Published:Updated:

பிக்பாஸ் வீட்டில் கடுமையான... ஜெயிக்கக்கூடாத... டம்மி போட்டியாளர்கள்... யார்? #BiggBossTamil2

சுரேஷ் கண்ணன்
பிக்பாஸ் வீட்டில் கடுமையான... ஜெயிக்கக்கூடாத... டம்மி போட்டியாளர்கள்... யார்? #BiggBossTamil2
பிக்பாஸ் வீட்டில் கடுமையான... ஜெயிக்கக்கூடாத... டம்மி போட்டியாளர்கள்... யார்? #BiggBossTamil2

கமலின் பஞ்சாயத்து நாள் பரபரப்பாக அமையும் என்று ஆவலாக எதிர்பார்த்திருந்தோம். ஆனால் சூடு கம்மிதான். வேகமாக வரும் கடல் அலை அதே வேகத்தில் அப்படியே திரும்பி விடுவதைப் போல சர்ச்சையின் மையத்தை நோக்கி வந்த உரையாடல் பல சமயங்களில் திசை திரும்பிப் போயிற்று. கமலும் தீவிரமாக பஞ்சாயத்து செய்யும் மனநிலையில் இல்லை போலிருக்கிறது. 

கடந்த சீஸனில் ஓவியாவை தூங்க விடாமல் காயத்ரி, நமீதா, ஜூலி செய்த அழிச்சாட்டியங்களைப் பற்றி நிகழ்ந்த பஞ்சாயத்து நினைவுக்கு வந்தது. காயத்ரி அவ்வப்போது உச்சரித்த சர்ச்சையான ஒரு வசை சொல்லை, தலையில் தொட்டு கமல் சுட்டிக் காட்டிய சூடான அந்தப் பஞ்சாயத்து நாளும் நினைவுக்கு வந்து போனது... ம்… அதெல்லாம் ஒரு காலம்!.

பிக்பாஸ் வீட்டில் கடுமையான... ஜெயிக்கக்கூடாத... டம்மி போட்டியாளர்கள்... யார்? #BiggBossTamil2

லிவ்விங் ஏரியாவில் இருந்த ரகசிய கோணத்தின் வழியாக பிக்பாஸ் வீட்டு மக்களை கமல் பார்த்துக் கொண்டிருந்தார். ‘இப்படி இதுவரைக்கும் நானே பார்த்ததில்ல’. ‘அவங்க கனவை கலைக்க வேண்டாம்’ என்று கமல் சொன்னது நன்றாக இருந்தது. Recap முடிந்ததும் ‘நிகழ்ச்சி கொஞ்சம் சூடு பிடிச்சிருக்கில்லையா?” சரி மக்கள் கிட்ட கேட்போம்’ என்று பார்வையாளர்களின் கேள்வி நேரத்தை துவக்கினார். நடிகை அனுராதா, அவரின் மகள் அபிநயஸ்ரீ, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும் நடிகையுமான பிரியதர்ஷிணி போன்றவர்கள் பார்வையாளர்களின் இடையில் அமர்ந்திருந்தார்கள். 

“இந்தியன் 2 –க்கு அப்புறம் நடிக்க மாட்டீங்க –ன்னு சொல்றாங்க?” என்ற கேள்வியை பிரியதர்ஷணி கேட்டார். “அப்படின்னு அவங்கதான் சொல்லிக்கிட்டிருக்காங்க.. என்ற கமல் ‘காலம்தான் அதை முடிவு செய்யும்” என்றார். (இது.. அவரு பேசற டயலாக் இல்ல!) “அப்ப முழு நேர அரசியல்வாதியாக ஆக மாட்டீங்களா –ன்னு கேட்கறாங்க.. இங்கு முழு நேர அரசியல்வாதி யார்?, ஒருத்தர சொல்லுங்க பார்க்கலாம். நான் முதலில் மனிதன் பிறகு கலைஞன். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை வேண்டும். வெள்ளைக்காரன் காலத்துல தியாகம் செஞ்சு அரசியல் செஞ்சது வேற. இப்போது அப்படி நடிக்க அவசியமில்லை. இது துறவு அல்ல.. எனக்கும் கொஞ்சம் மிஞ்சணும்” என்று கமல் நீட்டி முழக்கியதின் பொருள் ‘அவர் சினிமாவில் நடிப்பதை தொடர்வார்’

பிக்பாஸ் வீட்டில் கடுமையான... ஜெயிக்கக்கூடாத... டம்மி போட்டியாளர்கள்... யார்? #BiggBossTamil2

‘பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் சமூகத்துக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?” என்றொரு கேள்வி வந்தது. “நம் பழைய சடங்குகளின் ஒவ்வொன்றிற்குப்  பின்னாலும் நிறைய காரணங்களும் நோக்கங்களும் இருந்தன. ஒவ்வொரு சடங்கிலும் ஒரு செய்தி இருக்கிறது. நேரடியாக சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று மதம் வழியா சொல்லியிருக்காங்க..  ‘மன்னர் சொல் கேளா மக்களை வழிதிருப்ப மதம் வழி சொல்லி வைத்த மார்க்கம்தானே’-ன்னு நானே சின்ன வயசுல எழுதியிருக்கேன். (கமல் எல்லாத்தையும் சின்ன வயசுலயே எழுதிட்டாரு போல!) எனவே நிச்சயம் சம்பந்தம் இருக்கு. அதனால்தான் நீங்கள் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்று பிக்பாஸிற்கு வக்காலத்து வாங்கி பேசினார் கமல். (அப்ப.. பிக்பாஸ் ஒரு ஆன்மீக நிகழ்ச்சி-ன்னு சொல்லுங்க!).

