Published:Updated:

`ஃபேக் டேனியல்!' - பிக் பாஸ் மிட்நைட் மசாலா பரிதாபங்கள்

தார்மிக் லீ

பிக் பாஸ் மிட்நைட் மசாலா எபிசோட்

`ஃபேக் டேனியல்!' - பிக் பாஸ் மிட்நைட் மசாலா பரிதாபங்கள்
`ஃபேக் டேனியல்!' - பிக் பாஸ் மிட்நைட் மசாலா பரிதாபங்கள்

நேற்று ஹோமிலிருந்து வந்த சிறுவர்களால் வீடே கலகலவென இருந்தது. அதே சமயம் சில உணர்வுமிக்க சம்பவங்களும் நிகழ்ந்தன. அதன்பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பிய போட்டியாளர்கள், டேனியலைப் பற்றிய காஸிப்பைத் தொடர்ந்துகொண்டிருந்தார்கள். இதைத் தொடர்ந்து, பிக் பாஸ் மிட்நைட் மசாலாவில் என்ன நடந்தது? 

`ஃபேக் டேனியல்!' - பிக் பாஸ் மிட்நைட் மசாலா பரிதாபங்கள்

* தன் ஆர்ம்ஸ்களை முறுக்கிப் பார்த்து, வெறும் உடம்புடன் தன்னைத் தானே ரசித்துக்கொண்டிருந்தார், ஷாரிக். பின் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்த அவர், சந்திரமுகியாக மாறி டம்பில்ஸ்களைத் தூக்கிப் போட்டு வித்தியாசமான முறையில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தார். இந்தப் பக்கம் கிளீனிங் டீமைச் சேர்ந்த டேனியல் உட்கார்ந்தும், படுத்தும் புது யுக்திகளைக் கையாண்டு வீட்டைச் சுத்தம் செய்துகொண்டிருந்தார். `எல்லோரும் நம்மைப் பற்றி புறணி பேசுகிறார்கள்' என்பது இவருக்குக் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிய வருகிறது. சிலர் இவரிடமே நேராகவும், சிலர் மறைமுகமாகவும் பேசுகிறார்கள். முன்பு இவர் முகத்தில் இருந்த `கலகல' தற்போது லேசாகக் குறைந்துவிட்டது. 

* கார்டன் ஏரியாவில் யாஷிகா, `இப்போதான் கொஞ்சம் லேசா பைத்தியம் பிடிக்க ஆரம்பிக்குது, இன்னும் ரெண்டு மாசம் எப்படி ஓடப்போகுதுனு தெரியல' என்று மும்தாஜிடம் புலம்பிக்கொண்டிருந்தார். அதற்கு மும்தாஜ், பிக் பாஸ் வைக்கும் சில ஏலியன் லெவல் டாஸ்க்குகளை கிண்டலடித்துக்கொண்டிருந்தார். `டாஸ்க்னா எல்லோரையும் கொஞ்சம் ஆக்டிவா வெச்சுக்கணும், டான்ஸ் ஆடுறது பாட்டுப் பாடுறது இப்படி இருந்தாதானே ஜாலியா இருக்கும்' என்று அவர் தரப்பு கோரிக்கைகளைச் சொல்லிக்கொண்டிருந்தார். இதையெல்லாம் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த பிக் பாஸ், `அவ்வளவுதானே இதோ வெச்சிடுவோம்' என்பதுபோல் கேமராவை வைத்துத் தலையாட்டியது. 

`ஃபேக் டேனியல்!' - பிக் பாஸ் மிட்நைட் மசாலா பரிதாபங்கள்

* பாலாஜி தன் நாஸ்டாலஜி நினைவுகளைப் பற்றி சென்றாயனிடம் நெகிழ்ந்துகொண்டிருந்தார். `நான் ஒரு காலத்துல...' என ஆரம்பித்தவர், அமெரிக்கா, ஜப்பான், சீனா வழியாகச் சென்று ஒரு வழியாக இந்தியா வந்து சேர்ந்தார். அதற்கு சென்றாயன், `ஏன் மாமா நீ வெளியில போயிட்டு பெரிய நடிகனாகிட்டேன்னா என்னையைக் கூப்பிட்டு, நீதானே என்னை வாயா போயானு கூப்பிட்டனு மிரட்டுவீல்ல'  என்று பாலாஜிக்கு முட்டுக் கொடுத்துக்கொண்டிருந்தார். `நான் பண்ணாலும், என் பொண்டாட்டி நித்யா உன்னை, `செண்டு அண்ணா'னு கூப்பிட்டு வந்துடுவா நீ கவலைப்படாதே' என சென்றாயனுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார். இதுவும் காமெடிதானே பாலாஜி? 

* பாலாஜிக்கு இன்னும் `நினைவெல்லாம் நித்யா' விடவில்லை. நித்யா எலிமினேட் ஆகும்போது எடுத்த செல்ஃபியை நீண்ட நேரமாகப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார். `எனக்கு நித்யா அது வாங்கிக்கொடுத்திருக்கா, இது வாங்கிக்கொடுத்திருக்கா' என மீண்டும் நித்யா புராணத்தைப் பாடிக்கொண்டிருந்தார், பாலாஜி. சென்றாயனும் சளைக்காமல் முதல் முறையாகக் கேட்கும் கதை போலவே, `அப்படியா மாமா' என்று சுவாரஸ்யத்தோடு கேட்டுக்கொண்டிருந்தார். `உள்ளே இருக்கிறவங்கெல்லாம் ஃபேக்கா இருக்காங்கனு மக்கள் சொல்றாங்க' என்று கமல் சொன்னாலும் சொன்னார், எல்லோரும் தொடர்ந்து அது சம்பந்தமாகவே பேசிக்கொண்டிருக்கிறார்கள். உச்சகட்டமாக சென்றாயனின் நடையைப் பார்த்து, `உங்க நடையே ஃபேக்கா இருக்கு, ஏன் இப்படி நடந்து நடிக்கிறீங்க' என்று யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் அவரை கார்னர் செய்துகொண்டிருந்தனர். அடங்கப்பா உசிதமணி..!

`ஃபேக் டேனியல்!' - பிக் பாஸ் மிட்நைட் மசாலா பரிதாபங்கள்

* ஷாரிக், டேனியலிடம் ஜமைக்கன் ஜும்பாவைப் பற்றிச் சொல்லி, அவர்கள் செய்வதை டெமோ செய்து காட்டிக்கொண்டிருந்தார். ஆனால், டேனியல் எதையும் கண்டுகொள்ளாமல் தான் உண்டு தான் வேலை உண்டு என்று அமைதியாக உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருந்தார். அவரைத் தொடர்ந்து வந்த ஜனனி, மறைமுகமாக டேனியல் மீது குறைகளாகச் சொல்லிக்கொண்டிருந்தார். `ஃப்ரெண்ட்ஸை மட்டம் தட்டக் கூடாது, யாரையும் கஷ்டப்படுத்துற மாதிரி கலாய்க்கக் கூடாது' என டேனியலுக்கு அறிவுரை கூறிக்கொண்டிருந்தார். அதையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார், டேனியல். 

மற்ற போட்டியாளர்களும் டேனியலுக்கு `ஃபேக்' என்ற முத்திரியைக் குத்திவிட்டனர். இவருக்கு நெருக்கமான சிலரே அவரைக் குறை சொல்வதை டேனியலால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது அவர் தனியாக இருப்பதிலிருந்தே தெரிகிறது. மேலும், இன்றிரவு இந்தப் பிரச்னை வெடித்து வாதங்கள் வளரும் என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது. தொடர்ந்து பார்ப்போம்!.

தார்மிக் லீ