Published:Updated:

"ஏன் ஏனோ தானோனு ஆடுறானு தெரியலையே!" - ஜனனியின் தங்கை கிருத்திகா

வே.கிருஷ்ணவேணி

``என் அக்காவும் இப்போதுதான் உண்மையான முகத்தைக் காட்ட ஆரம்பித்திருக்கிறார்!" என்கிறார், நடிகை ஜனனியின் தங்கை கிருத்திகா.

"ஏன் ஏனோ தானோனு ஆடுறானு தெரியலையே!" - ஜனனியின் தங்கை கிருத்திகா
"ஏன் ஏனோ தானோனு ஆடுறானு தெரியலையே!" - ஜனனியின் தங்கை கிருத்திகா

வ்வொரு நாளும் `பிக் பாஸ்' சீசன் 2 நிகழ்ச்சியின் முகம் மாறிக்கொண்டே இருக்கிறது. நிகழ்ச்சியில் இருக்கும் ஒவ்வொருவரும் தங்களுடைய நிஜத்தை மறைத்துப் போலியாக நடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது பொதுமக்களின் கருத்து. `அதுவும் உண்மைதான். என் அக்காவும் இப்போதுதான் உண்மையான முகத்தைக் காட்ட ஆரம்பித்திருக்கிறார்' என்கிறார், ஜனனியின் தங்கை கிருத்திகா. அவரே தொடர்கிறார்...

``அக்காவை நாங்க ரொம்பவே மிஸ் பண்றோம். எங்க அப்பாவுக்கு, ஜனனி அக்கா செம பெட். எல்லாத்தையும் அப்பாகிட்ட பகிர்ந்துப்பாங்க. `பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குப் போனதுக்குப் பிறகு அவங்களுக்குள்ள இருக்கிற விஷயத்தைப் பகிர்ந்துக்க நாங்க பக்கத்துல இல்லையேங்கிற கவலை நிறைய இருக்கு. மத்தபடி, அவங்களுக்குப் பிடிச்சுதான் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டாங்க. ஆரம்பத்தில் கொஞ்சம் ஒதுங்கியிருந்த மாதிரி இருந்தாங்க. நேற்றுதான் தன்னுடைய உண்மையான முகத்தைக் காட்ட ஆரம்பிச்சிருக்காங்க. ஆமாம்.... எங்க வீட்ல யாராவது எதையாச்சும் பேசினா, `என் இஷ்டம்', `எனக்கு இது பிடிக்கல' எனப் பளிச்னு சொல்லிட்டுக் காதைப் பொத்திக்கிட்டு அந்த இடத்தைவிட்டு கிளம்பிடுவாங்க. இவ்வளவு நாள் கழித்து இப்போதான் ஜனனிகிட்ட அந்த `அச்சு'வைப் பார்க்கிறோம்." 

"அச்சுவா..?" என்று கேட்டால்...

``ஆமாம். அக்காவுக்கு வீட்ல அஷ்வினினு பேரு. அதனால அக்காவை அச்சுனுதான் நான் செல்லமா கூப்பிடுவேன். அவங்க என்னை `கீத்து'னு கூப்பிடுவாங்க. நிறைய போட்டியாளர்களின் பேட்டிகளைப் படிக்கும்போது, `சீக்கிரம் வெளிய வந்தா பரவாயில்ல'னு ஃபீல் பண்றதைப் பார்க்க முடியுது. ஆனால், என்னைப் பொறுத்தவரை அக்கா கடைசி வரைக்கும் இருந்துட்டு வரணும்னு தோணுது. அக்கா எதுவாக இருந்தாலும் சரி, அதை சக்சஸ் பண்றதுல முனைப்போட இருப்பாங்க. அப்படித்தான் இதுலேயும் அவங்க ஜெயிக்கணும்னு என்பது என் ஆசை. `பிக் பாஸ்' போகும்போதே ஒரு விஷயத்தைச் சொல்லிட்டுத்தான் போனாங்க. அதுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்!' என்றவரிடம், அந்த சஸ்பென்ஸை உடைக்கச் சொன்னோம்..