“பிடிச்ச போட்டியாளர் யார்?” என்ற கேள்விக்கு ‘உங்களுக்கு பிடிச்சவங்க ஒவ்வொரு வாரமும் மாறிட்டே இருக்காங்க இல்லையா? எப்படி சொல்ல முடியும்? இரண்டு வருடங்களாக தாங்கிக் கொண்டிருக்கும் மக்கள் தான் எனக்குப் பிடிச்சவங்க” என்று எம்.ஜி.ஆர் பாணியில் மக்கள் தலையில் ஐஸ் வைத்தார் கமல். 

‘சரி.. இந்த வாரம் வீட்டினுள் சில நிகழ்வுகள் நடந்தன. அதற்கு நான் காரணமாக இருந்தேன். விஸ்வரூபம் -2 டீம் உள்ளே போயிருந்தாங்க. ஒரு பாடலை அறிமுகப்படுத்தினாங்க” என்று கமல் சொல்லியதும், “ஏ.. ஆத்தா.. ஆத்தோரமா வாரியா”,  என்கிற ரீமிக்ஸ் பாடலுடன் 41-ம் நாள் துவங்கியது. உற்சாகப் பறவை போல் ஐஸ்வர்யா ஆடியது கண்கொள்ளா காட்சி.

வைஷ்ணவி பிரெட் பாக்கெட்டை திறந்து விட்டதை மும்தாஜிடம் போட்டுக் கொடுத்தார் பாலாஜி. விஸ்வரூபம் -2 பாடலின் இசை கேட்க வீட்டின் உறுப்பினர்கள் திகைத்துப் பார்த்தனர். இசையமைப்பாளர் ஜிப்ரான், நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா, நடிகை பூஜா குமார், பாடகர் சத்ய பிரகாஷ் ஆகியோர் உள்ளே நுழைந்தார்கள். பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. வரவேற்புக் குழுவின் முன்னணியில் நின்று சென்றாயன் மிகையாக செயல்பட்டார். பாலாஜி ஒதுங்கியிருந்து கவனித்தார்.

பிக்பாஸ் வீட்டில் கடுமையான... ஜெயிக்கக்கூடாத... டம்மி போட்டியாளர்கள்... யார்? #BiggBossTamil2

பிக்பாஸூம் கமலும் ஒருவரையொருவர் பரஸ்பரம் உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. “ஆகஸ்ட் 10 முதல் உலகமெங்கும்” என்கிற வாசகம் பொறிக்கப்பட்ட ராணுவ சீருடை அனைவருக்கும் வந்தது. விஸ்வரூபம் 2 –ன் மூன்றாவது பாடல் அரங்கேறியது. 

‘இது prequel sequel-ம் கலந்த திரைக்கதை’ என்று சரியாகச் சொன்னார் ஜிப்ரான். விஸ்வரூபம் -1ஐ பார்த்தி்ருந்தவர்களுக்கு தெரியும். சமகாலமும் கடந்த காலமும் சரிவிகிதமாக அமைக்கப்பட்ட அந்த திரைக்கதையில் பல திட்டமிட்ட இடைவெளிகள் இருந்தன. அவற்றிற்கான விடையை இரண்டாம் பாகத்தில்தான் காண முடியும். கமல் ஓர் அபாரமான திரைக்கதையாசிரியர் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். 

ஆண்ட்ரியாவும் சத்யபிரகாஷூம் பாடத்  துவங்கினார்கள். ‘சாதிமதமெனும் வியாதியைப் போக்கிட சூத்திரம் சொல்லிடும் சாரமிது’ என்கிற பாடலின் வரிகளை கேட்டதுமே தெரிந்து போயிற்று, இதை எழுதியவர் கமல் என்று. பிறகு ஜிப்ரானும் இதை உறுதிப்படுத்தினார்.

பிக்பாஸ் வீட்டில் கடுமையான... ஜெயிக்கக்கூடாத... டம்மி போட்டியாளர்கள்... யார்? #BiggBossTamil2

ராணுவப் பயிற்சியின் போது கமலுக்கும் ஆண்ட்ரியாவிற்கும் இடையில் நிகழும் காதலின் பின்னணியில் ஒலிக்கும் பாடல் போலிருக்கிறது. சத்யபிரகாஷ் அருமையாகப் பாடினார். பிறகு இத்திரைப்படத்தின் இரண்டாவது டிரைய்லரும் ஒளிபரப்பானது. படம் பார்க்கும் ஆவலைத் தூண்டிய டிரைய்லர். பாடலை பிக்பாஸ் வீட்டு மக்கள் பாராட்டினார்கள். ‘ஒன்ஸ் மோர்’ கேட்டு இம்சைப்படுத்தினார்கள். ‘ஜனனி ஒரு நல்ல சிங்கர்’ என்று சொன்னார் ஜிப்ரான். விஸ்வரூபம் முதல் பாகத்தின் போது கமல் எதிர்கொண்ட சிரமங்களை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார் பொன்னம்பலம். 

