்றுச் சென்றார் பொன்னம்பலம். 

"ப்ளீஸ் ஷாரிக் புரிஞ்சுக்கோ..!" பெஸ்ட் ஃப்ரெண்டுக்காக கலங்கிய ஐஸ்வர்யா #BiggBossTamil2

“அவர் பண்றது.. அதாவது ‘அவங்க’ பண்றதால நெறைய பேர் இங்க பாதிக்கப்படறாங்க.. இரிட்டேட்டா இருக்கு.. படிக்காததற்கு நான் ரொம்ப ஃபீல் பண்றேன்” என்று சொன்ன சென்றாயனுக்கு.. “அவங்க உங்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படுத்தலையே.. எல்லோருக்கும்தானே…’ என்று வைஷ்ணவி தந்த மகத்தான ஆலோசனையைக் கேட்டு தலைசுற்றியபடி கிளம்பினார் சென்றாயன்.

அடுத்த பேஷண்ட் மும்தாஜ். “யாரு கேரக்ட்டரையும் யாரும் மாத்த டிரை பண்ணக்கூடாது.. நான் அப்படித்தான் இருக்கேன்” என்று மும்தாஜ் கெத்தாக பேச ‘தெய்வமே.. நீங்க எங்கயோ போயிட்டீங்க.. நான்தான் உங்க கிட்ட கவுன்சிலிங் வரணும்’ என்று சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார் வைஷ்ணவி.. (பைத்தியத்திற்கு வைத்தியம் பார்க்கற வைத்தியருக்கே.. பைத்தியம் பிடிச்சா…..’மோமெண்ட்’ இது).

“நெறய பேர் இன்னமும் comfort zone-லதான் இருக்காங்க.. இன்னமும் வெளியே வரலை” என்ற பிரச்னையை ரித்விகா சொல்ல.. ‘I think’ என்று ஆரம்பித்து என்னமோ சொன்னார் வைஷ்ணவி. (இதை சாய்ஸ்ல விட்டுடலாம்.. அப்படி ஒண்ணும் முக்கியமானதில்லை).

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

“எல்லோரும் இங்க போலியா இருக்கறாங்க” என்றார் பாலாஜி. (இப்படியே ஒவ்வொருத்தரும் சொல்லிட்டிருங்க!) “உங்களுக்கு யார் கூட பிரச்னையோ.. அவங்க கிட்ட நேரா பேசிடுங்க’ என்பதுதான் வைஷ்ணவியின் பெரும்பாலான மருத்துவமாக இருந்தது. (அதுக்கு எதுக்கும்மா .. உங்க கிட்ட வந்தோம்’ என்பது பலரின் மைண்ட் வாய்ஸாக இருக்கலாம்.) 

மற்றவர்களுக்கு வைத்தியம் பார்த்தவருக்கும் ‘வைத்தியம்’ தேவைப்படும் அல்லவா?, எனவே வைஷ்ணவிக்கு ‘கவுன்சிலிங்’ தர பிக்பாஸ் முன் வந்தார். பொன்னம்பலம் சொன்னதைப் போலவே ‘சுருக்கமா சொல்லுங்க’ என்று பிக்பாஸூம் வைஷ்ணவியை வெறுப்பேற்ற முயன்றது அராஜகம். 

“முதல் சில நாட்கள்ல.. நான் இங்கும் அங்குமா பேசினது என்னமோ நெஜம்தான். சும்மா பேசணுமேன்னு அதைப் பேசினேன்.. ஆனால் என்னை ‘புறம் பேசுகிறவள்’-னு நிரந்தர முத்திரை குத்திட்டாங்க.. அது எனக்கு ஃபீல் ஆகுது.. ‘கலாய்க்கறேன்’ற பேர்ல டேனி என்னை டார்க்கெட் பண்ணி குத்திக் காண்பிச்சுக்கிட்டே இருக்காரு.. ஹர்ட் ஆகுது” ஆகிய இரு பிரச்னைகளைச் சொன்னார் வைஷ்ணவி. 

"ப்ளீஸ் ஷாரிக் புரிஞ்சுக்கோ..!" பெஸ்ட் ஃப்ரெண்டுக்காக கலங்கிய ஐஸ்வர்யா #BiggBossTamil2

‘புறம் பேசுதல்’ மனிதர்களின் நிரந்தர குணம். இதற்காக வைஷ்ணவியை மட்டும் சுட்டுவது நியாயமில்லைதான். 

நள்ளிரவு 01:30 – ஷாரிக்குடன் பேசிக் கொண்டிருந்தார் மும்தாஜ். “போன சீஸனை விட இந்த சீஸன்தான் டஃப்பா இருக்கும் னு பிக்பாஸ் முதல்லயே சொல்லிட்டாரு.. ஆனா சிநேகன் வந்தப்ப.. ‘நாங்கதான் இங்க ரொம்ப கஷ்டப்பட்டோம்’ன்ற மாதிரி சொன்னது சரியில்லை’ 

ஆக மொத்தத்தில் .. இன்றைய நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த நாம்தான் எங்காவது ‘கவுன்சிலிங்’ போக வேண்டும் போலிருக்கிறது. செல்வதற்கு முன் டாக்டரின் பெயர் ‘வைஷ்ணவி’ என்று இல்லைதானே என்பதை மட்டும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism