Published:Updated:

``பொன்னம்பலத்துக்கு ஒரு பாயாசம் பார்சல்!" - பிக் பாஸ் மிட்நைட் மசாலா #MidnightMasala

தார்மிக் லீ
``பொன்னம்பலத்துக்கு ஒரு பாயாசம் பார்சல்!" - பிக் பாஸ் மிட்நைட் மசாலா #MidnightMasala
``பொன்னம்பலத்துக்கு ஒரு பாயாசம் பார்சல்!" - பிக் பாஸ் மிட்நைட் மசாலா #MidnightMasala

நேற்று பிக் பாஸ் விட்டில் சென்றாயனுடைய செயல்பாடுகள் பார்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும், அவர் அனுபவித்த வலி வார்த்தைகளற்றது. இதைத் தொடர்ந்து பிக் பாஸ் மிட்நைட் மசாலாவில் என்ன நடந்தது? 

* `ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே...' என கிச்சன் ஏரியாவில் பாடிக்கொண்டிருந்தார், டேனியல். அவரைச் சுற்றியிருந்தவர்களாலே இதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் டேனியலை கேவலமாக ஒரு `லுக்' விட்டனர். அடுத்த வரியை, `ஆனந்த குயிலின் பாட்டு எங்க வைஷ்ணவி வாயினிலே' என்று சைலன்டாக முணுமுணுத்துப் பாடினார். அதைக் கேட்ட ஷாரிக்கும் அமைதியாக குபீர் குபீர்னு என்று சொல்லி சைலன்ட்டாக நகர்ந்துவிட்டார். அவரவர், அவர்களது வேலைகளைப் பார்த்துக்கொண்டிருக்க, சென்றாயன், தேசிங்கு ராஜாவைப் போல் வீட்டுக்குள்ளே வாக்கிங் போய்க்கொண்டிருந்தார். டாஸ்க்கின் காரணத்தால் கார்டன் ஏரியாவும் மூடப்பட்டிருந்தது. 

* பொன்னம்பலம், ஜனனி, ரித்விகா ஆகியோர்கள் சின்னக் குயில் சித்ரா, எஸ்.பி.பியாக மாறி பழைய பாடல்களைப் பாடி தாழித்துக்கொண்டிருந்தார்கள். ஜனனியும் ரித்விகாவும் ஏதோ சரியான வார்த்தைகளைப் போட்டு பாடல்களைச் சரியாகப் பாடிக்கொண்டிருந்தார்கள். ஆனால், பொன்னம்பலம் தனது வாயில் நுழையில் வரிகளை எல்லாம் அடுக்கி, தனது சொந்த வரிகளில் பாடல்களை இயற்றிக்கொண்டிருந்தார். `இதுங்க லூசா இல்ல லூசு மாதிரி நடிக்கிதுங்களா என்பது போல் பாலாஜி இவர்களைக் கேளிக்கையாகப் பார்த்துக்கொண்டிருந்தார். இதற்கு நடுவில் அனைவருக்கும் டாஸ்க் வந்திருக்கும் போல! `வைஷ்... நீ ஃபுல்லா ட்ரெஸ் போட்டது பிக் பாஸுக்கே பிடிக்கலை போல' எனச் சொல்லி கிண்டலடித்துக்கொண்டிருந்தார், ஜனனி.  

* நாளுக்கு நாள் மும்தாஜின் முகம் கோரமாக மாறிக்கொண்டே இருக்கிறது. எப்போதுமே `இவனுக்கு ஒரு பாயசத்தைப் போட்டுற வேண்டியதுதான்' மோடிலே இருக்கிறார். இன்னொரு பக்கம், `போன வாரம் நான் ஒண்டியாளா கமல் சார்கிட்ட போராடிகிட்டு இருந்தேன்' எனத் தனது தரப்பு புலம்பல்களைக் கொட்டிக்கொண்டிருந்தார், டேனியல். `நான்தான் இருக்கேன்ல' என்பது போல் `நான் உனக்கு சப்போர்ட்தானே பண்ணேன் டேனி' என டேனியலுக்கு சப்போர்ட் செய்துகொண்டிருந்தார். மல்யுத்த வீரர்கள் ஜெயித்து பெல்ட் வாங்குவதைப் போல், வைஷ்ணவி அவருக்குக் கொடுக்கப்பட்ட டாஸ்கிற்காக பெல்ட்டெல்லாம் போட்டுக்கொண்டு ஃபோர்ஸாக தயாரிக்கொண்டிருந்தார். மறுபக்கம் பாடலாசிரியர்களும், பாடகர் பாடகிகளும் பாட்டுப் பாடுவதை நிறுத்துவதாய் இல்லை. தங்களது வாயில் நுழையும் பாடல்களை எல்லாம் பாடாய்ப் படுத்திக்கொண்டிருந்தனர். அனந்த் கற்றுக்கொடுத்த மொத்த வித்தையையும் இறக்கிக்கொண்டிருந்தார், பொன்னம்பலம். 

* `எங்க ஏரியா உள்ள வராதே' டாஸ்க் இரண்டு நாள்களுக்கு முன் முடிந்தும், மெயின் எபிசோடில் அதையே போட்டு இழுத்தடிக்கிறது, பிக் பாஸ். இதைத் தொடர்ந்து ஷூவுக்கு பாலிஷ் போடும் டாஸ்க் முடிந்து, அடுத்த டாஸ்க் ஆரம்பித்துவிட்டது போல! அனைவரும் கார்டன் ஏரியாவில் அமர்ந்து டாஸ்க் சம்பந்தமாக டிஸ்கஸ் செய்துகொண்டிருந்தனர். பொன்னம்பலம் வழக்கம் போல் `நான் தண்ணில தலைகீழா நிப்பேன்', `வின்டர்ல சம்மர்சால்ட் போடுவேன்', என தனது புராணத்தை மும்தாஜிடம் மூச்சு விடாமல் தற்பெருமை கூறிக்கொண்டிருந்தார். வேறு வழியில்லாமல் மும்தாஜும் சொல்வதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தார். இதுதான் சாக்கு என தியான நிலையில் ஆரம்பித்த பொன்னம்பலம், பரவச நிலையில் பயணித்துக்கொண்டிருந்தார். `பொன்னம்பலத்துக்கு ஒரு பாயாசம் பார்சல்..!'

* `என்னை அறிந்தால்' படத்தில் அஜித் அண்டர்கவர் ஆபரேஷனுக்குக் கிளம்புவது போல், மஹத் தனது ஸ்னீக்கர்ஸைப் போட்டுக்கொண்டு `பயங்கரமாக' கிளம்பிக்கொண்டிருந்தார். பாத்ரூமுக்கு எதிரே இருக்கும் இடத்தில் ஏதோ சின்ன அறை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதுதான் டாஸ்க் ஏரியாவாக இருக்க வேண்டும். போட்டியாளர்கள் அனைவரும் உள்ளே வந்த சில நாள்களில் விக்ரமன் படத்தில் வருவதைப் போல் குடும்பமாய் இருந்தார்கள். நாள்கள் செல்லச் செல்ல ஒவ்வொருவம் உக்கிரமாகிக்கொண்டிருப்பது அவர்களது சில முகபாவனைகளிலேயே தெரிகிறது. இதனால் வாக்குவாதங்களும், சண்டைகளும் அதிகமாகக் காணப்படுகிறது. மும்தாஜின் நடவடிக்கைகளிலும் நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. ஒருவேளை வெளியே போக வேண்டும் என்பதற்காக இப்படிச் செய்கிறாரா... இல்லை இவரது குணாதிசியமே இதுதானா என்பதை யூகிக்க முடியவில்லை. 

ஆகமொத்தம் இந்த வாரம் கமல் பேசுவதற்கான கன்டெட் ஏகபோகமாக இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்!

தார்மிக் லீ