பிறகு நேரத்தை இழுப்பதற்காக ‘அந்தாக்ஷரி’ ஆரம்பித்தது. ‘தில்லுபரு ஜானே’ என்று ஜனனி பாடத் துவங்கியதை ‘இந்திப்பாட்டு கூடாது’ என்று இடைமறித்தார் ஆண்ட்ரியா. ‘இது கமல் சார் படம். அப்புறம் தமிழ்ல வரிகள் வரும்’ என்றவுடன் தலையில் அடித்துக் கொண்டு அழகாக வெட்கப்பட்டார். இப்படியே சற்று நேரம் ஓடியதும், திரைப்படத்துக்கான வாழ்த்துகளைச் சொல்லி அவர்களை வெளியே தள்ளி கதவை அடைத்தார் பிக்பாஸ். 

போட்டியாளர்கள் மறுபடியும் புறம் பேசும் காட்சிகள் ஆரம்பித்தன. பாலாஜி பேசிக் கொண்டிருந்தார். ஒருவிதமான இழுவையுடன் தாழ்ந்த குரலில் பாலாஜி பேசுவதைப் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கிறது. பெரும்பான்மையும் சப்டைட்டில் போட அவசியம் இருக்கிறது. “மும்தாஜ் மாதிரி ஒரு ஆள்.. இருக்கறதாலதான் இங்க கன்ட்ரோல் இருக்குது. ஆனா அவங்களே.. பூஜாகுமாரை ‘ஆ’-ன்னு வாயைப் பிளந்து பார்த்துட்டு இருந்தாங்க.. ஒரு காலத்துல பெரிய ஸ்டாரா இருந்துட்டு.. இப்படி பத்தோடு பதினொன்னா உட்கார வேண்டியிருக்கேன்னு நெனச்சிருப்பாங்க.. ‘தொட்றா.. பார்க்கலாம்’ ன்னு சின்னப்பசங்க கூடலாம் மல்லுக் கட்ட வேண்டியிருக்கு” என்று சில மலினமான வார்த்தைகளுடன் சொன்னார் பாலாஜி.

பிக்பாஸ் வீட்டில் கடுமையான... ஜெயிக்கக்கூடாத... டம்மி போட்டியாளர்கள்... யார்? #BiggBossTamil2

**

அகம் டிவி வழியே உள்ளே வந்தார் கமல். ‘எப்படியிருந்தது எங்க டீமோட சந்திப்பு?” என்று விசாரிக்க.. ‘சூப்பர்.. சார்.. மார்வலஸ் சார்.. வாழ்த்துகள்’ என்று மிகையாக மக்கள் பாராட்டினார்கள். கார்கில் டாஸ்க் பற்றிய தலைப்பை இழுத்த கமல், கார்கில் போரில் மைனஸ் 32 டிகிரி போன்ற கடுமையான சூழல்களுக்கிடையே 600 நபர்களைக் கொண்ட இந்திய ராணுவம், பலமுள்ள உயரமான ஆப்கானிய வீரர்களுடன் போரிட்டு வென்ற தீரத்தை வியந்தார். உயிருடன் திரும்பி வந்தவர்கள் ஆறு பேர்தான். மயிரிழையில் உயிர் தப்பிய கர்னல் லலித் ராய் என்பவரின் சாகசத்தை விவரித்தார். கமல் விவரிக்க கண் முன்னே காட்சிகள் விரிந்தன. லலித் ராயின் புகைப்படமும் காண்பிக்கப்பட்டது. “முகத்தைப் பார்த்தீங்களா.. தெக்கத்தி முகம் இல்ல. நமக்காகவும் போராடிய முகம்” என்று கமல் சொன்னதில் அதிக அர்த்தமுள்ளது. 

இதைப் போலவே, இந்தியா –பாகிஸ்தான் பிரிவினையின் போது ரெட் போர்ட்டில் ஆப்கன் அகதிகள் ஆயுதங்களுடன் தஞ்சம் புகுந்த போது பெருங்கோபத்துடன் இருந்த அவர்களை அஹிம்சை என்கிற வீரத்துடன் காந்தி என்கிற கிழவனார் எதிர்கொண்ட துணிச்சலையும் கமல் நினைவுகூர்ந்தார். வீரத்தின் இரு முனைகளை கமல் அருமையாக நினைவுப்படுத்தியது நெகிழ்வூட்டுவதாகவும் புல்லரிக்க வைப்பதாகவும் இருந்தது. ‘இந்த வரலாறுகள் எல்லாம் தெரிந்ததால்தான் உங்களிடம் இப்படி பேசிக் கொண்டிருக்கிறேன்.. இல்லையென்றால்” என்று சொல்லி விட்டு இந்திய அரசியல்வாதிகளின் உடல்மொழியை நகலெடுத்த கமலின் தோரணை அட்டகாசம். 