``எங்களைப் பொறுத்தவரை ஏதாவது போரடிச்சா உடனே இரண்டு பேரும் சேர்ந்து லாங் டிரைவ் போவோம். அம்மாகிட்ட முன்கூட்டியே, `லேட்டாதான் வருவோம்'னு சொல்லிட்டுப் போவோம். அதேமாதிரி ஷோ முடிந்து வந்தபிறகு டிரிப்புக்காக வெளிநாடு போகலாம்னு சொல்லிட்டுப் போயிருக்காங்க. அதுக்காக நான் என்னைத் தயார் பண்ணிக்கிட்டு இருக்கேன். அக்கா என்னையும், காபி, நெய்யையும் கண்டிப்பா மிஸ் பண்ணுவாங்க. நெய் இல்லாம இதுவரைக்கும் அவங்க சாப்பிட்டதே இல்ல. இப்போ அங்கே டாஸ்க் எல்லாம் பண்ணித்தான் எப்பவாவது நெய் கிடைக்குது. அம்மா போடுற காபி இல்லாம ஒரு நாள்கூட அவங்க பொழுது விடிஞ்சது இல்ல. இப்போ எப்படித்தான் அவங்களுக்குப் பொழுது விடியுதோ தெரியல. எப்பவும் துறுதுறுனு இருக்கிற அச்சு எனக்குத் தெரிந்து கொஞ்சம் வெயிட் போட்ட மாதிரி இருக்கு' என்றவர், அந்தச் சோகமான தகவலையும் சொன்னார்,

``அக்காவை எப்போ நேர்ல பார்ப்போம்னு ஆசையா இருக்கு. ஆனா, எனக்கு ஒரு விஷயம் இன்னும் சரியா  புரியல. அக்கா நல்ல டான்ஸர். முறையாக டான்ஸ் கத்துக்கிட்டவங்க. நல்லா ஆடுவாங்க. வீட்ல எங்களுக்குப் பிடிச்ச பாட்டு இருந்தா, அதை பிளே பண்ணி இரண்டு பேரும் டான்ஸ் பண்ணுவோம். ஆனால், ஷோவுல ஏனோ தானோனு டான்ஸ் பண்றாங்க. ஒருவேளை தூங்கி எழும்போது இருக்கிற டயர்டானு தெரியல. அந்த டான்ஸர் அச்சுவைப் பார்க்க வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கோம்.' என்பவர்,

``யாஷிகா ரொம்ப நல்லா பிளே பண்றாங்க. அவங்களை எனக்குப் பிடிச்சிருக்கு. அவங்க ஜெயிச்சாலும் ரொம்ப சந்தோஷப்படுவேன். பலபேர் கிளாமருக்காக டிரெஸ் போடுறதா வெளியில சொல்லிக்கிறாங்க. கூடவே, ஜனனி மட்டும் ஹோம்லியா இருக்கிறதா சொல்றாங்களேனு கேட்கிறாங்க. அது உண்மைதான். படத்தில் கமிட் ஆகும்போது, `கிளாமராகக் காட்டுவதாக இருந்தால் வேண்டாம்'னு சொல்லிடுவாங்க. கொஞ்சம் டீசன்டா டிரெஸ் பண்ண நினைப்பாங்க, ஜனனி. பிக் பாஸ் ஷோவுக்குப் போறதுக்கு முன்னாடி அவங்களுக்குத் தேவையான நைட் டிரெஸ் எல்லாம் நானும், அக்காவும்தான் பர்சேஸ் பண்ணோம். அவங்களுக்கு சல்வர், குர்த்தி மாதிரியான டிரெஸ் ரொம்பப் பிடிக்கும். எனக்குத் தெரிந்து அந்த ஷோவிலும் அவங்களுக்குப் பிடிச்ச மாதிரியான டிரெஸ்ஸைப் போடுறாங்க. நிகழ்ச்சி முடிந்து அக்கா வெளியில வந்தபிறகு அக்காவுக்குப் பிடிச்ச இளையராஜா பாட்டைக் கேட்டுக்கிட்டே, நானும், அவங்களும் நீண்ட தூரம் போயிட்டு வரணும். அச்சு... ஐ லவ் யூ அண்டு மிஸ் யூ!" என நெகிழ்கிறார், கிருத்திகா.