கமல் மீண்டும் திரும்பி வந்த போது பிக்பாஸ் போட்டியாளர்கள் ராணுவ உடையில் இருந்தார்கள். கேட்ட கதைகளின் தாக்கம் அப்படி போல. கமல் வியந்து போனார். (பாலாஜி மட்டும் சீருடையை அணியவில்லை. ஆன்டி இண்டியன்’).

பிக்பாஸ் வீட்டில் கடுமையான... ஜெயிக்கக்கூடாத... டம்மி போட்டியாளர்கள்... யார்? #BiggBossTamil2

பொன்னம்பலத்துக்கு ஓர் இன்ப அதிர்ச்சியை தந்தார் கமல். முன்பு தான் படித்த பள்ளியையும் ஆசிரியரையும் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்திருந்தார் பொன்னம்பலம். இப்போது அந்த ஆசிரியரை சபைக்கு அழைத்து வந்திருந்தார்கள். அவரை வணங்கி ஆசி பெற்றார் பொன்னம்பலம். 

‘பல சமயங்கள்ல… ‘கமல் சார் கிட்ட பேசிக்கறேன்’ –ன்ற மாதிரி நீங்க எல்லாம் சொல்லிட்டே இருந்தீங்க.. கன்ஃபெஷன் ரூமுக்கு வாங்க பேசிடுவோம்’ என்று முதலில் பொன்னம்பலத்தை அழைத்தார் கமல். எல்லோரையும் ஆழம் பார்க்கும் விதமாக அமைந்திருந்தது கேள்விகள். 

பிக்பாஸ் வீட்டில் கடுமையான... ஜெயிக்கக்கூடாத... டம்மி போட்டியாளர்கள்... யார்? #BiggBossTamil2

‘எந்தவொரு விளையாட்டிலும் தன்னுடைய எதிரி யார் என்பதை தேர்வு செய்தாக வேண்டும். இன்னமும் கொஞ்ச நாள்ல நானும் அதை செய்தாக வேண்டும்’ என்று கமல் காமிராவைப் பார்க்க.. புரிந்து கொண்டு கைத்தட்டினார்கள் பார்வையாளர்கள்.

கேள்விகள் பெரும்பாலும் இவ்வாறாக அமைந்திருந்தன. 1)    ‘கடுமையான போட்டியாளர் என்று நீங்கள் கருதும் நபர் யார்? 2.) ‘ஒண்ணும் பிரச்னையில்ல.. இந்த ஆள் ஜீரோ.. நாம கவலைப்பட வேண்டாம்’ என்று கருதும் போட்டியாளர் யார்? 3).. ‘மவனே.. நான் தோத்தாலும் கூட பரவாயில்லை.. இந்த பய மட்டும் ஜெயிக்கவே கூடாது என்று கருதும் போட்டியாளர் யார்? 

‘கடுமையான போட்டியாளராக பாலாஜியைக் குறிப்பிட்டார் பொன்னம்பலம். ‘உங்களை யார் டார்கெட் பண்றாங்க.. நீங்க யாரை டார்கெட் பண்றீங்க?’ என்ற கேள்விக்கு ‘ஷாரிக்’ என்று மொக்கையாக பதிலளித்தார் சித்தப்ஸ். பலவீனமான போட்டியாளர் ஜனனியாம். (விஷபாட்டில் வீரியம் தெரியாம பேசறீங்க பொன்ஸ்!).

அடுத்து வந்து மாட்டியவர் சர்ச்சைகளின் நாயகி மும்தாஜ். ‘ஆபத்தான போட்டியாளர் என்று எவருமில்லை’ என்று தன்னம்பிக்கை நிறைந்த போலித்தனத்துடன் சொன்னார் மும்தாஜ். ‘இந்த ஆளு ஜெயிக்கக்கூடாது” என்கிற கேள்விக்கு “என் நினைப்பு சரியா இருந்தா பாலாஜி அண்ணா ஜெயிக்கக்கூடாது” என்றார் மும்தாஜ். (பாவம்.. பாலாஜி, மும்தாஜ் விசுவாசியா மாறிட்டு வர்ற இந்தச் சமயத்திலா இப்படி நடக்கணும்!). பலவீனமான போட்டியாளராக ‘ஐஸ்வர்யா’வைக் குறிப்பிட்டார் மோமோ. “குழந்தைத்தனமா இருக்கிறாராம்”. (அகில உலக ஐஸ்வர்ய ரசிக பேரவை இதை வன்மையாகக் கண்டிக்கிறது!).

பிக்பாஸ் வீட்டில் கடுமையான... ஜெயிக்கக்கூடாத... டம்மி போட்டியாளர்கள்... யார்? #BiggBossTamil2

அடுத்து வந்தவர் கபட நாடக வேஷதாரி டேனி. ‘கடுமையான போட்டியாளர்’ என்று யாஷிகாவைக் குறிப்பிட்டது ஓரளவுக்கு சரியானது. ‘விளையாட்டை விளையாட்டா பார்க்காத மும்தாஜ் ஜெயிக்கக்கூடாது’ என்று இவர் குறிப்பிட்டதும் சரியே. ‘பலவீனமான போட்டியாளர் என்று ஷாரிக்கை குறிப்பிட்டதும் சரிதான். (பொன்னம்பலம் சொன்னதற்கு நேர்மாறான உண்மை இது). ‘யோசிக்காம சொல்லிட்டீங்க.. அப்ப ரொம்ப நாள் யோசிச்சிருப்பீங்க போல’’ என்றார் கமல். (அது எப்படி பேசறது கூட கவிதையாவே வருது ஆண்டவரே?!).

அடுத்து வந்தவர் ‘ஆல் இண்டியா ரேடியோ’ வைஷ்ணவி. ‘பலவீனமான போட்டியாளர் என்று எவரும் இல்லையாம். எல்லோருமே சமமான தகுதி வாய்ந்தவர்களாம்.” (இதுதான் உங்க கிட்ட பிடிக்காத விஷயம்.. எதுக்காக இந்த போலித்தனம்? அதான் ஈஸியா கண்டுபிடிச்சிடறாங்கள்ல!). ‘ஒருத்தர பலவீனம் –னு நெனக்க ஆரம்பிச்சுட்டோம்னா.. அவங்க பலம் என்னன்னு தெரியாம போயிடும்’ என்று வைஷ்ணவி சொன்னது ஒருவகையில் சரியாகத்தான் இருந்தது. 

அடுத்து வந்தவர் ‘சமர்த்துப் பிள்ளை’ ரித்விகா. இவர் சொன்ன பதில்கள்தான் அதிக நேர்மையுடன் இருப்பதாக கமல் கருதினார். ‘கடுமையான போட்டியாளர்’ என்று யாஷிகாவை குறிப்பிட்டார் ரித்விகா. (சரிதான்.) “எவருடைய வெற்றி நியாயமாக இல்லை?” என்ற கேள்விக்கு டேனியை ரித்விகா குறிப்பிட்டது சரியில்லை. டேனியின் உழைப்பும் ஆர்வமும் அத்தகையது. ‘பலவீனமான போட்டியாளர் ஐஸ்வர்யா’ என்று மும்தாஜை வழிமொழிந்தார் ரித்விகா. “மத்தவங்கள்லாம் உத்தமசீலர்ன்ற மாதிரி பேசினாங்க. இவங்க பேசினதுதான் ஹானஸ்ட்டா தெரிஞ்சது” என்றார் கமல்.

அடுத்து வந்தவர் பணிவின் அடையாளம் ‘சென்றாயன்’. ‘ஆபத்தான போட்டியாளர் மற்றும் ‘இவர் ஜெயிக்க கூடாது’ என்ற இரண்டு கேள்விகளுக்குமே ‘மஹத்தை’ சுட்டிக் காட்டினார் சென்றாயன். அடுத்து வந்தவர் முன்னாள் ‘ஆங்க்ரி பேர்ட்’ பாலாஜி. ‘இடைஞ்சல் செய்யும் போட்டியாளராக’ டேனியை குறிப்பிட்டார். ‘வெற்றி கிடைக்கக்கூடாது என்று நினைப்பதும்’ டேனிதானாம். 

சுருக்கமாக சொல்லாமல் இழுத்துப் பேசிய யாஷிகா, ‘ஜெயிக்கக்கூடாது’ என்று கருதுவது சென்றாயனையாம். குறுக்கு வழியை நிறைய முயல்கிறாராம். ‘வணக்கம்ப்பா.. எப்படி இருக்கீங்க?’ என்று சென்டிமென்ட்டாக வணக்கம் வைத்தார் ஷாரிக். “யார் அநியாயமாக விளையாடுகிறார்கள்? இந்த விளையாட்டின் தன்மையை புரிந்து கொள்ளாமல் இதைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்? என்று கமல் தன் கேள்வியை முடிக்கும் முன்னரே.. ‘மும்தாஜ்’ என்று பதிலளித்தார் ஷாரிக். (அடப்பாவி.. பேட்டா!).

பிக்பாஸ் வீட்டில் கடுமையான... ஜெயிக்கக்கூடாத... டம்மி போட்டியாளர்கள்... யார்? #BiggBossTamil2

அடுத்து வந்தவர் ‘ப்ளே பாய்’ மஹத். ‘யாரு ஜெயிக்ககூடாதுன்னு நெனக்கறீங்க?” என்ற கேள்விக்கு ‘ஏன் சார் அப்படில்லாம் கேட்கறீங்க’ என்று மழுப்பி ‘படம் இன்டர்வெல்லதானே இருக்கு. கிளைமாக்ஸ் வரலையே” என்று கமல் முன்பே புத்திசாலித்தனமாக பேச முயல ‘யாரு.. என் கிட்டயே ஸ்கீரின்ப்ளே பத்தி சொல்றியா” என்று நினைத்துக் கொண்ட கமல் ‘இன்டர்வெல்லயே கிளைமாக்ஸூக்கான லீட் வந்துடும்’ என்று சாமர்த்தியமாக மடக்கியதும் மஹத் அசடு வழிந்தார். பிறகுதான் கேள்வியே மஹத்திற்கு புரிந்தது. ‘ஜெயிக்கக்கூடாது –ன்னு நெனக்கற ஆளு மும்தாஜ்’ என்றதும் பார்வையாளர்களிடமிருந்தும் கைத்தட்டல்கள் கிடைத்தன. “அப்படி நேர்மையா பதில் சொல்லுங்க” என்றார் கமல். ஆபத்தில்லாத போட்டியாளராக மஹத் குறிப்பிட்டது ‘பாலாஜியை’.

**

வில்லங்கமான இந்த கேள்வி நேரம் முடிந்ததும் சபை விசாரணையை துவங்கினார் கமல். நீலம் மற்றும் மஞ்சள் அணியை தனித்தனியாக உட்காரச் சொன்னார். நடுவில் நடுவர் ஷாரிக்.

நடுவராக ஷாரிக் செயல்பட்டதைப் பற்றி சக போட்டியாளர்களிடம் விசாரித்தார் கமல். ‘முதல் வாரங்களில் அவர் மந்தமாக இருந்தார். ஆனால் நடுவர் பொறுப்பு தரப்பட்டவுடன் புத்துணர்ச்சியுடன் இயங்கினார். நடுவர் பொறுப்பிலும் கூட முதலில் குழப்பமாக இருந்தார். ஆனால் பிறகு தெளிவுடன் செயல்பட்டார்’ என்பதே பலரின் அபிப்ராயங்களாக இருந்தது. இதிலிருந்து மாறுபட்டவர் வைஷ்ணவி. ‘நடுவர் பொறுப்பை அவர் சரியாக புரிந்து கொள்ளவில்லை. ஆணவமா செயல்பட்டது போல் தோன்றியது” என்றார் வைஷ்ணவி.

இதையேதான் வேறு வார்த்தைகளில் வழிமொழிந்தார் மும்தாஜ். ‘முதல்ல அவர் நியாயமா செயல்படவில்லை. மத்தவங்க செல்வாக்கின் பாதிப்பு இருந்தது. குறிப்பா மஹத். தரப்பட்ட பதவியை அவர் நியாயமாக பயன்படுத்தவில்லை. சர்வாதிகாரத்தனத்துடன் செயல்பட்டார்’ என்பது போன்ற புகார்களை முன்வைத்தார் மும்தாஜ். ஆனா ‘பிக்பாஸூக்கு வேற மாதிரி தோணியிருக்கே’ என்ற புள்ளியை வைத்தார் கமல்.

பிக்பாஸ் வீட்டில் கடுமையான... ஜெயிக்கக்கூடாத... டம்மி போட்டியாளர்கள்... யார்? #BiggBossTamil2

“எதிர் டீமுக்கு ஃபேவர் ஆக இருந்தார்’ என்ற மும்தாஜின் புகாரை மறுத்தார் மஹத். “அவங்க நடுவரின் முடிவை மதிக்கவேயில்லை. ரொம்ப ஆவணமா நடந்துக்கிட்டார்” மும்தாஜ் மீது சொன்ன புகார்களை மறுத்தார் ஷாரிக். 

“அவங்களால தோல்வியை ஏத்துக்க முடியலை’ என்கிற மஹத்தின் காரணத்தை மறுத்த மும்தாஜ் “என்னால உடம்பு முடியலைன்னாலும் நடக்கச் சொல்லி தண்டனை கொடுத்தாங்க. ஒரு கால் முன்னாடி வெச்சு நடக்கச் சொன்னாங்க’ என்றதும் ‘நடக்கறதுன்னா  அதுதானே?” என்று கமல் கிண்டலடிக்க, பார்வையாளர்களின் கைத்தட்டல்களால் மும்தாஜின் முகத்தில் அதிருப்தி வெளிப்படையாகத் தெரிந்தது. 

‘சரி.. உங்க டீம் கிட்ட அதிகம் பேசிட்டேன். ப்ளூ டீம் கிட்ட போவோம்’ என்ற கமல், ஷாரிக் பற்றி சென்றாயனிடம் விசாரிக்க ‘முன்னாடி ப்ளே பாய்.. இப்ப சிங்கம்’ என்ற சென்றாயன் “நாங்க ஜெயிச்சப்ப சரியா தீர்ப்பு கொடுத்தாரு.. தோத்தப்ப..அநியாயமா தீர்ப்பு தந்தாரு” என்று  தன் வழக்கமான பாணியில் உளறிக் கொட்டினார் சென்றாயன். ‘நடந்த’ பிரச்னை பற்றி விவரிக்கும் போது மும்தாஜூக்கும் சென்றாயனுக்கும் முட்டிக் கொண்டது. நடிகைகளின் ‘catwalk’ பற்றி விவரித்து செய்து காட்டினார் கமல். ‘பாதிலயே போயிட்டாங்க’ என்று சென்றாயன் தவறாக சொன்னதை அழுத்தமாக திருத்தினார் மும்தாஜ். சென்றாயனின் உரையாடலால் மும்தாஜ் அடைந்த எரிச்சல் வெளிப்படையாகத் தெரிந்தது. 

சந்தடி சாக்கில் பாத்ரூம் பிரச்னைக்கு உரையாடலை நகர்த்தினார் கமல். ‘கொஞ்சம் யோசிச்சி பாருங்க.. அவங்க நடந்து முடிச்சாதான் நீங்க பாத்ரூம் போகணும்னு ஆகியிருந்தா எப்படி இருந்திருக்கும்?” என்று ஆரம்பிக்க சிரிப்பொலிகள் பறந்தன. ‘எனக்கு பிடிச்ச விஷயம் என்னன்னா.. உங்களுக்குள்ள பெரிய காழ்ப்பு இருக்கறதா தெரியலை. இல்லைன்னா.. உங்க உடம்பு பிரச்னை மாதிரிதான் எனக்கும் என் உடம்பு பத்தி தெரியும்..டெய்லி செய்ற வேலையை செய்ய விடாம பாட வெச்சீங்களே’ன்னு நீங்க கேட்கலை’ என்று சென்றாயனிடம் கேட்பது போல மும்தாஸை நைசாக குத்தினார் கமல். “அதான் அவங்க கேட்கறாங்க.. நியாயத்திற்காக போராடற வீராங்கனை’ என்றதும் மெல்லிய அவமானச் சிரிப்பை உதிர்த்தார் மும்தாஜ்.

பிக்பாஸ் வீட்டில் கடுமையான... ஜெயிக்கக்கூடாத... டம்மி போட்டியாளர்கள்... யார்? #BiggBossTamil2

‘இது ஹாரஸ்மென்ட்தானே” என்று மும்தாஜை கமல் விசாரிக்க.. ‘இது ஈஸி டாஸ்க்தான்… நான் கத்துக்குடுத்த பாட்டுதான்.. ஊக்குவிக்கத்தான் கொடுத்தேன்’ என்று மும்தாஜ் மழுப்ப.. ‘இல்ல. ஆடு மேய்க்கற பையனுக்கு இம்பூட்டு அறிவா.. எப்படி ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கினான்னு இவங்களுக்கு கோபம் சார்.. என்று மற்றவர்கள் போட்டுக் கொடுக்க அதை அவசரமாக மறுத்தார் மும்தாஜ். 

‘மும்தாஜ் மேடம் பாட்டு சொல்றது சரி. ஆனா பாத்ரூம் வாசல்ல வெச்சிதான் அதைச் செய்யணுமா?” என்று சத்தமாக கேட்ட சென்றாயனை எதிர்கொள்ள விருப்பமில்லாமல் எரிச்சலுடன் காதை மூடிக் கொண்டார். மும்தாஜ். (இதே காரியத்தை ஜனனி முன்பு செய்த போது மும்தாஜ் கோபப்பட்டது நினைவுக்கு வருகிறது). ‘நான் நினைச்சதை இவங்க தப்பா புரிஞ்சக்கறாங்க’ என்கிற மும்தாஜின் தற்காப்பு எடுபடவில்லை.

மும்தாஜின் ‘என் டீ என் உரிமை’ பிரச்னையும் பஞ்சாயத்திற்கு வந்தது. ‘ரெண்டு நாட்களுக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியாதா?” என்று ஷாரிக் சொன்னதை கமலும் வழிமொழிந்தார். ‘யாராவது எனக்கு டீ போட்டுக் கொடுத்தா சந்தோஷமா குடிப்பேனே.. இதில் என்ன பிரச்னை? இது பிடிவாதமா”. என்ற வாதத்தை கமல் துவங்கி வைத்தார்.

“டீக்கடைல போய் நாம குடிக்கலையா.. இவங்க பண்றது ஓவர்’ என்று மஹத்தும் இதில் இணைந்து கொள்ள “சார்.. அதுக்காக சண்டை போடலை.. ‘சரி.. அலவ் பண்ண மாட்டீங்களா.. சரி-ன்னு நான் அமைதியா போயிட்டேன். அது எப்படி பிடிவாதமாகும்?’ என்று மும்தாஜ் விளக்கமளிக்க.. ‘இவங்க சாப்பிடாம இருக்கறது சரியா..” என்ற கேள்வி வந்தது. “ஒரு குழந்தை சாப்பிடாம போய் உக்காந்துட்டா.. ‘அடம் பிடிக்காம சாப்பிடு’ன்னுதானே சொல்லுவோம். அடம்னா பிடிவாதம்தானே?” என்று சாமர்த்தியமான வாதத்தை கமல் முன்வைத்தவுடன் பார்வையாளர்களின் கைத்தட்டல்கள் வந்தன. மும்தாஜின் முகம் மாறியது. 

“என் கிட்டயும் பாலாஜி கிட்டயும் ஸாப்டா இருக்காங்க.. ஆனா மஹத் கிட்ட கோபப்படறாங்க. இது ஆளுக்கு ஆள் வித்தியாசப்படுது’ என்று ரித்விகா மும்தாஜைப் பற்றிய தன் அபிப்ராயத்தைச் சொல்ல, ‘டாஸ்க் பத்தி என் கிட்ட டிஸ்கஸ் பண்ணவே மாட்டாங்க” என்றார் மஹத். ஆனால் மும்தாஜின் விசுவாசியாக மாறியிருக்கிற பாலாஜி இதை மறுத்தார். ‘அவங்க மஹத்தை பையன் மாதிரி ட்ரீட் பண்ணுவாங்க. இவன்தான் போய் கேட்க மாட்டான்’ என்று மஹத்தை போட்டுக் கொடுத்தார். 

பிக்பாஸ் வீட்டில் கடுமையான... ஜெயிக்கக்கூடாத... டம்மி போட்டியாளர்கள்... யார்? #BiggBossTamil2

மும்தாஜின் இப்போதைய பிரதான எதிரியான ஜனனி களத்திற்கு வந்தார். “நான் அவங்களை திட்டமிட்டே கார்னர் பண்றோம்னு நெனச்சிட்டாங்க.. அப்படியில்லை. ஒருத்தரை சமைக்க விட்டா.. எல்லோருக்குமே தரணும். அதனாலதான் மறுத்தோம்” என்று விளக்கமளிக்க.. ‘ஆம்.. நான் பிடிவாதத்தோட இருந்தேன்” என்று இறங்கி வந்த மும்தாஜ்.. ‘அதுக்காக நான் சண்டை போடலை. அமைதியா திரும்பி வந்துட்டேன்’ என்று பழைய புராணத்தையே மறுபடி வாசித்தார். 

‘இங்க பனிப்போர் நடக்கிறதா?” என்று விசாரித்தார் கமல். (இதே வார்த்தையை குறிப்பிட்டு நானும் முன்பு எழுதியிருந்தேன்). “ஆமாம் சார். மும்தாஜிற்கும் – ஜனனிக்கும் இடையில்” என்று போட்டு உடைத்தார் பாலாஜி. “அவங்க தாய்ப்பாசத்திற்கும் கெத்திற்கும் இடையில் தவிக்கிறார்’ என்ற பொன்னம்பலம்.. “ஷாரிக்… உஷ் என்று அடக்கியதால்தான் கோபப்பட்டார்’ என்று சொன்ன விளக்கத்தை “ஆம்.. சரிதான்’ என்கிற பாவனையுடன் மும்தாஜூம் ஏற்றுக் கொண்டார். ‘பிளைட்ல டீ போட முடியுமா?” என்று பொன்னம்பலம் கேட்டவுடன் ‘அது எந்த கிளாஸ்ல போறோம்-ன்றதைப் பொறுத்து இருக்கு. ‘டீ மட்டுமில்ல.. ‘பெரிசே’ கிடைக்கும்’ என்று சூசகமாக கமல் குறிப்பிட, புரிந்து கொண்ட போட்டியாளர்கள் சிரித்து மகிழ்ந்தார்கள்.

“என் கிட்ட வந்து அன்பா கேட்டிருந்தாங்கன்னா.. நான் ஒத்துக்கிட்டு இருந்திருப்பேன். அவங்க டோன் சரியா இல்லை. அதான் விட்டுக்கொடுக்கலை’ என்று ஜனனி சொன்னவுடன் ‘அப்ப இதுவும் பிடிவாதம்தானே’ என்று கமல் மடக்கினார். ‘யார் எப்படி பேசறாங்களோ.. அப்படித்தான் நானும் பேசுவேன்’ என்று விளக்கமளித்தார் மும்தாஜ். ‘ஒரு பெண்மணியா எனக்கு மதிப்பு தரணும்” என்று அவர் சொன்னதும்.. ‘சார். நாங்க சாப்பிடத்தானே சொன்னோம்’ என்று மற்றவர்கள் ஆதங்கப்பட்டனர். 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

 • Bigg Boss Tamil Calendar
 • Mon
 • Tue
 • Wed
 • Thu
 • Fri
 • Sat
 • Sun

‘அவங்க சாமி கும்பிடும் போது அமைதியா.. அழகா கும்பிடறாங்க. அதைப் போலவே பேசினா நல்லாயிருக்கும்’ என்று பொன்னம்பலம் ஆரம்பிக்க.. எங்கே மதக்கலவரத்தை துவக்கி வைத்து விடுவாரோ என்று கலவரமாக இருந்தது. ‘அது வேற பிரச்னை. சாமி கிட்ட நம்ம பேசறது பிரச்னையில்ல. சாமி நம்ம கிட்ட பேசினா பிரச்னை. பக்திக்கும் பைத்தியத்திற்கும் உள்ள வித்தியாசம் இது” என்று தன் பகுத்தறிவு குறும்பை வெளிப்படுத்தினார் கமல். ‘கடவுள் கிட்ட பேசற மாதிரி எல்லார் கிட்டயும் பேசினா பிரச்னையே வராது” என்று கமல் சொன்னது சரியானது. ‘நாளை மேம்படும்’ என்கிற நம்பிக்கையுடன் விடைபெற்றார் கமல்.

இந்தப் பஞ்சாயத்து நாளைக்காவது ‘வெண்டைக்காய்த்தனமாக’ அல்லாமல் அழுத்தம் திருத்தமாக நடைபெறுமா என்பதை காத்திருந்து பார்ப்போம்.